என் மலர்
உள்ளூர் செய்திகள்

என்.எம்.எம்.எஸ். தேர்வை 11,407 பேர் எழுதினர்
- சேலம் மாவட்டத்தில் (என்எம்எம்எஸ்) இத்தேர்வினை எழுத 11,602 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
- இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 42 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
சேலம்:
நாடு முழுவதும் அரசு மற்றும் அரசுஉதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (என்எம்எம்எஸ்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி நடத்தப்படும் தேர்வில், தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதத்திற்கு ரூ.1000 வீதம், 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி நடப்பாண்டிற்கான தேர்வு நேற்று நடந்தது.
சேலம் மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத 11,602 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 42 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. காலை 9.30 மணி முதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும், 11.30 முதல் 1 மணி வரை படிப்பறிவுத் திறன் தேர்வும் நடந்தது. நேற்றைய தேர்வில் 11,407 பேர் கலந்து கொண்டு தேர்வெழுதினர். விண்ணப்பித்திருந்த 195 மாணவர்கள், தேர்வெழுத வரவில்லை. இத்தேர்வுக்கான பணிகளில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.