search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "climbing"

    • மரத்தில் ஏறிய வாலிபர் தவறி விழுந்து இறந்தார.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை முத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மருதுபாண்டி (32). இவர் முத்துப்பட்டி யோக விநாயகர் கோவில் பின்புறம் உள்ள பனை மரத்தில் ஏறினார். அப்போது கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலமாக அடிபட்டது. அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி சுமதி சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2018-ம் ஆண்டு தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேறும் இளைஞர்கள் காட்டுத்தீயில் சிக்கினர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த பயங்கர தீ விபத்து உயிரிழப்பால் கோடை காலத்தில் மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி கிடையாது என்ற முடிவுக்கு வனத்துறை வந்துள்ளது.
    • சேலம் மாவட்டத்தில் ஏற்காடு மலை, மேட்டூர் பச்சமலை, ஆத்தூர் கல்வராயன்மலை, கொல்லிமலை ஆகிய இடங்களில் மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

    ஏற்காடு:

    தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மேட்டூர் பச்சமலை, தேனி குரங்கணி, ஆத்தூர் கல்வராயன்மலை, களக்காடு முண்டன்துறை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மலையேற்ற பயிற்சிக்கான பாதைகள் (டிரக்கிங்) உள்ளன. ஆங்காங்கே மலையேற்ற பயிற்சிக்கு என தனிக்குழுக்களும் இயங்கி வருகிறது.

    இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் வனச்சரகர் மற்றும் மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி பெறுகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேறும் இளைஞர்கள் காட்டுத்தீயில் சிக்கினர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த பயங்கர தீ விபத்து உயிரிழப்பால் கோடை காலத்தில் மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி கிடையாது என்ற முடிவுக்கு வனத்துறை வந்துள்ளது.

    தற்போது மாநிலம் முழுவதும் கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே மலைப்பகுதிகளில் காட்டு தீ பற்றி எரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்காடு வனப்பகுதியில் உள்ள குண்டூர் காட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பல லட்சம் மதிப்பிலான மரங்கள், மூலிகை தாவரங்கள் தீக்கிரையாகின.

    இதனால் மலை பாதைகளில் மலையேற்ற பயிற்சி மேற்கொள்ள தடைவிதித்து வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் ஏற்காடு மலை, மேட்டூர் பச்சமலை, ஆத்தூர் கல்வராயன்மலை, கொல்லிமலை ஆகிய இடங்களில் மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்த பகுதிகளில் இருந்து மலையேற்றத்திற்கு தடை விதிப்பதாக வன அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் கோடை காலம் முடியும் வரை மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற சுதந்திரதேவி சிலை மேல் ஏறிய பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். #LibertyStatue
    நியூயார்க்:

    அமெரிக்காவில் லிபர்டி தீவில் உள்ளது, சுதந்திர தேவி சிலை. பிரசித்தி பெற்ற இந்த சிலை, 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு பிரான்ஸ் நாட்டால் வழங்கப்பட்டதாகும். தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த சிலையை காண்பதற்காக செல்வது வழக்கமான ஒன்று.



    இந்த நிலையில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மாலை 3.30 மணியளவில் ஒரு பெண் அந்த சிலை பீடத்தின் மீது திடீரென ஏறத் தொடங்கினார்.

    போலீசார் அந்தப் பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்கி வரச்செய்து காவலில் வைத்து விசாரித்தனர்.

    இதில் அந்தப் பெண்ணின் பெயர் தெரேஸ் பேட்ரிசியா ஒகூமு (வயது 44) எனவும், அமெரிக்க எல்லையில் சட்ட விரோதமாக நுழைகிற தம்பதியரையும், அவர்களது குழந்தைகளையும் டிரம்ப் நிர்வாகம் பிரித்ததால் மன உளைச்சலில் சிக்கித் தவித்து வந்தவர் எனவும் தெரியவந்து உள்ளது.

    தனது செயலுக்காக அந்தப் பெண், போலீஸ் அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டார். இருப்பினும் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த விவகாரம் குறித்து நியூயார்க் மேயர் பில் டி பிளேசியோவின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “நியூயார்க் அழகான நகரம். இந்த நகர போலீசார், எந்த விஷயத்தையும் சரியாக கையாளுவார்கள்” என்றார். இந்த சம்பவத்தின்போது, அங்கு இருந்த சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இருப்பினும் பலரும் அந்தப் பெண், சுதந்திர தேவி சிலை பீடத்தின் மீது ஏறியதை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட அது ‘வைரல்’ ஆக பரவியது.  #LibertyStatue
    ×