மரத்தில் ஏறிய வாலிபர் தவறி விழுந்து சாவு

மரத்தில் ஏறிய வாலிபர் தவறி விழுந்து இறந்தார. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரத்தில் ஏறிய வாலிபர் தவறி விழுந்து சாவு
Published on

மதுரை

மதுரை முத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மருதுபாண்டி (32). இவர் முத்துப்பட்டி யோக விநாயகர் கோவில் பின்புறம் உள்ள பனை மரத்தில் ஏறினார். அப்போது கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலமாக அடிபட்டது. அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி சுமதி சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com