நகை, பணத்தை திருடிவிட்டு தூங்கிய பெண்ணிடம் சில்மிஷம் செய்த தொழிலாளி

தாலைவாசல் அருகே உள்ள வரகூரை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர், வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை திருடினார். மேலும் அங்கு தனியாக தூங்கிக் கொண்டிருந்த அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
நகை, பணத்தை திருடிவிட்டு தூங்கிய பெண்ணிடம் சில்மிஷம் செய்த தொழிலாளி
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் தாலைவாசல் அருகே உள்ள வரகூரை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர், வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை திருடினார். மேலும் அங்கு தனியாக தூங்கிக் கொண்டிருந்த அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து மர்ம நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து, கயிற்றில் கட்டி வைத்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் தலைவாசல் போலீசார், அங்கு வந்து மர்ம நபரை மீட்டு விசாரணை நடத்தியதில், அவர் சிறுவாச்சூரை சேர்ந்த முத்துக்கண்ணன (வயது 57) என தெரியவந்தது. இதேபோல் வேறு எங்கெல்லாம் திருடி உள்ளார் ? என அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com