என் மலர்
சேலம்
- சார்பதிவாளர் அலுவலகத்தில் ரவி 25 சென்ட் நிலம், 10 சென்ட் நிலம் தனித்தனியாக பத்திரம் முடித்து கொடுத்தார்.
- சசிகுமார் 20 ரூபாய் வெற்று பத்திரத்தில் கையெழுத்து பெற்றுக்கொண்டார்
சேலம்:
சேலம் மாவட்டம் ஜல கண்டாபுரம் அருகே உள்ள பச்சைகுப்பனூர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் மோட்டார் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் ரவி தனது தொழிலை பேம்படுத்த கடன் வாங்க திட்டமிட்டார். இதற்காக ஜலகண்டா புரத்தை சேர்ந்த கண்ணன் என்ற புரோக்கரி டம் தனது நிலத்தின் பத்திரத்தை கொடுத்தார்.
இதனிடையே சேலம் கன்னங்குறிச்சி ஏரிக்காடு பதுகியை சேர்ந்த சசிக்குமார் என்பவர் ரவியின் செல்போனில் தொடர்பு கொண்டு தான் ரூ.40 லட்சம் கடன் தருவதாகவும், அதற்கு தனது பெயரில் நிலத்தை கிரயம் செய்து கொடுக்கவேண்டும் என்றும் கூறினார்.
இதை தொடர்ந்து ஜல கண்டாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரவி 25 சென்ட் நிலம், 10 சென்ட் நிலம் தனித்தனியாக பத்திரம் முடித்து கொடுத்தார். இதையடுத்து சசிகுமார் 20 ரூபாய் வெற்று பத்திரத்தில் கையெழுத்து பெற்றுக்கொண்டார்,
பின்னர் ரவியின் வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் மட்டும் செலுத்தி யுள்ளார். மீதி பணம் குறித்து ரவி கேட்ட போது இப்போது மாலை நேரம் என்பதால் வங்கியில் பணம் எடுக்க வில்லை நாளைக்கு என் வீட்டுக்கு வாங்க தருகிறேன் என்று கூறியுள்ளார்.
மறு நாள் ரவி சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள சசிகுமார் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவர் அங்கு இல்லை. உடனே அவரை செல்போனில் தொடர்பு கொண்டார். அதற்கு அவர் கோரிமேடு பகுதியில் உள்ள ஒரு டீ கடைக்கு வருமாறு கூறியுள்ளார்.இதையடுத்து அங்கு சென்ற ரவியும் அவரது மகன் முகுந்தனும், சசி குமாரை சந்தித்து பணம் கேட்டனர். இந்த வேளையில் சசிகுமாரின் நண்பர்கள் சிலர் அங்கு வந்து பணம் தரமுடியாது, பணம் கேட்டு வந்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி னர்.
இது குறித்து ரவி ஜல கண்டபுரம் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் போலீசார் இதுபற்றி விசாரித்து நில மோசடியில் ஈடுபட்ட சசி குமாரை கைது செய்தனர். பின்பு அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறை யில் அடைத்தனர்.
இதனி டையே சசிகுமாருடன் சேர்ந்து ரவியை மிரட்டிய கும்பலை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
- 1,23,022 பயனாளிகள் நில ஆவணம் இணைப்பு செய்துள்ளனர்.
- 14-வது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் விவரங்களை சரி பார்ப்பு செய்வது
சேலம்:பி.எம்.கிசான் திட்டத்தின், ஏழை, எளிய விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத்தொகையாக மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தொகை விவசாயி களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருவதால், பணம் முழுவதும் விவசாயி களுக்கு அப்படியே கிடைக்கிறது. வங்கி கணக்கி ல் நேரடியாக வரவு வைக்கப்படுவதால் யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. இதனால் இந்த திட்டம் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் சுமார் 2 லட்சம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இதுவரை விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் சேர்ந்த தேதியினை பொருத்து விவசாயிகளுக்கு 13 தவணை வரை தொகைகள் வரப்பெற்றுள்ளது.
தற்போது விவசாயிகள் 14-வது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் விவரங்களை சரி பார்ப்பு செய்வது அவசியமாகும்.
மாவட்டத்தில் 1,23,022 பயனாளிகள் நில ஆவணம் இணைப்பு செய்துள்ளனர். இதில் 1,10,414 பயனாளிகள் மட்டுமே வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைத் துள்ளனர்.
98 ஆயிரத்து 523 பயனாளிகள் மட்டுமே நில ஆவணம் இணைப்பு, இ-கே.ஒய்.சி மற்றும் ஆதார் எண் இணைப்பு ஆகிய பணிகளை முடித் துள்ளனர். வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை 10 ஆயிரத்து 673 விவசாயிகள் இணைக்கவில்லை.
இது தொடர்பாக சேலம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிங்காரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், தங்களது 14-வது தவணை தொகையை பெறுவதற்கு வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தல், நில ஆவணங்கள் இணைத்தல் போன்ற பணிகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும். வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாத விவசாயிகள், தபால் நிலையத்தில் கணக்கு தொடங்கி பயன் பெறலாம்.
10,673 வங்கி கணக்–கு–கள்
சேலம் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 673 விவசாயிகள் ஆதார் எண்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்படாமல் உள்ளது. 1, 302 விவசாயிகள் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை இணைக்காமல் உள்ளனர். வருகிற 15-ந்தேதிக்குள் (சனிக்கிழமை) அனைத்து பணிகளையும் முடித்தால் மட்டுமே கிசான் திட்ட நிதி தொடர்ந்து விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- மூத்த குடிமக்களுக்கான தேசிய செயல் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு, அடல் வயோ அபியுதய் யோஜனா என்று பெயரிடப்பட்டு 2021-ம் ஆண்டு ஏப்ரலில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது.
- ஆதரவு ஆகியவற்றுக் காகவும் கட்டணமில்லா தொலைபேசி எண் 14567 தொடங்கப்பட்டுள்ளது.
சேலம்:
இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகார மளித்தல் அமைச்சகம் சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்காக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், மூத்த குடிமக்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ளவர்களின் நலனை நோக்கமாகக் கொண்ட பல திட்டங்களை இந்த அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இதில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட அடல் வயோ அபியுதய் யோஜனா (ஏவிஒய்ஏஒய்) என்ற திட்டம் இந்தியாவில் மூத்த குடிமக்களின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான முன்முயற்சியாகும்.
நிதி உதவி
மூத்த குடிமக்களுக்கான தேசிய செயல் திட்டம் (என்ஏபிஎஸ்ஆர்சி) மாற்றி அமைக்கப்பட்டு, அடல் வயோ அபியுதய் யோஜனா (ஏவிஏஒய்) என்று பெயரிடப்பட்டு 2021-ம் ஆண்டு ஏப்ரலில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது. அடல் வயோ அபியுதய் யோஜனா (ஏவிஒய்ஏஒய்) என்ற மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டம், மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு இல்லங்களை நடத்துவதற்கு தகுதியான நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கிறது.
சேலம், நாமக்கல் மாவட்டம்
தற்போது இந்த திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் 552 மூத்த குடிமக்கள் இல்லங்கள், 14 தொடர் பராமரிப்பு இல்லங்கள், 19 நடமாடும் மருத்துவப் பிரிவுகள் மற்றும் 5 பிசியோதெரபி கிளினிக்குகள் பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சுமார் 1.5 லட்சம் பயனாளிகள் இந்த முதியோர் இல்லங்களில் தங்கியுள்ளனர்.நாடு முழுவதும் 361 மாவட்டங்களில் இவை உள்ளன. அதில் சேலம், நாமக்கல் மாவட்டத்திலும் முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 3 நிதியாண்டுகளில் மொத்தம் ரூ.288.08 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு வகைகளில் பயன் அடைந்த மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை 3,63,570 ஆகும்.
ஏவிஒய்ஏஒய் திட்டத்தின் கீழ் உள்ள மற்றொரு அம்சம் ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா (ஆர்விஒய்) ஆகும். வயது தொடர்பான ஏதேனும் இயலாமை அல்லது பலவீனத்தால் பாதிக்கப்பட்ட தகுதிவாய்ந்த மூத்த குடிமக்களுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறைந்த பார்வை, செவித்திறன் குறைபாடு, பற்கள் இழப்பு போன்றவற்றை சமாளிக்க உதவும் வகையில் சாதனங்கள் இத்திட்டத்தில் வழங்கப் படுகிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள' பிரிவைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
ராஷ்ட்ரீய வயோஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 269 முகாம்கள் நடத்தப்பட்டு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ், கடந்த 3 நிதியாண்டுகளில் மொத்தம் ரூ. 140.34 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 130 முகாம்களின் மூலம் 1,57,514 பயனாளிகளுக்கு மொத்தம் 8.48,841 உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மூத்த குடிமக்களுக்காக எல்டர்லைன் என்ற தேசிய உதவி எண் உள்ளது. மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவ தற்காகவும், இலவச தகவல், வழிகாட்டுதல், ஆதரவு ஆகியவற்றுக் காகவும் கட்டணமில்லா தொலைபேசி எண் 14567 தொடங்கப்பட்டுள்ளது. 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்பாட்டில் உள்ள எல்டர்லைன் உதவி எண், வாரத்தின் 7 நாட்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுகிறது.
இந்த தகவலை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- பழங்குடியின குழந்தைகளுக்கான மத்திய அரசின் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- ஆய்வக உதவியாளர் 373. என மொத்தம் 4062 இடங்கள் உள்ளன.
சேலம்:
பழங்குடியின குழந்தைகளுக்கான மத்திய அரசின் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளி முதல்வர் 303, முதுநிலை ஆசிரியர் 2266, அக்கவுண்டன்ட் 361, ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 759, ஆய்வக உதவியாளர் 373. என மொத்தம் 4062 இடங்கள் உள்ளன.
முதல்வர் பதவிக்கு விண்ணப்பம் செய்வோர் மாஸ்டர் டிகிரியுடன் பிஎட் முடித்திருக்க வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர் விண்ணப்பிப்போர் ஆங்கிலம், இந்தி, இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, ஜியாகிராமபி, காமர்ஸ், பைனான்சியல் அக்கவுண்டிங், காஸ்ட் அக்கவுண்டிங், எக்கனாமிக், மொழிப்பாடங்கள் உள்பட பிற பாடங்களில் முதுகலை படிப்புடன் பிஎட் படித்தவர்களும், எம்எஸ்சி, எம்சிஏ, எம்இ, எம்டெக் படித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். அக்கவுண்டிங் பணிக்கு பிகாம் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
ஜூனியர் செயலக உதவியாளர் பணிக்கு 12ம்வகுப்பு முடித்திருப்பதோடு, ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் டைப் செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும். லேப் அட்டென்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்புடன் டிப்ளமோ லேபோரேட்டரி டெக்னீக் படிப்பு அல்லது சயின்ஸ் பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
- சேலம் சித்தர் கோவில் மெயின் ரோடு அம்மன் நகர் பகுதியில் சிவதாபுரம் மின்சார வாரிய அலுவலகம் செயல்பட்டு வந்தது.
- எனவே இனி சிவதாபுரம், நெத்திமேடு மின்சார வாரிய அலுவலகங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு மேற்கண்ட சொந்த கட்டிடத்தில் செயல்படும்.
சேலம்:
சேலம் சித்தர் கோவில் மெயின் ரோடு அம்மன் நகர் பகுதியில் சிவதாபுரம் மின்சார வாரிய அலுவலகம் செயல்பட்டு வந்தது. அதேபோன்று புத்தூர் இட்டேரி ரோடு, கொடம்பைகாடு பகுதியில் நெத்திமேடு புறநகர் பிரிவு அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த 2 அலுவலகமும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தன.
இந்த நிலையில் கந்தம்பட்டி சித்தர் கோவில் மெயின்ரோடு, கிருஷ்ணப்பா தியேட்டர் பஸ் நிறுத்தம் எதிரில் புதிதாக சொந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. எனவே இனி சிவதாபுரம், நெத்திமேடு மின்சார வாரிய அலுவலகங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு மேற்கண்ட சொந்த கட்டிடத்தில் செயல்படும். இந்த தகவலை சேலம் மேற்கு கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்து உள்ளார்.
- தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் மூலம் ‘பாரம்பரிய நெல் விதை வங்கி’ பராமரிப்பு விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தினை 2023- 2024 -ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
- திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ‘அக்ரிஸ்நெட்’ வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக் டர் கார்மேகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் மூலம் 'பாரம்பரிய நெல் விதை வங்கி' பராமரிப்பு விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தினை 2023- 2024 -ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி பாரம்பரிய நெல் விதை வங்கி திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் 'அக்ரிஸ்நெட்' வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்கும் விவசாயிகள் குறைந்தபட்சம் 100 பாரம்பரிய நெல் ரகங்களை நெல் வங்கியில் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பரா மரித்து வரும் நெல் ரகங் களை மறு உற்பத்தி செய்து இனத் தூய்மையுடன் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் மரபுசார் நெல் ரகங்களை உற்பத்தி செய்து பராமரிக்க வேண்டும். விதை வங்கியில் பராமரிக்கப்படும் பாரம் பரிய நெல் ரகங்கள் நல்ல முளைப்புத் திறனுடன் இருப்பதனை தொடர்ந்து உறுதி செய்திட வேண்டும். வயல்களில் உரிய அளவு சாகுபடி செய்திடல் வேண்டும். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், இளை ஞர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிடும் வகையில் முறையாக காட்சிப்படுத்த வேண்டும்.
'பாரம்பரிய நெல் விதை வங்கி' பராமரிக்கும் விவ சாயிகள் ஊக்கத்தொகை பெறுவதற்கு 'அக்ரிஸ்நெட்' வலைதளம் அல்லது உழ வன் செயலியில் விண்ணப் பிக்க தேவையான விண் ணப்பப் படிவங்களை படி வங்களை தங்கள் வட்டா ரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவல கத்தைத் தொடர்பு கொள்ள லாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்க தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆனாலும் சிலர் தடையை மீறி வெளி மாநில லாட்டரிகள் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளை விற்று பணம் சம்பாதித்து வருகிறார்கள்.
- இந்திய ஜனநாயக வாலி பர் சங்க மாவட்ட செயலாள ராக பெரியசாமி என்பவர் உள்ளார். இன்று காலை இவர் தாதகாப்பட்டி கேட் அருகே சென்றபோது மர்ம நபர்கள் சிலர் தாக்கினர்.
சேலம்:
சேலத்தில் லாட்டரி விற்பனை கும்பலால் ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தாக்கப்பட்டார்.
லாட்டரி விற்பனை
தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்க தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆனாலும் சிலர் தடையை மீறி வெளி மாநில லாட்டரிகள் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளை விற்று பணம் சம்பாதித்து வருகிறார்கள். இது தொடர்பாக காவல்துறைக்கு புகார்கள் சென்றவண்ணம் உள்ளன. எனினும் லாட்டரி விற்பனை தொடர்ந்து வருகிறது.
சரமாரி தாக்குதல்
இந்திய ஜனநாயக வாலி பர் சங்க மாவட்ட செயலாள ராக பெரியசாமி என்பவர் உள்ளார். இன்று காலை இவர் தாதகாப்பட்டி கேட் அருகே சென்றபோது மர்ம நபர்கள் சிலர் தாக்கினர். மேலும் அவரது கனரக வாக னத்தின் கண்ணாடி யையும் உடைத்தனர். இந்த தாக்கு தலில் படுகாயம் அடைந்த அவர், ரத்தம் சொட்ட சொட்ட சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்கு வந்தார். இதுபற்றி தகவல் கிடைத்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக பெரிய சாமி அடிக்கடி போலீசில் புகார் அளித்து வந்துள்ளார். இத னால் ஏற்பட்ட ஆத்தி ரத்தில் லாட்டரி சீட்டு விற்ப னையாளர்கள் அடியாட்களை அனுப்பி அவரை அடித்தது டன் வாகனத்தை அடித்து நொறுக்கியது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
மறியல்
இது தொடர்பாக அன்ன தானப்பட்டி பகுதியைச் சேர்ந்த லாட்டரி வியாபாரி ஒருவர் குறித்து புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள். காயம் அடைந்த பெரி யசாமி சேலம் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அறிந்த இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் அங்கு அதிக அளவில் திரண்ட னர். திடீரென அவர்கள் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இத னால் அங்கு பர பரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட வர்களை கலந்து செல்லுமாறு கூறினர்.
3 பேர் சிக்கினர்
ஆனாலும் அவர்கள் சாலை யில் அமர்ந்தவாறு கோஷம் எழுப்பினர். இதை தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரி கள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பெரியசாமியை தாக்கிய வர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கலைந்து சென்றனர்.இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யது. இதனிடையே பெரியசாமி தாக்கப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீசார் மடக்கி பிடித்த னர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விவசாயிகள் சங்கம் சார்பில் ஜலகண் டாபுரம் பேருந்து நிலையத்தில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.
- போராட்டத்திற்கு சங்க மாவட்ட துணை தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார்.
நங்கவள்ளி:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஜலகண்டாபுரம் பேருந்து நிலை யத்தில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க மாவட்ட துணை தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார்.
இதில் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 140 கொள்முதல் செய்ய வேண்டும், அனைத்து தென்னை மரங்களுக்கும் பயிர் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும், சேலம் மாவட் டத்தில் நிபந்தனை இன்றி விவசாயிகளிட மிருந்து தேங்காய் கொப்பரையை அரசு கொள்முதல் செய்ய வேண்டும், தேங்காய் எண்ணெய்க்கு ஜி.எஸ்.டி, வரியை ரத்து செய்ய வேண்டு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட் டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- பாஸ்கர் (வயது 40). இவர் மீது சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் வழிப்பறி உள்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- இவரை போலீசார் தேடி வந்தனர். கோர்ட்டிலும் அவர் ஆஜர் ஆகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
சேலம்:
அரியலூர் மாவட்டம் அந்தோணியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40). இவர் மீது சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் வழிப்பறி உள்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவரை போலீசார் தேடி வந்தனர். கோர்ட்டிலும் அவர் ஆஜர் ஆகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப் பட்டது. இதனால் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சேலம் டவுன் ரெயில்வே போலீ சாரிடம் நேற்று இரவு அவர் சிக்கினார். அவரை ரெயில்வே போலீசார் அஸ்தம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், பாஸ்கரை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- ராமர் (வயது 28). இவர் நேற்று இரவு சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்தார்.
- நள்ளிரவில் பஸ் நிலையப் பகுதியில் உள்ள பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திற்குள், ராமர் தனது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காடு செம்மநத்தம் பகுதியை சேர்ந்தவர் ராமர் (வயது 28). இவர் நேற்று இரவு சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்தார்.
பின்னர், நள்ளிரவில் பஸ் நிலையப் பகுதியில் உள்ள பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திற்குள், ராமர் தனது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென் றார் . அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த போலீ சாரிடம் என் மோட்டார் சைக்கிளை பாதுகாக்காமல் உங்களுக்கு என்ன வேலை என்று கேட்டபடி தகராறில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதை அடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி, வாகனத்திற்கான ஆவணங்களை எடுத்து வரு மாறு கூறி அனுப்பி வைத்தனர்.
இதற்கு இடையே கலெக்டர் அலுவலகம் வந்த அவர், பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த அங்கிருந்த போலீசார், ராமரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். பின்னர் அவரை பள்ளப் பட்டி போலீசாரிடம் ஒப்படைத்த னர். அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகி றார்கள். இந்த சம்பவம் நேற்று இரவு சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சி.ஆர்.பி.எப்., எஸ்.எஸ்.எப். மற்றும் ரைபிள்மேன் ஆகியவற்றில் தேர்வு-2022 அறிவிப்பு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
- தேர்வுக்குரிய ஹால்டிக்கெட் வெளியிடப் பட்டுள்ளது.
சேலம்:
மத்திய ஆயுதப்படை சி.ஆர்.பி.எப்., எஸ்.எஸ்.எப். மற்றும் ரைபிள்மேன் ஆகியவற்றில் தேர்வு-2022 அறிவிப்பு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இந்த தேர்வுக்கு சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் விண்ணப்பித்தனர். தகுதி யான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுக்கு தேர்வுக்குரிய ஹால்டிக்கெட் வெளியிடப் பட்டுள்ளது. மின்னணு ஹால்டிக்கெட் எனப்படும் இ-அட்மிட் கார்டை விண்ணப்பதாரர்கள்https://www.crpfonline.com என்ற சி.ஆர்.பி.எப் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த இ-அட்மிட்டின் அச் சிடப்பட்ட நகலை கொண்டு தேர்வு மையத்து கொண்டு மாறு வர வேண்டும். ஹால்டிக்கெட் கொண்டு வராத விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார் கள் என மத்திய அரசு பணி யாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) அறிவுறுத்தி உள்ளது.
- தீவட்டிபட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வேல்பாண்டியன் தலைமை தாங்கினார்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தீவட்டிபட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வேல்பாண்டியன் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் குமார் வரவேற்றார். மாவட்ட செய்தி தொடர்பாளர் அர்ஜுனன் முன்னிலை வகித்தார்.
பொம்மியம்பட்டியில் கடந்த 15 ஆண்டு காலமாக மூடியுள்ள மாரியம்மன் கோவிலை திறக்க கோரியும், ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்தும், எலத்தூர் கிராமத்தில் பட்டா வழங்காமல் கடந்த 20 ஆண்டாக காலம் தாழ்த்தி வருவது கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ஆறுமுகம், மணிக்குமார், வீரமணி, முனுசாமி, மதியழகன், தெய்வானை, வீரம்மாள், ஆராயி, நகர செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






