2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி பரிதாப சாவு

கோவிந்த ராஜ் (வயது 36) கட்டிடத் தொழிலாளியான இவர், சூரமங்கலம் அவ்வை நகர் பகுதியில் புதிதாக கட்டப் பட்டு வரும் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார்.4 மணி அளவில் கோவிந்த ராஜ் பணியில் இருந்த போது 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி பரிதாப சாவு
Published on

சேலம்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள வானதிபட்டி பகு தியைச் சேர்ந்தவர் கோவிந்த ராஜ் (வயது 36) கட்டிடத் தொழிலாளியான இவர், சூரமங்கலம் அவ்வை நகர் பகுதியில் புதிதாக கட்டப் பட்டு வரும் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் கோவிந்த ராஜ் பணியில் இருந்த போது 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந் தார். இதில் அவருக்கு பலத்த படுகாயம் ஏற்ப்பட் டது. இதையடுத்து கோவிந்த ராஜை சக தொழிலாளர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்தில் கோவிந்த ராஜ் பரிதாபமாக உயிரி ழந்தார். இது குறித்து கோவிந்தராஜன் மனைவி சுகன்யா கொடுத்த புகார் பேரில் சூரமங்கலம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள். இறந்து போன கோவிந்தராஜிற்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com