என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 176 கன அடியாக அதிகரிப்பு
- அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
- அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 130 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 142 கன அடியாக அதிகரித்தது. இன்று காலை மேலும் அதிகரித்து விநாடிக்கு 176 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 77.61 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 76.70 அடியாக சரிந்தது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 75.78 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 37.88 டிஎம்சியாக உள்ளது.
Next Story






