என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மான் வேட்டையில் ஈடுபட முயன்ற 6 பேர் கும்பல் கைது- நாட்டு துப்பாக்கி, மோட்டார் சைக்கிள் பறிமுதல்
    X

    மான் வேட்டையில் ஈடுபட முயன்ற 6 பேர் கும்பல் கைது- நாட்டு துப்பாக்கி, மோட்டார் சைக்கிள் பறிமுதல்

    • 2 மோட்டார் சைக்கிளில் தலா 3 பேர் என 6 பேர் கும்பல் நாட்டு துப்பாக்கியுடன் காப்புக்காட்டில் வலம் வந்தனர்.
    • 6 பேரும் ஆத்தூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஆத்தூரில் உள்ள மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் வனச்சரகர் வனத்துறையினர் பனைமடல், மண்ணூர் காப்புக்காடு, இரட்டை குச்சி மலை பகுதியில் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் தலா 3 பேர் என 6 பேர் கும்பல் நாட்டு துப்பாக்கியுடன் காப்புக்காட்டில் வலம் வந்தனர்.

    இதை பார்த்த வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரித்ததில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், சின்னம சமுத்திரத்தை சேர்ந்த சரவணன் (வயது 46), பொன்னுசாமி (62), மணிகண்டன் (32), ஜெகன் (47), சகோதரர்களான மகேந்திரன் (38), தியாகராஜன் (32) ஆகியோர் மான் வேட்டைக்கு சென்றது தெரியவந்தது.

    இதனால் ஆத்தூர் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி, 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 6 பேரும் ஆத்தூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஆத்தூரில் உள்ள மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×