என் மலர்tooltip icon

    சேலம்

    • சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக தனியார் பேருந்துகள் பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, அக்கரகாரம் தீவட்டிப்பட்டி, ஜோடுகுழி, உள்ளிட்ட பஸ் நிறுத்தங்கள் உள்ளன.
    • இந்த நிலையில் அனைத்து பேருந்துகளும் இன்று செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசு அனுமதி மீறி சில பேருந்துகள் நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்கின்றனர்.

    சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு 100-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும் அரசு பேருந்துகளும் இயங்கி வருகின்றனர். சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக தனியார் பேருந்துகள் பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, அக்கரகாரம் தீவட்டிப்பட்டி, ஜோடுகுழி, உள்ளிட்ட பஸ் நிறுத்தங்கள் உள்ளன.

    இந்த நிலையில் அனைத்து பேருந்துகளும் இன்று செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசு அனுமதி மீறி சில பேருந்துகள் நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பூசாரிபட்டி பஸ் நிறுத்தத்தில் 3 தனியார் பேருந்துகளை பொதுமக்கள் பா.ம.க ஒன்றிய செயலாளர் பி.எஸ்கே. செல்வம் தலைமையில் சிறை பிடித்தனர்.

    • தகாத உறவு கணவருக்கு தெரிந்து விட்டதால், அவரை தீர்த்துக் கட்ட கள்ளக்காதலன் தினேஷ், வித்யாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டினேன்.
    • கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தோழி வித்யா, கள்ளக்காதலன் தினேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    நங்கவள்ளி:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள மலையாம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர ராஜ் ( 32). நெசவு தொழிலாளி. இவரது மனைவி நிவேதா (27). இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளான்.

    கடந்த 17-ந்தேதி சுந்தர ராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக அவரது தந்தை அர்த்த நாரீஸ்வரர் என்பவர் ஜலகண்டாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே சுந்தரராஜ் கழுத்தில் காயம் இருந்தது. இதனால் அவருடைய மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவரை தனி அறையில் வைத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், கட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த கள்ளக்காதலன் தினேஷ் (24) என்பவருடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்து நாடகமாடியது அம்பலமானது. உடனே போலீசார் நிவேதாவை கைது செய்தனர்.

    மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய தோழி வித்யா (27), கள்ளக்காதலன் தினேஷ் (24) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். 3 பேரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

    இதில் நிவேதா போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் சுந்தர ராஜ் பெங்களூருவில் வேலை பார்த்தபோது உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் சொந்த ஊரிலேயே தறித்தொழில் செய்து வந்தார்.

    அவர், பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்ததும் நான் ஜலகண்டாபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியை பணியில் சேர்ந்தேன். அப்போது பள்ளி தோழி வித்யா அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அவர் மூலம் எனக்கு தறி தொழிலாளி தினேஷ் அறிமுகமானார்.

    பின்னர் நானும், தினேசும் செல்போனில் பேசி நெருக்கமானோம். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தொடர்ந்து அவருடன் செல்போனில் மணிக்கணக்கில் பேசி வந்தேன்.

    ஒரு கட்டத்தில் எங்களது கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரியவந்தது. இதை அறிந்த எனது கணவர் சுந்தரராஜ், என்னை கண்டித்து செல்போனை பறித்துக் கொண்டார்.

    எங்களது இந்த தகாத உறவு கணவருக்கு தெரிந்து விட்டதால், அவரை தீர்த்துக் கட்ட கள்ளக்காதலன் தினேஷ், வித்யாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டினேன்.

    இந்த நிலையில் ஆடி 1-ந் தேதி மாமனார், மாமியார் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். இது எங்களுக்கு சாதகமாக இருந்தது. சம்பவத்தன்று இரவு சுந்தரராஜிக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்து தூங்க வைத்தேன். பின்னர் கள்ளக்காதலன் தினேசை வீட்டிற்கு வரவழைத்தேன். அவர் வந்ததும், சுந்தரராஜ் முகத்தை தலையணையால் அழுத்தி கொலை செய்து விட்டு, தற்கொலை செய்தது போல் தூக்கில் கட்டி தொங்கவிட்டோம்.

    இதையடுத்து நான் அதிகாலை 4 மணிக்கு மாமனாருக்கு போன் செய்து சுந்தரராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டதாக கூறினேன். மேலும் யாருக்கும் சந்தேகம் வராதபடி இதை நம்ப வைத்து நாடகம் ஆடினேன்.

    மேலும் தகவல் அறிந்து பெங்களூருவில் இருந்து புறப்பட்டு ஊருக்கு வந்த மாமனார்-மாமியாரும் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் மகன் சாவில் சந்தேகம் இல்லை என புகார் கொடுத்தனர்.

    ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை எங்களை காட்டிக் கொடுத்து விட்டது. சுந்தரராஜ் மூச்சு திணறி இறந்துள்ளதும், அவர் கழுத்து இறுகாமல் தூக்கில் தொங்கியதும், இது கொலை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக எங்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் நானும், கள்ளக்காதலனும், பள்ளி தோழியும் போலீசில் மாட்டிக்கொண்டோம்.

    இவ்வாறு நிவேதா போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    கைதான ஆசிரியை நிவேதா, கள்ளக்காதலன் தினேஷ், தோழி ஆசிரியை வித்யா ஆகிய 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

    • குப்புசாமி இவரது மகன் பிரகாஷ் 23, டிப்ளமோ கேட்டரிங் படித்துள்ளார்.
    • மேட்டூர்- ரெயில் நிலையம் அருகே வந்த போது எதிரே வந்த டாரஸ் லாரி அவர் மீது பயங்கரமாக மோதியது.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப் பேட்டை நரசிம்மசெட்டி தெருவை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் பிரகாஷ் 23, டிப்ளமோ கேட்டரிங் படித்துள்ளார்.

    இவரது சகோதரருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை கொடுப்பதற்காக நேற்று பிரகாஷ் மேட்டூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அழைப்பிதழ்

    அங்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழை கொடுத்த அவர் பின்னர் சேலத்திற்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிள் மேட்டூர்- ரெயில் நிலையம் அருகே வந்த போது எதிரே வந்த டாரஸ் லாரி அவர் மீது பயங்கரமாக மோதியது .இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    சாவு

    இதனை பார்த்த அந்த பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற கருமலைக்கூடல் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்றி ரவு 10 மணியளவில் அவர் பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி லாரி டிரைவரை தேடி வருகிறார்கள். 

    • அரசு ஆம்புலன்ஸ் செல்வதற்கு முன்பாக தனியார் ஆம்புலன்ஸ்கள் விபத்தான இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதாக புகார் எழுந்துள்ளது.
    • 10-க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி அம்புலன்ஸ்கள் வரிசை கட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரி ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டாரங்களின் தலைமை மருத்துவமனை என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். 100-க்கும் மேற்பட்ட உள்நோயளி களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தனியார் ஆம்புலன்கள்

    ஓமலூர் வழியாக தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகள் செல்கிறது. இந்த வழியாக லட்சக்க ணக்கான வாகனங்கள் வந்து செல்வதால், விபத்துக்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. விபத்தில் சிக்கியவர்களை, ஓமலூர் அரசு மருத்துவமனையின் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் மீட்டு வந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதற்கிடையே ஓமலூர் அரசு மருத்துவமனை முன்பாக 10-க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி அம்புலன்ஸ்கள் வரிசை கட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் தகவல் கிடைத்ததும், அரசு ஆம்புலன்ஸ் செல்வதற்கு முன்பாக தனியார் ஆம்புலன்ஸ்கள் விபத்தான இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதாக புகார் எழுந்துள்ளது.

    சிக்கல்

    இந்த நிலையில், தற்போது ஓமலூர் அரசு மருத்துவமனை தேசிய தர நிர்ணயசான்று பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. தனியார் பங்க ளிப்புடன் ஆஸ்பத்திரியில் சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதனால், தேசிய தரச்சான்று வழங்கும் ஆய்வு குழுவினர் ஆய்வு செய்யும்போது தனியார் ஆம்புலன்ஸ்களை அரசு மருத்துவமனை முன்பு நிறுத்த கூடாது என்று மருத்துவமனை சார்பில் அறிவுறுத்தியும் தொடர்ந்து அங்கேயே நிறுத்தப்படுகிறது.

    அதனால், அரசு மருத்துவமனை சார்பில் ஓமலூர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளிக்கப்ப ட்டுள்ளது. ஆனாலும் , தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவனையை சுற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

    • தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லி கோட்டை கிராமம் அத்திராம் பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
    • பள்ளி வளாகத்தில் இருந்த இரண்டு மரங்களை வெட்டி டிராக்டர் மூலம் ஏற்றிக்கொண்டு சென்றதை பார்த்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ளனர்.

    தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லி கோட்டை கிராமம் அத்திராம் பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை 55 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்ந்து உள்ளன. பள்ளி வளாகத்தில் இருந்த இரண்டு மரங்களை வெட்டி டிராக்டர் மூலம் ஏற்றிக்கொண்டு சென்றதை பார்த்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    • மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி அவரை 10-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்து உத்தரவிட்டார்.

    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டி சினிமா நகரை சேர்ந்தவர் பாண்டியன் (35), இவர் கடந்த மே மாதம் 28-ந்தேதி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்து சென்ற வீராணத்தை சேர்ந்த முருகன் என்பவரை வழி மறித்து மிரட்டி ரூ.450-ஐ பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், செவ்வாய்ப்பேட்டை, அன்னதானப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் புகுந்து திருடுதல், மோட்டார் சைக்கிள்கள் திருட்டு உள்பட தொடர் குற்றங்களில் ஈடுபட்டதும், பாண்டியன்மீது சேலம் மாநகர போலீஸ் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் இதனால் 9 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

    இந்நிலையில் பாண்டியன் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என டவுன் போலீசார் சேலம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.

    இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி அவரை 10-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்து உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு சேலம் சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.

    • வழக்கமாக கர்நாடகாவில் தண்ணீர் திறக்கப்பட்டால் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு 48 மணி நேரத்தில் வந்து சேரும்.
    • கர்நாடகாவில் இருந்து தற்போது 24ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்து வருகிறது.

    தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் பெய்யாததால் மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீர்வரத்து வினாடிக்கு 200 அடிக்கு கீழே தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    நீர்வரத்தை விட அணையில் இருந்து தண்ணீர் அதிகளவில் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் தினமும் 1 அடி குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் 3 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி முழுமை பெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் டெல்டா பாசன விவசாயிகள் கவலையில் இருந்தனர். இதற்கிடையே கடந்த வாரம் முதல் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது.

    இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அங்குள்ள அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கடந்த சனிக்கிழமை கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 4ஆயிரத்து 897 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    வழக்கமாக கர்நாடகாவில் தண்ணீர் திறக்கப்பட்டால் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு 48 மணி நேரத்தில் வந்து சேரும். அங்கிருந்து 6 மணி நேரத்தில் மேட்டூர் அணையை வந்தடையும். ஆனால் தற்போது நீர்வரத்து இன்றி காவிரி ஆறு வறண்டு கிடந்ததால் கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட தண்ணீர் செவ்வாய்க்கிழமை இரவு தான் பிலிகுண்டுவுக்கு வந்தது.

    பின்னர் அங்கிருந்து நேற்றிரவு முதல் மேட்டூர் அணைக்கு நீர் வரத்தொடங்கியது. நேற்றிரவு 10 மணி அளவில் வினாடிக்கு 2ஆயிரத்து 100 கனஅடி தண்ணீர் வந்தது. தற்போது படிப்படியாக அதிகரித்து இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3ஆயிரத்து 343 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    அணையின் நீர்மட்டம் 64.87 அடியாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேறறப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கர்நாடகாவில் இருந்து தற்போது 24ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு உள்ளது. எனவே படிப்படியாக அந்த தண்ணீரும் வரத் தொடங்கிவிடும். நீர்வரத்து 24ஆயிரம் கனஅடியாக அதிகரித்தால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து இந்த ஆண்டு குறுவை சாகுபடி முழுமை பெறும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    • இன்று அதிகாலை 5 மணி அளவில் கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டி செல்லும் பைபாஸ் சாலையில் ஒரு தனியார் பள்ளியின் அருகில் லாரியை நிறுத்தி விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.
    • அப்போது அவரது பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்துக் கொண்டு 2 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர்.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கீழ் குப்பம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி வயது 35 இவர் பார்சல் நிறுவனத்தில் டிரைவராக கோவை விழுப்புரம் செல்லும் லாரியை ஓட்டி வருகிறார்.இன்று அதிகாலை 5 மணி அளவில் கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டி செல்லும் பைபாஸ் சாலையில் ஒரு தனியார் பள்ளியின் அருகில் லாரியை நிறுத்தி விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது அவரது பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்துக் கொண்டு 2 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர்.திடீரென கண் விழித்த வீரமணி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் துரத்திச் சென்று ஒருவரை பிடித்து அன்னதானப்பட்டி போலீசில் ஒப்படைத்தார்.போலீசார் விசாரணையில் செல்போனை பறித்த வாலிபர் அம்மாபேட்டை அருகே உள்ள நஞ்சம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்து என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 20), என்பது தெரியவந்தது.

    தப்பி ஓடிய மற்றொருவர் சேலம் அருகே உள்ள கூட்டாத்துபட்டி பகுதியைச் சேர்ந்த அருண் (24) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது நீர்மட்டம் 70 அடிக்கும் கீழே சரிந்துள்ளது.
    • மேலும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்து உள்ளனர்.

    சேலம்:

    தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவர் தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் இன்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    20 நாட்கள்

    டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது நீர்மட்டம் 70 அடிக்கும் கீழே சரிந்துள்ளது.

    இதே நிலை நீடித்தால் 20 நாட்களுக்கு மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும். உச்சநீதிமன்ற உத்தரவுபடி கர்நாடக அரசு தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதங்களுக்கு வழங்க வேண்டிய 41.24 டி.எம்.சி. தண்ணீரை வழங்காததால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    விவசாய பணிகள்

    தண்ணீர் பெற்று தந்தால் மட்டுமே காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடி மற்றும் பல லட்சம் ஏக்கரில் விவசாய பணிகள் மேற்கொள்ள முடியும். விவசாயிகளை காப்பாற்ற உச்சநீதிமன்ற உத்தரவுபடி ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை முதல்-அமைச்சர் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்திற்கு பெற்று தர வேண்டும்.

    மேலும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்து உள்ளனர். 

    • சேலம் செவ்வாய்ப்பேட்டை போலீசார் சத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு ஒருவர் சந்தேகத்திற்கு இடமான நிலையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார்.
    • அவரை பிடித்து விசாரித்த போது அவரிடம் 100 மதுபாட்டில்கள் இருந்தது. இதையடுத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    சேலம் செவ்வாய்ப்பேட்டை போலீசார் சத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு ஒருவர் சந்தேகத்திற்கு இடமான நிலையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார்.

    அவரை பிடித்து விசாரித்த போது அவரிடம் 100 மதுபாட்டில்கள் இருந்தது. இதையடுத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முள்ளாக்காடு கோதண்டராம செட்டி தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர் சத்திரம் பகுதியில் உள்ள மதுகடையில் மதுபாட்டில்களை வாங்கி பள்ளப்பட்டி பகுதியில் சந்துகடை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இவர் மீது பள்ளப்பட்டி, செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது குறிப்பிடதக்கது.

    • செவ்வாய்பேட்டை - ஜங்ஷன் இடையில் ரெயில் வந்தபோது சுமார் 30 வயது மதிக்கதக்க வாலிபர் திடீரென தண்டவாளத்தில் படுத்து கொண்டார்.
    • ரெயில் ஏறியதில் அந்த வாலிபர் தலை துண்டாகி பலியானார்.

    சேலம்:

    விழுப்புரம் மாவட்டம் விருதாச்சலத்தில் இருந்து சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு இன்று காலை 7 மணி விருதாச்சலம் பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்தது.

    செவ்வாய்பேட்டை - ஜங்ஷன் இடையில் ரெயில் வந்தபோது சுமார் 30 வயது மதிக்கதக்க வாலிபர் திடீரென தண்டவாளத்தில் படுத்து கொண்டார்.

    தற்கொலை

    அவர் மீது ரெயில் ஏறியதில் அந்த வாலிபர் தலை துண்டாகி பலியானார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து வந்த போலீசார் வாலிபரின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணை

    இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

    அவரது கையில் ஈஸ்வரி தனபால் என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. இதை வைத்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    சேலத்தில் தொடர்ந்து தண்டவாளத்தில் தற்கொலை செய்யும் சம்பவங்கள் நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் “மாபெரும் தமிழ் கனவு” நிகழ்ச்சி கலெக்டர் கார்மேகம் தலைமையில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
    • இந்நிகழ்ச்சியில் “தொன்மை மறவேல்” என்ற தலைப்பில் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகிறார்.

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் "மாபெரும் தமிழ் கனவு" நிகழ்ச்சி கலெக்டர் கார்மேகம் தலைமையில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் "தொன்மை மறவேல்" என்ற தலைப்பில் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் கலை, இலக்கியம், தொன்மை மற்றும் வாழ்வின் முன்னேற்றம் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பல்வேறு துறை வல்லுநர்கள் பதில் அளிக்க உள்ளனர்.

    மேலும் மகளிர் திட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், உதவி இயக்குநர் (நான் முதல்வன்) திறன் பயிற்சி, மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், மாவட்ட நூலகம், புதுமைப் பெண் திட்டம் மற்றும் தாட்கோ உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமாய் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    ×