என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவன் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலி
- மாங்காடு மாடல் பள்ளி அருகில் வசித்து வரும் சேகர் என்பவர் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
- தவறி கீழே விழுந்து டிராக்டரின் சக்கரம் அவரது தலை மீது ஏறியதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சேலம்:
கொளத்தூர் மாங்காடு மாடல் பள்ளி அருகில் வசித்து வரும் சேகர் என்பவர் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று டிராக்டரில் எட்டாம் வகுப்பு படித்து வரும் அவரது மகன் வெங்கடேஷ் என்பவரை டிராக்டரில் அழைத்து கொண்டு வரும்போது கருங்கல்லூர் அருகே உள்ள வால் கிணத்தூர் பகுதியில் வளைவில் வேகமாக வந்து டிராக்டரை திரும்பும் போது எதிர்பாராத விதமாக வெங்கடேஷ் டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்து டிராக்டரின் சக்கரம் அவரது தலை மீது ஏறியதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கொளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் அவர்கள் விசாரித்து வருகிறார்கள்
Next Story






