சங்ககிரி அருகே சுகாதார வளாகத்திற்கு பூட்டு

ராயலூர் 3-வது வார்டில் 12 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் மற்றும் குழந்தை கள் பயன்பாட்டிற்காக ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. தண்ணீர் வசதி இல்லாததால் கடந்த சில மாதங்களாக சுகாதார வளாகம் பூட்டியே கிடக்கிறது.
மகளிர் சுகாதார வளாகம் பூட்டி கிடக்கும் காட்சி.
மகளிர் சுகாதார வளாகம் பூட்டி கிடக்கும் காட்சி.
Published on

சங்ககிரி:

சங்ககிரி சின்னாக் கவுண்டனூர் ஊராட்சி, ராயலூர் 3-வது வார்டில் 12 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் மற்றும் குழந்தை கள் பயன்பாட்டிற்காக ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் தண்ணீர் வசதி இல்லாததால் கடந்த சில மாதங்களாக சுகாதார வளாகம் பூட்டியே கிடக்கிறது.

மேலும் பராமரிப்பின்றி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பெண்கள், குழந்தைகள் திறந்த வெளிக் கழிப்பிடமாக சாலை ஓரங்களையே பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

புகார்

இது குறித்து ஊராட்சி மன்றத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் சுகாதார வளாகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com