என் மலர்
சேலம்
- கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் இன்று காலையில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
- நேற்று காலை 65.30 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 63.86 அடியாக சரிந்தது.
நங்கவள்ளி:
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 22 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் வினாடிக்கு 5 ஆயிரத்து 779 கனஅடியாக குறைக்கப்பட்டது.
இதனால் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் இன்று காலையில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக காவிரி ஆற்றில் மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 11 ஆயிரத்து 342 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 6 ஆயிரத்து 53 கன அடியாக சரிந்தது.
இன்று மேலும் நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 879 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நேற்று முன்தினம் முதல் வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீர் வெகுவாக குறைந்துள்ள நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிய தொடங்கி உள்ளது.
நேற்று காலை 65.30 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 63.86 அடியாக சரிந்தது. ஒரே நாளில் 2 அடி குறைந்து விட்டது. நீர் இருப்பு 27.64 டி.எம்.சி.யாக உள்ளது.
- பழங்களை வைத்து கைதிகள் சிலர் சாராய ஊறல் போட்டிருப்பதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம்:
சேலம் மத்திய சிறையில் 200-க்கும் மேற்பட்ட குண்டர் சட்டம் பாய்ந்த கைதிகள் உள்பட 900-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு சிறையில் வழங்கும் உணவுகள் தவிர கேன்டீன் மூலமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் ஆரஞ்சு, ஆப்பிள், சாத்துக்குடி போன்ற பழவகைகளும் கொடுக்கின்றனர். இதனை கைதிகள் வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள்.
இப்படி வழங்கப்படும் பழங்களை வைத்து கைதிகள் சிலர் சாராய ஊறல் போட்டிருப்பதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜெயிலர் மதிவாணன் தலைமையிலான குழுவினர் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மத்திய சிறையில் உள்ள 7-வது பிளாக் அருகில் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த 2 லிட்டர் தண்ணீர் பாட்டிலை தோண்டி எடுத்தனர். அதில் ஆப்பிள், மாதுளை, வெல்லம் உள்பட பல்வேறு பழங்களை போட்டு ஊற வைத்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அதனை கைப்பற்றிய சிறை அதிகாரிகள் தரையில் கொட்டி அழித்தனர். மேலும் அந்த ஊறலை அங்கு போட்டு வைத்த கைதிகள் யார் ? என்பது குறித்து அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- ஓமலூர், பெரியேரிபட்டி, வேடப்பட்டி, தும்பிபாடி, டேனீஸ்பேட்டை ஆகிய பகுதிகளில் சம்பு மற்றும் நாட்டு அத்தி மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.
- ஓமலூர் வட்டாரத்தில் ஒரு சில விவசாயிகள் அத்தி மரம் நடவு செய்து, அத்திப்பழத்தை சாகுபடி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தின் எல்லையில் சேர்வராயன் மலைத்தொடர் உள்ளது. இந்த மலைத்தொடரில் உள்ள உள்கோம்பை, டேனீஸ் பேட்டை, பண்ணிகரடு ஆகிய பகுதிகளில் அத்திப்பழ மரங்கள் உள்ளது.
மேலும், ஓமலூர், பெரியேரிபட்டி, வேடப்பட்டி, தும்பிபாடி, டேனீஸ்பேட்டை ஆகிய பகுதிகளில் சம்பு மற்றும் நாட்டு அத்தி மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மரங்களில் தற்போது தித்திக்கும் அத்திப்பழங்கள் கொத்துகொத்தாக காய்த்து பழுத்து தொங்குகிறது. அத்தி மரம் ஆண்டுக்கு 3 முறை காய் பிடிக்கிறது.
பழங்கள், பலா பலத்தை போன்று மரத்தின் கிளைப்பகுதியில் இருந்து உச்சி வரை காய்கள் காய்த்து அழகாக காட்சி அளிக்கிறது. இந்த பழம் ரத்தம் அழுத்தம், சர்க்கரை, இருதயம் தொடர்பான பல்வேறு நோய்களை தீர்க்கும் சக்தி கொண்டது.
மேலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குகிறது. அதனால், அனைவரும் விரும்பி வாங்கி செல்கின்றனர். இந்த பழம் வணிக ரீதியாக லாபம் தரும் என்பதால் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் அத்தி மரங்களை நடவு செய்து பராமரித்து லாபம் பெறலாம் என்று தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.
ஓமலூர் வட்டாரத்தில் ஒரு சில விவசாயிகள் அத்தி மரம் நடவு செய்து, அத்திப்பழத்தை சாகுபடி செய்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும், அத்திக்காய்களை கொண்டு சாம்பார், பொரியல் செய்வதற்காகவும் விற்பனை செய்யப்படுகிறது. அத்திப்பழம் மற்றும் காய்கள் ரகத்தை பொருத்து கிலோ 200 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் மலைப்பகுதியில் மரங்களில் பழுத்துள்ள அத்திப்பழங்கள், பறவைகள் சாப்பிட்டது போக மீதி அனைத்தும் வீணாகி வருகிறது.
- உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த ஜனகராஜ் உள்பட 15 பேர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
- எங்கள் 15 பேருக்கு சொந்தமான அந்த நிலத்தை நெத்திமேடு பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் அபகரித்துக் கொண்டு வேலி போட்டு உள்ளார்.
சேலம்:
சேலம் உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த ஜனகராஜ் உள்பட 15 பேர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டர் அலுவல கத்தில் மனு கொடுத்துவிட்டு அவர்கள் கூறியதாவது,
சேலம் உத்தமசோழபுரம் பகுதியில் சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான ஒரு ஏக்கர் 56 சென்ட் நிலம் உள்ளது. எங்கள் 15 பேருக்கு சொந்தமான அந்த நிலத்தை நெத்திமேடு பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் அபகரித்துக் கொண்டு வேலி போட்டு உள்ளார்.
இது குறித்து கேட்டபோது 100-க்கும் மேற்பட்ட அடியாட்களை வைத்து எங்களை அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். தி.மு.க. பிரமுகர் என்பதால் எங்கு சென்று புகார் தெரிவித்தாலும் நட வடிக்கை எடுக்க மாட்டார்கள் என மிரட்டுகிறார்.
எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் ரூ.15 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டுத் தந்து கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- தக்காளி விலை அதிகபட்சமாக 200 ரூபாய் வரை விற்பனையாகிறது.
- இதனால் பொதுமக்கள் தக்காளி வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சேலம்:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை அதிகபட்சமாக 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் தக்காளி வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதை அடுத்து ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு 60 ரூபாய்க்கு தக்காளி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த
சில நாட்களாக தக்காளி
விலை மேலும் அதிகரித்த தால் ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விநியோ கிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதேபோல் சேலம் பேலஸ் தியேட்டர் அருகே உள்ள கூட்டுறவு பண்டக சாலையிலும் தக்காளி விற்பனை நிறுத்தப்பட்டது. இன்று காலை 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு தக்காளி வாங்க வந்தனர். ஆனால் அங்கு கடந்த 2 நாட்களாக விற்பனைக்கு தக்காளி வரவில்லை என்று கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திர மடைந்த பொதுமக்கள் கூட்டுறவு பண்டக சாலையை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு இருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதற்கிடையே அங்கு வந்த வட்ட வழங்கல் அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் விரைவில் தக்காளி வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.
இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
- ஆத்தூர் வடசென்னிமலை காட்டுக்கோட்டை கடலூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி சாந்தி.
- இன்று காலை மனு கொடுப்பதற்காக 3 லிட்டர் பெட்ரோலுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் வடசென்னிமலை காட்டுக்கோட்டை கடலூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ். இவரு டைய மனைவி சாந்தி.
இவர் இன்று காலை மனு கொடுப்பதற்காக 3 லிட்டர் பெட்ரோலுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பிரதான நுழைவு வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். திடீரென 3 லிட்டர் பெட்ரோலை போலீசாரிடம் ஒப்படைத்து எனது மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது :-
நான், கடந்த 2008 -ம் ஆண்டு ஒருவரிடம் இருந்து நிலம் வாங்கி கிரையம் செய்தேன். இந்த நிலையில் தாதகாப்பட்டியை சேர்ந்த ஒருவர், எனக்கு விற்பனை செய்த நிலத்தை அபகரிக்கும் நோக்கில் பல பிரச்சினை ஏற்படுத்தி வருகிறார்.
ஏற்கனவே வாழப்பாடி யில் ஒரு பெண்ணை எரித்து நிலத்தை அபகரித்து 3 மாதம் ஜெயிலில் இருந்ததுபோல் உன்னையும் எரித்து கொன்று விடுவேன். எனவே அந்த நிலத்தை தனக்கு எழுதி கொடு. இல்லையென்றால் கொன்று விடுவதாக அடியாட்களுடன் வந்து மிரட்டுகிறார்.
எனவே அவர் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.
- சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் 2-வது அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
- அப்போது அவரது மனைவி அருகில் இருந்து அவரை கவனித்து வந்தார். பின்னர் 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.
சேலம்:
சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் 2-வது அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அப்போது அவரது மனைவி அருகில் இருந்து அவரை கவனித்து வந்தார். பின்னர் 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.
ஆபாச வீடியோ
இந்த நிலையில் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் நீ ஆஸ்பத்திரியில் தங்கி இருந்த போது குளித்த வீடியோ என்னிடம் உள்ளது. நான் அழைக்கும் இடத்திற்கு வரவேண்டும் என்று மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கதறினார்.
இதற்கிடையே அந்த பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அந்த வீடியோவை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மிரட்டல்
இந்தநிலையில் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அந்த நபர் நான் கூப்பிடும் இடத்திற்கு வராவிட்டால் குளிக்கும் வீடியோவை சமூக வலை தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினார். இதனால் பயந்து போன அந்த பெண் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது 2 முறையும் வெவ்வெறு செல்போன் எண்களில் இருந்து அந்த நபர் பேசியது தெரிய வந்தது. மேலும் தனது கணவர் சிகிச்சையில் இருந்த போது பக்கத்து படுக்கையில் இருந்த நபர் நான் குளிக்கும் போது வீடியோ எடுத்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக அந்த பெண் கூறி உள்ளார்.
செல்போன் எண்ணை வைத்து விசாரணை
இதையடுத்து அந்த பெண்ணுக்கு பேசிய செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்த நபர் தலைமறைவானது தெரிய வந்தது.
அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
- ஏற்காட்டில் குற்றசெயல்களை தடுக்கும் விதமாக கலந்தாய்வு கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் தலைமையில் நடந்தது.
- இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம ஊர் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்காட்டில் குற்றசெயல்களை தடுக்கும் விதமாக கலந்தாய்வு கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் தலைமையில் நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம ஊர் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் பேசியதாவது:- ஏற்காடு மலை கிராமங்களில் கள்ள துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. மேலும் கஞ்சா, கள்ள சாராயம், அரசு மது பாட்டில் விற்பனையாளர்கள் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதாக அவ்வப்போது தகவல் வருகிறது. எங்களது போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வழக்குகளும் செய்து வருகிறார்கள். கள்ளத்துப்பாக்கி வைத்துள்ள நபர்கள் எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள். கள்ளத்துப்பாக்கிகளை தாமாக முன்வந்து ஒப்படைத்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது. நாங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கள்ளத்துப்பாக்கி வைத்துள்ளது கண்டுபிடித்தால் துப்பாக்கி வைத்திருந்த நபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
- ஆனந்தாயி (65). இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது.
- அந்த நிலத்தில் கரும்பு பயிரிட்டு உள்ளார். இந்த நிலையில் திடீரென கரும்பு தோட்டத்தில் தீ பற்றியது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த போட்டிய புறம் சட்டூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தாயி (65). இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் கரும்பு பயிரிட்டு உள்ளார். இந்த நிலையில் திடீரென கரும்பு தோட்டத்தில் தீ பற்றியது. ஆனந்தாயி வந்து பார்த்தபோது அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்து. இதை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆனந்தாயி தீயை அணைக்க முயற்சி செய்தார். பின்னர் காடையாம்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ராஜாகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கரும்பு தோட்டம் முழுவதும் கருகி சேதமானது.
- 60 வார்டுகளில் ஏற்கனவே கொசு ஒழிப்பு பணிக்கும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகை யிலும் 400 ஊழியர்கள் பணியில் உள்ளனர்.
- அவர்கள் கொசு ஓழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சேலம்:
சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் ஏற்கனவே கொசு ஒழிப்பு பணிக்கும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகை யிலும் 400 ஊழியர்கள் பணி யில் உள்ளனர். அவர்கள் கொசு ஓழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தென் மேற்கு பருவ மழை
இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் சமீப காலமாக சேலம் மாநகரில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவ திப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து கொசு ஒழிப்பு பணியை தீவிரப் படுத்த அதி காரிகள் மற்றும் ஊழியர்கள் ஆலோசனை செய்தனர்.
தொடர்ந்து கொசுக்களை ஒழிக்கவும் டெங்கு கொசுக்கள் உருவாவதை தடுக்கவும் வீடு, வீடாக சென்று கள ஆய்வு செய்யும் வகையில் 200 ஊழியர்கள் விரைவில் நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஊழியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
200 ஊழியர்கள்
புதிதாக நியமிக்கப்படும் ஊழியர்கள் அம்மாப் பேட்டை, அஸ்தம்பட்டி, கொண்ட லாம்பட்டி, சூரமங்கலம் ஆகிய மண்டலங்களில் தலா 30 பேர் பணியாற்றுவார்கள். மீதம் உள்ள 80 ஊழியர்கள் தலா 20 வீதம் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு வணிக வளாகங்கள், பள்ளி கூடங்கள், கல்லூரிகள், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவைக்கு தகுந்தாற்போல அனுப்பி வைக்கப்பட்டு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
புதிதாக நியமிக்கப்படும் ஊழியர்கள் 120 பேர் தினமும் 300 வீடுகளுக்கு சென்று கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கை களில் ஈடுபட வேண்டும், குறிப்பாக தண்ணீர் தேங்கும் வகையில், நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் குவித்து வைக்கப் பட்டுள்ள பொருட்களை அகற்ற வேண்டும்.
மேலும் டெங்கு கொசுக் கள் நல்ல தண்ணீரில் பரவும் என்பதால் அதில் கொசு ஒழிப்பு மருந்துகள் தெளிப்பது, கொசு வளர்வதை தடுக்க வீட்டு உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு அதற்கான அறிக்கையை சுகாதார துறை அதிகாரிகளிடம் தினமும் அளிக்க வேண்டும்.
429 ரூபாய் ஊதியம்
இந்த பணிக்கான ஊழி யர்கள் நியமனம் விரைவில் நடை பெற உள்ளது. தினக்கூலி அடிப்படையில் பணியில் சேர்க்கப்படும் இவர்களுக்கு ஊதியமாக 429 ரூபாய் வழங்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- காளியப்பனுக்கு குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- தற்கொலை முயற்சி அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாநகர ஆயுதப்படையில் ஏட்டாக பணியாற்றி வருபவர் காளியப்பன் (45). இவர் அன்னதானப்பட்டி, லைன்மேடு போலீஸ் குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் காளியப்பனுக்கு குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த காளியப்பன் வீட்டில் சாணி பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுபற்றி தெரிய வந்ததும் குடும்பத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மாலை 5 மணி அளவில் 9 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
- திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிய தொடங்கி உள்ளது.
மேட்டூர்:
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 22 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் வினாடிக்கு 5 ஆயிரத்து 779 கனஅடியாக குறைக்கப்பட்டது.
இதன்காரணமாக ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மாலை 5 மணி அளவில் 9 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
இந்த தண்ணீர் நேராக காவிரி ஆற்றில் மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 11 ஆயிரத்து 342 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையில் 10 ஆயிரத்து 99 கன அடியாக சரிந்தது.
மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. பாசன தேவைக்கு ஏற்ப தண்ணீர் குறைத்தும், அதிகரித்தும் திறந்து விடப்படுகிறது.
அதன்படி ஜூலை மாதம் முதல் வாரம் முதல் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இதையடுத்து 26-ந் தேதி முதல் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாசனத்திற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நீர் திறப்பானது நேற்று மாலை முதல் வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிய தொடங்கி உள்ளது.
நேற்று 65.60 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 65.30 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 28.79 டி.எம்.சி.யாக உள்ளது.






