என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    காஞ்சி பெரியவாளுடைய அத்யந்த பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகளை எப்போதும் மகானிடம் நேரில் சொல்ல மாட்டார்கள்.
    நேரடியாகச் சொல்லாமல் மகானை மனதுக்குள் பிரார்த்தித்துக் கொள்வார்கள். ஆத் மார்த்தமான அந்தப் பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் உண்டு. என்ன வேண் டினார்களோ, அவை நிறைவேறி விடும்.
    மனசுக்குள் பிரார்த்தித்துக் கொள்வதும் ஒரு வகை தியானமே!
    அதுபோல் அங்கம்மாளின் தாயார், பெரியவா திருச்சந்நிதியில் மனசுக்குள் வேண்டிக் கொண்டதற்கு நல்ல பலனும் இருந்தது.
    ஆம்! அங்கம்மாளுக்கு வேலை கிடைத்து விட்டது.

    சென்னை சைதாப்பேட்டை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்ஜ்) உத்தியோகம் கிடைத்தது. இதற்காக இத்தனை நாட்களாக மெனக்கெட்ட அவரது அம்மாவுக்கு சந்தோஷமான சந்தோஷம்.
    அங்கம்மாளின் கணவர் ராமபிரசாத்துக்கும் ஒரு வகையில் சந்தோஷம்தான். மாதா மாதம் குடும்பத்தின் வரவு கூடுகிறதே! அரசு உத்தியோகம் என்றால், சும்மாவா? கசக்கவா செய்யும்!
    வேலை அமைந்தபோது அங்கம்மாளுக்கு இரண்டு மாத கைக்குழந்தை இருந்தது. ஆண் குழந்தை.
     அங்கம்மாளின் தாயார் உடன் இருந்து குழந்தையை நன்றாகவே கவனித்துக் கொண்டார். காரணம், இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் ஆயிற்றே!
    ஒரு சில மாதங்கள் ஓடின. ‘கைக்குழந்தையை ஊருக்கே கூட்டிக் கொண்டு போய்க் கவனித்துக் கொள்கிறேன்’ என்று சொல்லி விட்டுச் சொந்த ஊரான திருநெல்வேலி கடையநல்லூருக்குப் புறப்பட்டு விட்டார் அங்கம்மாளின் தாயார்.
    தினமும் காலையில் எழுந்து அரக்கப் பரக்கச் சமையலை முடிப்பார் அங்கம்மாள். பிறகு, கணவர் ராமபிரசாத்துக்கும் தனக்கும் டப்பாவில் அடைத்துக் கொண்டு இருவரும் ஆபீஸ் புறப்பட்டு விடுவார்கள்.

    எண்ணூரில் இருந்து தினமும் சைதாப்பேட்டைக்கு வந்து செல்வது சிரமமாக இருந்தது அங்கம்மாளுக்கு. ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் அலைந்து திரிவார்கள். ஆனால், பெண்களுக்கு அது கஷ்டமாயிற்றே! எனவே, ஒரு கட்டத்தில் தன் வீட்டை சைதாப்பேட்டைக்கே  மாற்றி விட்டார் அங்கம்மாள்.
    ராமபிரசாத்துக்கு அப்போது வயது 45. திடீரென அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. பசி என்பது இல்லாமல் போயிற்று. மதிய நேரத்தில் திடீர் திடீரென ஜுரம் வரும். ஆரம்பத்தில் கை வைத்தியங்கள் செய்து பார்த்தார் அங்கம்மாள். பலன் தரவில்லை. நோயின் தாக்கம் குறையவில்லை.

    எத்தனையோ மருத்துவமனைகள் ஏறி இறங்கியாயிற்று. சிறப்பு மருத்துவர்களையும் பார்த்தாயிற்று. எந்த ஒரு மருத்துவமனையாலும் ‘இன்னதுதான் பிரச்சினை’ என்று தீர்மான மாகக் கணித்துச் சொல்ல முடியவில்லை. என்றாலும் மாத்திரை, மருந்துகளை எழுதிக் கொடுத்தார்கள். ஆனால், ராமபிரசாத் உடல் நலன் தேறவில்லை. எந்த ஒரு சிகிச்சையும் பலன் தரவில்லை.
    இந்த அவஸ்தையினால் ராமபிரசாத்தால் வேலைக்கும் தொடர்ந்து செல்ல முடிய வில்லை. வேலைக்குப் போகாமலேயே ஒண்ணேகால் வருடம் ஓடியது. அந்த நேரத்தில் குடும்பம் நடத்துவதற்கு அங்கம்மாளின் சம்பளம்தான் பயன்பட்டது.
    இப்படி எல்லாம் குடும்பத்தில் ஆகும் என்று தெரிந்தோ என்னவோ... மகா பெரியவா அனுக்ரகத்தால் அங்கம்மாளுக்கு ஒரு வேலையும் கிடைத்திருந்தது.

    ராமபிரசாத்தின் நண்பர் ஒருவர் இருந்தார். அவருக்கும் அசோக் லேலண்டில்தான் உத்தியோகம். உடல் நலன் காரணமாக ராமபிரசாத் அலுவலகம் செல்ல முடியாத சந்தர்ப்பங்களில் ஏதேனும் வேலை இருந்தால், இந்த நண்பரிடம்தான் சொல்லி அனுப்புவார். நண்பரும் மிகப் பொறுப்பாக விசாரித்து விட்டு வருவார். அலுவலகத்தில் இருந்து நேராக ராமபிரசாத் வீட்டுக்கு வந்து ரிப்போர்ட் பண்ணுவார். அந்த அளவுக்கு நெருங்கிய நட்பு இந்த இருவரின் குடும்பத்துக்கும் இருந்து வந்தது.
     அங்கம்மாள் குடும்பமோ, ஆன்மிகக் குடும்பம். அதுவும் மகா பெரியவா மீது இந்தக் குடும்பத்தினருக்கு பக்தி அதிகம். ஆனால், ராமபிரசாத்தின் இந்த நண்பரோ நாத்திகர். கோயில், குளம் பக்கம் தப்பித் தவறிக்கூட எட்டிப் பார்க்க மாட்டார். அவர் மட்டுமல்ல... அவரது மனைவிக்கும் இதே நாத்திகக் கொள்கைதான்.

    இந்த இரு குடும்பத்தினருக்கும் கொள்கைகள் வேறு வேறாக இருந்தாலும், இரு குடும்பத்துக்கும் இடையே ஆழமான நட்பு நீடித்தது.
    நல்லவர்களை நாம் சார்ந்திருந்தால் நமக்கும் நல்லதே நடக்கும்.
    அதுபோல் ஆத்திகக் குடும்பத்தைச் சேர்ந்த அங்கம்மாளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த இந்த நாத்திகக் குடும்பத்துக்கும் மகா பெரியவா அருளால் ஒரு நல்லது நடந்தது. நாத்திக நண்பரின் மனைவிக்கு ஒரு இன்டர்வியூ வந்தது. எங்கிருந்து தெரியுமா?
    காஞ்சிபுரத்தில் இருக்கிற அரசுக் கல்வித் துறை அலுவலகத்தில் இருந்து. அங்கே, ஆசிரியைப் பணிக்கான இன்டர்வியூ.
    நாத்திக நண்பரின் மனைவிக்குத் தனியே காஞ்சிபுரம் சென்று இன்டர்வியூ அட்டென்ட் செய்வதில் சற்றே பயம். அந்த அளவுக்கு வெளியிடங்களுக்குச் சென்று பழக்கம் இல்லை. இந்த விவரம் நாத்திக நண்பர் மூலம் ராமபிரசாத்துக்குத் தெரிய வந்தது.
    தான் அலுவலகம் செல்லவில்லை என்றாலும், அலுவலகம் தொடர்பான வேலைகளை சிரத்தையுடன் கவனித்து வரும் நண்பருக்கு உதவ எண்ணினார். விஷயத்தைத் தன் மனைவி அங்கம்மாளிடம் சொன்னார். ‘அவர் மனைவியுடன் நீயும் காஞ்சிக்குச் சென்று வா’ என்று கேட்டுக் கொண்டார்.

    ‘தங்களுக்கு மிகவும் உதவுகிறவர்கள் ஆயிற்றே... இவர்களுக்கு நாம் உதவாமல் வேறு யார் உதவுவார்கள்?’ என்று அங்கம்மாளும் சம்மதித்தார். இன்டர்வியூ தினத்தில் அந்தப் பெண்மணியை பேருந்தில் காஞ்சிபுரம் கூட்டிப் போனார்.
    காலையில் பதினோரு மணி வாக்கில் இன்டர்வியூவுக்கான நேரம் குறித்திருந்தார்கள். உரிய நேரத்தில் அங்கம்மாளும், நாத்திக நண்பரின் மனைவியும் காஞ்சிபுரம் கல்வித் துறை அலுவலகத்துக்குச் சென்று விட்டார்கள். ஆனாலும், குறிப்பிட்ட நேரத்தில் அழைப்பு வரவில்லை. பிறகுதான் சொன்னார்கள் - ‘உங்களுக்கான நேர்முகத் தேர்வு மாலை நாலரை மணிக்கு மாற்றப்பட்டிருக்கிறது’ என்று. இருவரும் திடுக்கிட்டுப் போனார்கள்.

    ‘சென்னையாக இருந்தால், வீட்டுக்குப் போய் விட்டுப் பிறகு இன்டர்வியூக்கு வரலாம். ஆனால், தற்போது இருப்பது காஞ்சிபுரம் ஆயிற்றே... தெரிந்தவர்கள் யாரும் இங்கு இல்லையே’ என்று இருவரும் குழம்பினார்கள்.
    ‘மாலை வரை எப்படி இந்த அரசாங்க அலுவலகத்திலேயே அமர்ந்திருப்பது? என்ன செய்யலாம்?’ என்று யோசித்தார் அங்கம்மாள். அப்போதுதான் அவருக்கு காஞ்சி மகா பெரியவா நினைவுக்கு வந்தார். ‘ஆகா... பெரியவா ஸ்ரீமடத்தில்தானே இப்போது இருப்பார். இந்த இடைப்பட்ட நேரத்தில் அவரைப் போய் தரிசிக்கலாமே’ என்று உற்சாகமானார்.

    நாத்திக நண்பரின் மனைவியைப் பார்த்துச் சொன்னார்: ‘‘சாயங்காலம் வரைக்கும் நாம இங்கே உக்கார முடியாது. நாம எங்கேயாவது வெளியிலதான் போயாகணும். இங்கே பக்கத்துல காஞ்சி மடம் இருக்கு. அங்கே எங்கள் குருவான ஆச்சார்யரை தரிசிக்கப் போகலாம்னு எனக்குத் தோணுது. நீயும் வரியா?’’
    நாத்திக எண்ணம் கொண்டவரைக் கட்டாயப்படுத்திக் கூப்பிட முடியாது என்பதால், நாசூக்காகக் கூப்பிட்டுப் பார்த்தார்.
    அந்தப் பெண்மணி சொன்னார்: ‘‘நீங்க உள்ளே போயிட்டு வாங்க... திரும்பி வர்ற வரைக்கும் நான் வெளியிலயே இருக்கேன்.’’
    ‘‘சரி... வாங்க புறப்படலாம்’’ என்று இருவரும் காஞ்சி ஸ்ரீமடத்தை நோக்கி நடந்தார்கள். அடுத்த சில நிமிடங்களில் இருவரும் ஸ்ரீமடத்தின் வாசலில் இருந்தார்கள்.  ஸ்ரீமடத்தின் வாசலில் அப்போது திண்ணைகள் போன்ற அமைப்பு இருந்தது. நாத்திகரின் மனைவி ஒரு திண்ணையில் உட்கார்ந்து கொண்டார்.

    ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்
    ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

    மனம் நிறைய பூரிப்புடன், கைகளைக் குவித்துக் கொண்டு ஸ்ரீமடத்தினுள் நுழைந்தார் அங்கம்மாள்.  கூட்டம் அதிகமில்லை. வராண்டா மாதிரி காணப்பட்ட ஒரு நீளமான இடத்தில் மகா பெரியவா உட்கார்ந்திருந்தார். மகானுக்கு முன்னால் சுமார் முப்பது பக்தர்கள் அமர்ந்திருந்தார்கள். கண்ணுக்கு நேராகப் பெரியவாளைத் தரிசித்தவுடன் நெகிழ்ந்து போனார் அங்கம்மாள். கன்னங்களில் மாறி மாறி அறைந்து கொண்டு மகானின் திருமுகம் பார்த்தார். அப்போது பெரியவா என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?
    ஆற்காட்டில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு:

    ஆற்காடு டவுன் போலீசார் நேற்று காலை ஆற்காட்டில் உள்ள செய்யார் பைபாஸ் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் ஆற்காடு மேனேஜர் தெருவைச் சேர்ந்த பாலாஜி (வயது 24), திமிரியை அடுத்த மோசூர் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (21) என்பதும், ரத்தனகிரி மற்றும் ஆற்காடு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடியதும் தெரியவந்தது.

    அவர்களை போலீசார்கைது செய்து, அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
    அரக்கோணம் அருகே வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த கைனூர் ஊராட்சிக்கு உட்பட்ட செந்தில் நகர் குடியிருப்பு பகுதியில் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக மழைவெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் அரக்கோணம் - திருத்தணி பிரதான சாலையில் மங்கம்மாபேட்டை மேம்பாலம் அருகே நாகலம்மன் நகர் பகுதியில் திடீரென பொதுமக்கள் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு இரு பக்கங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து அங்கு வந்த அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் கைனூர் ஊராட்சிக்கு உட்பட்ட செந்தில் நகர் குடியிருப்பு பகுதியில் மழை காலங்களில் மழை நீர் தேங்காமல் இங்குள்ள கால்வாய் வழியாக வடமாம்பாக்கம் ஏரிக்கு சென்றடையும்.

    ஆனால் கால்வாய் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மழைநீர் வெளியேராமல் இப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நிரந்தரமாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கும் வரையில் மறியலை கைவிடமாட்டோம் என்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்ஸ்பெக்டர் சீனிவாசன் கூறியதை அடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஆவூர்:

    குளத்தூர் தாலுகா, மாத்தூர் அருகே உள்ள ராசாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 50). விவசாயி. இவரது மனைவி வனஜா (45). இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தங்களது இரு மகன்களுடன் ஹாலில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் அவர்களது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த வனஜாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதனால் திடுக்கிட்டு எழுந்த வனஜா மர்ம நபரிடமிருந்து தங்க செயினை இறுக பிடித்து சத்தம் போட்டார். சதாசிவம் மற்றும் அவர்களது மகன்கள் எழுந்து மின்விளக்கை போடுவதற்குள் மர்மநபர் செயினை அறுத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து சதாசிவம் மாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பிரமணியன், மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சதாசிவம் வீட்டிற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு பெண்ணிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    மொரப்பூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மொரப்பூர்:

    மொரப்பூர் அருகே உள்ள வகுத்தானூரை சேர்ந்தவர் மாயக்கண்ணன், விவசாயி. இவரது மனைவி வள்ளி (வயது 42). இவர் கடந்த 6 மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வள்ளி நேற்று வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடைந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு மொரப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது வள்ளி ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீஸ்-இன்ஸ்பெக்டர் மஞ்சுளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ராணிப்பேட்டை பெல் அருகே பனைமரங்களை வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை பெல் அருகே உள்ள பெல் காலனி, மேட்டுத்தெங்கால் தார்சாலையில் பாட்டை புறம்போக்கு நிலத்தில் இருந்த 15 பனைமரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டன. இதுகுறித்து நரசிங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமார் சிப்காட் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பனைமரங்களை வெட்டியதாக நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான்பால் (வயது 44), தினகரன் (42) மற்றும் வடகால் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (48) ஆகிய 3 பேரை சிப்காட் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தென்னிந்திய நடிகையாக வலம் வரும் பிரியாமணி தன்னைப் பற்றி வெளிவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    பருத்திவீரன் படம் மூலம் பல விருதுகளை அள்ளிக்குவித்த நடிகை பிரியாமணி, தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். தெலுங்கில் இரண்டு படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் அவர் நடித்து முடித்துள்ளார். மேலும் அட்லீ இயக்கும் ஷாருக்கான் நடிக்கும் இந்திப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியாமணி நடித்து வருகிறார்.

    பிரியாமணி
    கணவருடன் பிரியாமணி

    இதற்கிடையில் பிரியாமணி தனது கணவர் முஸ்தப்பா ராஜூவை பிரிந்து வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தீபாவளி தினத்தில் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பிரியாமணி தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக வெளியான செய்திகளுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
    வாணாபாடியில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே உள்ள வாணாபாடி கிராமத்தை சேர்ந்தவர் பிரியா (வயது 21). இவருடைய கணவர் சரத்குமார். இவர்களுக்கு கார்த்தி (2½) என்ற மகன் உள்ளான். பிரியாவிற்கு திருமணம் ஆகி சுமார் 4½ ஆண்டுகள் ஆகிறது.

    இந்த நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியா தனது தாய் வீடான வாணாபாடி கிராமத்தில் வசித்து வந்தார். குழந்தை கணவர் வீட்டில் வளர்ந்து வருகிறது. குழந்தையை பார்க்க பிரியா, எடப்பாளையம் பகுதியில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்றார். அப்போது பிரியாவை சரத்குமார் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரியா வாணாபாடியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொண்டார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி சுமார் 4½ ஆண்டுகளே ஆனதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பூங்கொடி விசாரணை நடத்தி வருகிறார்.
    அஞ்செட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அஞ்செட்டி அடுத்த கொப்பக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 35). விவசாயி. இவர் நேற்று முன்தினம் ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். கொப்பக்கரை வனச்சாலையில் உள்ள ஆலமரத்து வளைவில் வந்த போது ஆட்டோ, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளில் சிக்கி ஏழுமலை சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    மின்வாரிய அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.27 லட்சம் மோசடி ெசய்ததாக அரசு பள்ளி ஆசிரியை உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா மின்னல் கிராமத்தை சேர்ந்தவர் அருளானந்தம். இவரது மனைவி நரசிங்கபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். அதே பள்ளியில் அவருடன் ஆசிரியையாக வேலை பார்ப்பவர் விஜயலட்சுமி (வயது 42). இவருக்கும், அருளானந்தத்தின் குடும்பத்தினருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் விஜயலட்சுமியின் தந்தையும் ரெயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான மணி (65) என்பவர் அருளானந்தத்திடம், உங்களது மகன், மகளுக்கு மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக வேலை வாங்கி தருவதாக கூறினார்.

    இதை நம்பிய அருளானந்தம் ரூ.27 லட்சத்தை கடந்த 2015-ம் ஆண்டு மணியிடம் கொடுத்துள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை மணி, விஜயலட்சுமி தரப்பினர் திருப்பி கொடுக்கவில்லை. இவர்களுக்கு புதுச்சேரியை சேர்ந்த குகன் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார். வேலை வாங்கி தராததால் அருளானந்தம் பணத்தை மீண்டும் திருப்பி கேட்கவே அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து அவர் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தார். புகாரின்பேரில் மணி உள்பட 3 பேர் மீது இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஓசூரில் பர்னிச்சர் கடையில் ரூ.1½ லட்சம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் தின்னூர் லட்சுமி நரசிம்மநகர் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 42). இவர், தின்னூர் பிரகாஷ் நகர் பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். தீபாவளியையொட்டி கடையில் மும்முரமாக விற்பனை நடந்தது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று இரவு இவரது கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்து, பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம், கண்காணிப்பு கேமராக்கள், டி.வி., ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பொருட்களையும் திருடிச் சென்றனர்.

    இதுகுறித்து சொக்கலிங்கம் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
    ராணிப்பேட்டை அருகே கணவர் திட்டியதால் மனவேதனையடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த வாணாபாடி கிராமம் தோப்பு தெருவை சேர்ந்தவர் சரத்குமார். இவரது மனைவி பிரியா (வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 4 வருடம் ஆகிறது. தம்பதியினருக்கு 2 வயதில் கார்த்தி என்ற மகன் உள்ளான்.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் பிரியா மகனை கணவரிடம் விட்டு விட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் பிரியா தனது குழந்தையை பார்ப்பதற்காக மீண்டும் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது சரத்குமார் பிரியாவை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த பிரியா மண்எண்ணெயை எடுத்து தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டார். உடனே அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×