என் மலர்
செய்திகள்

கைது
ராணிப்பேட்டை பெல் அருகே பனைமரங்களை வெட்டிய 3 பேர் கைது
ராணிப்பேட்டை பெல் அருகே பனைமரங்களை வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை பெல் அருகே உள்ள பெல் காலனி, மேட்டுத்தெங்கால் தார்சாலையில் பாட்டை புறம்போக்கு நிலத்தில் இருந்த 15 பனைமரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டன. இதுகுறித்து நரசிங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமார் சிப்காட் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பனைமரங்களை வெட்டியதாக நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான்பால் (வயது 44), தினகரன் (42) மற்றும் வடகால் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (48) ஆகிய 3 பேரை சிப்காட் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






