என் மலர்
செய்திகள்

கைது
ஆற்காட்டில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
ஆற்காட்டில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ஆற்காடு டவுன் போலீசார் நேற்று காலை ஆற்காட்டில் உள்ள செய்யார் பைபாஸ் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் ஆற்காடு மேனேஜர் தெருவைச் சேர்ந்த பாலாஜி (வயது 24), திமிரியை அடுத்த மோசூர் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (21) என்பதும், ரத்தனகிரி மற்றும் ஆற்காடு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடியதும் தெரியவந்தது.
அவர்களை போலீசார்கைது செய்து, அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
Next Story






