என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ராணிப்பேட்டை அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

    ராணிப்பேட்டை அருகே கணவர் திட்டியதால் மனவேதனையடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த வாணாபாடி கிராமம் தோப்பு தெருவை சேர்ந்தவர் சரத்குமார். இவரது மனைவி பிரியா (வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 4 வருடம் ஆகிறது. தம்பதியினருக்கு 2 வயதில் கார்த்தி என்ற மகன் உள்ளான்.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் பிரியா மகனை கணவரிடம் விட்டு விட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் பிரியா தனது குழந்தையை பார்ப்பதற்காக மீண்டும் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது சரத்குமார் பிரியாவை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த பிரியா மண்எண்ணெயை எடுத்து தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டார். உடனே அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×