என் மலர்
ராணிப்பேட்டை
முதல்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக 3 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை :
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் சுப்பன்னமுதலி தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 66). சோளிங்கரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அனுராதா (57). இவர்களுக்கு விஷ்ணு (29), பரத் (28) என்ற 2 மகன்கள். இதில் மூத்த மகன் விஷ்ணு பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இளைய மகன் பரத் கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்தார். தற்போது அவர் வீட்டில் இருந்தப்படியே பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்தநிலையில் ராமலிங்கத்தின் தம்பி சிவகுமார், தனது அண்ணனை பார்க்க நேற்று மாலை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் படுக்கையறையில் ராமலிங்கம், அவரது மனைவி அனுராதா ஆகிய இருவரும் தனித்தனியாக தூக்கில் பிணமாக தொங்கினர். மற்றொரு அறையில் பரத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதை கண்டு சிவகுமார் அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் ராமலிங்கம் மற்றும் பரத் ஆகிய இருவரின் செல்போன்களை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரக்கோணம் அருகே தக்கோலத்தில் விவசாயக் கூலித் தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, ராணிப்பேட்டை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 27). விவசாயக் கூலித் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த எல்லப்பன் என்ற மண்ணாங்கட்டி என்பவருக்கும் நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் பிரச்சினை இருந்தது.
கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ம் தேதி ஏற்பட்ட தகராறில் எல்லப்பன் என்ற மண்ணாங்கட்டி, தான் வைத்திருந்த சூரி கத்தியால் வெங்கடேசனை குத்திக் கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிந்து எல்லப்பன் என்ற மண்ணாங்கட்டியை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதன் மீதான விசாரணை ராணிப்பேட்டை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் ராணிப்பேட்டை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தீர்ப்பு வழங்கினார்.
அதில் எல்லப்பன் என்ற மண்ணாங்கட்டிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சங்கர் ஆஜராகி வாதாடினார்.

சிப்காட் அருகே அண்ணி திட்டியதால் வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே உள்ள லாலாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 28). இவர் சரிவர வேலைக்கு செல்லாததால், அவரை, அவரது அண்ணி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சதீஷ் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி, வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட் அருகே வேலைக்கு போகத வாலிபரை அண்ணி திட்டியதால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே உள்ள லாலாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 28). இவர் சரிவர வேலைக்கு செல்லாததால், அவரை, அவரது அண்ணி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சதீஷ் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி, வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரிக்கல் ஏரிக்கரையில் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலத்தில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கரிக்கல் கிராமத்தில் 25 ஆண்டுகளுக்குபிறகு ஏரி நிரம்பி கோடி போகிறது. ஏரியின் மதகுகள், கரைகள், ஏரி கால்வாய்கள் ஆக்கிரமிப்பு மற்றும் முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது நிரம்பியுள்ள ஏரி கரையில் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாக வெளியேறுகிறது.
இதனால் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்
சோளிங்கர்-அரக்கோணம் செல்லும் நெடுஞ்சாலையில் கரிக்கல் பஸ் நிறுத்தம் அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சோளிங்கர் மற்றும் கொண்ட பாளையம் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் நடந்த மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் காரணமாக அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி பஸ்களும் ஒரு மணி நேரம் காத்திருந்தன.
இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை கோட்டாட்சியர் பூங்கொடி சம்பந்தப்பட்ட கரிக்கல் ஏரிக்கு சென்று கரை உடைந்த பகுதி மற்றும் கடைவாசல் வெள்ளப்பெருக்கு பகுதிகளை பார்வையிட்டார். சேதமான பகுதியை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட சுகாதார ஆய்வாளர்களின் போராட்டத்தை அரசும், துறையும், பரிசீலிக்காமல், கைது நடவடிக்கை செய்ததை கண்டித்து ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை:
ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட சுகாதார ஆய்வாளர்களின் போராட்டத்தை அரசும், துறையும், பரிசீலிக்காமல், கைது நடவடிக்கை செய்ததை கண்டித்து, அனைத்து ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக, ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சுகாதார அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் மோகன மூர்த்தி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட சுகாதார ஆய்வாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் கு.பழனி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சரவணராஜ், துணை இயக்குனரின் நேர்முக தொழில்நுட்ப உதவியாளர் பிரேம் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
நாகப்பட்டினம் மாவட்டம் ரத்தினமங்கலத்தை சேர்ந்தவர் மாதவன் (வயது 30), கூலித்தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர், அரக்கோணத்தை அடுத்த அம்பிரிஷிபுரம் பகுதியில் உள்ள ஒரு குடிநீர் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று காலை குளிப்பதற்காக குளியல் அறையின் அருகில் சென்றபோது, அங்கிருந்த குழாய் மீது மின்வயர் அறுந்து கிடந்ததை பார்க்காமல் குழாயை தொட்டுள்ளார். அப்போது மாதவன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் அங்கு வந்த அரக்கோணம் டவுன் போலீசார் மாதவனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை பைபாஸ் சாலையில் உள்ள பாலாறு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த வாலிபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை:
சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 26). இவர் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில், சென்னையிலிருந்து, ஆரணி நோக்கி சென்று கொண்டிருந்தார். ராணிப்பேட்டை பைபாஸ் சாலையில் உள்ள பாலாறு மேம்பாலத்தில் சென்றபோது அடையாளம் செய்த வாகனம் மோதி உள்ளது.
இதில் படுகாயமடைந்த வினோத் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் இருக்கும் கமல்ஹாசனுக்கு பதிலாக பிரபல நடிகை ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்று தொகுத்து வழங்கி இருக்கிறார்.
தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அவருடைய எளிமையான அணுகுமுறையும், விஷய ஞானமும் இந்த நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்களைக் கொண்டுவந்து சேர்த்தது.
இந்நிலையில் கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவர் தொகுத்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலுக்குப் பதில் தொகுப்பாளராக நியமிக்க, ரம்யா கிருஷ்ணன், சூர்யா, விஜய் சேதுபதி, மாதவன், ஸ்ருதிஹாசன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது.

ரம்யா கிருஷ்ணன்
இறுதியாக ரம்யா கிருஷ்ணன் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், இன்று வெளியான புரமோவில் வீடியோ மூலம் போட்டியாளர்களிடம் பேசிய கமல், எனக்கு உதவியாக எனது தோழி ரம்யா கிருஷ்ணன் எனக்கு உதவியாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறி அறிமுகம் படுத்தி இருக்கிறார்.
ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணிப்பேட்டை அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை:
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது26). இவர் நேற்று மாலை சென்னையில் இருந்து ஆரணி நோக்கி பைக்கில் சென்றார்.
ராணிப்பேட்டை அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தலையில் பலத்த காயமடைந்த வினோத் குமாரை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
பள்ளத்தூர் போலீஸ் சரகம் வட குடியைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 65).இவர் அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கத்தோடு கல்லுக்கால்களை ஊன்றியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் ராஜ்மோகன் ஆக்கிரமிப்பு குறித்து விசாரணை நடத்தியபோது கருப்பையா தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், பள்ளத்தூர் போலீசார் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர்.
ராணிப்பேட்டை சிப்காட் பெல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று பெல் நிறுவனத்தின் நுழைவு வாயில் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை சிப்காட் பெல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று பெல் நிறுவனத்தின் நுழைவு வாயில் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிஏபி ஸ்டாப் யூனியன் பொதுச்செயலாளர் பாலாஜி, எம்ப்ளாயீஸ் யூனியன் பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், இஜிடியூ.ஐஎன்டியூசி துணை தலைவர் மோகன் குமார் ஆகியோர் மற்றும் சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் உண்ணாவிரத போட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய போனஸ் வழங்காமலும், பெல் நிறுவனத்தின் நிதி நிலைமை மற்றும் வளர்ச்சி குறித்து தொழிற்சங்க தலைவர்களுடன் விவாதிக்க ஜே.சி.எம் ஐ உடனடியாக கூட்ட வலியுறுத்தி போராட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.
அதன் தொடர்ச்சியாக இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.