என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    பொங்கல் பரிசு தொகையினை வழங்கிட வேண்டும் மற்றும் சிலிண்டர், மோட்டார் சைக்கிளுக்கு காய்கறிகளை மாலையாக அணிந்து கோ‌ஷங்களை எழுப்பி அ.தி.மு.க.வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து ராணிப்பேட்டை முத்துக்கடையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால், முன்னாள் எம்.எல்.ஏ சோளிங்கர் சம்பத், முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை, மாவட்ட துணை செயலாளர் சம்மந்தம், மாவட்ட பொருளாளர் ஷாபூதீன், மாவட்ட மகளிரணி செயலாளர் ராதிகா, மாவட்ட ஜெ பேரவை செயலாளர் பூண்டி பிரகாஷ், ஜெ பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ராணிப்பேட்டை நகர செயலாளர் கே.பி.சந்தோ‌ஷம் வரவேற்றார். இந்த ஆர்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்தும், பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரிகளை குறைத்திட வேண்டும்.

    காய்கறி விலைவாசி உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு கண்டித்தும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும், குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும்.

    பொங்கல் பரிசு தொகையினை வழங்கிட வேண்டும் மற்றும் சிலிண்டர், மோட்டார் சைக்கிளுக்கு காய்கறிகளை மாலையாக அணிந்து கோ‌ஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ சினிவாசன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் முனுசாமி, நகர செயலாளர் மோகன், பேரூர் செயலாளர்கள் அம்மூர் தினகரன், காவேரிப்பாக்கம் மஞ்சுநாதன், ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், பெல் கார்த்திகேயன், ராஜா, ஏ.எல்.விஜயன் உள்பட மாவட்டத்தில் உள்ள நகர ஒன்றிய பேரூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
    ரத்தினகிரி அருகே மது வாங்கி தராததால் நண்பனை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராணிப்பேட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    ராணிப்பேட்டை:

    ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகில் உள்ள தென்நந்தியாலம் காலனி ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சோட்டாபாய் (வயது 32). இவரும், நண்பர்களான மேல்விஷாரம் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நண்பர் முகம்மது ரபீக் (20), மகபூப்பாஷா (35) ஆகியோரும் 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந்தேதி தென்நந்தியாலம் பகுதியில் உள்ள ஒரு மதுபானக்கடை அருகில் மது குடித்தனர்.

    அப்போது இன்னும் கூடுதலாக மது வாங்கி தரச்சொல்லி முகம்மது ரபீக்கை, மகபூப்பாஷா வற்புறுத்தினார். அதற்கு, முகம்மதுரபீக் இப்போது தன்னிடம் பணம் இல்லை, நாளைக்கு மதுபானம் வாங்கி தருகிறேன், என்றார். அதை ஏற்காத மகபூப்பாஷா அவரிடம் தகராறில் ஈடுபட்டார். அதில் ஆத்திரம் அடைந்த மகபூப்பாஷா தான் வைத்திருந்த கத்தியை எடுத்து முகம்மதுரபீக்கை குத்திக் கொலை செய்தார். கொலை சம்பவம் தொடர்பாக ரத்தினகிரி போலீசார் மகபூப்பாஷாவை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கொலை தொடர்பான வழக்கு விசாரணை ராணிப்பேட்டை கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று ராணிப்பேட்டை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஜான் சுந்தர்லால்சுரேஷ் வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தார்.

    மகபூப்பாஷா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சங்கர் ஆஜராகி வாதாடினார்.

    நெமிலி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெமிலி:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை டெம்பிள் சிட்டி பகுதியில் உள்ள நரசிங்கபுரம் பெரிய தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 50). தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், இதனால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற வெங்கடேசன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் சுற்று வட்டாரப் பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் தனது மாமியார் ஊரான சயனாபுரம் சுடுகாட்டின் சுற்றுச் சுவர் அருகே, தான் அணிந்திருந்த வேட்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அவரது மனைவி யசோதா நெமிலி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ராணிப்பேட்டை அருகே விபத்தில் மகன் இறந்த அதிர்ச்சியில் தாயார் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் கிராமத்தினரும், உறவினர்களும் சோகத்தில் மூழ்கினர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாணாபாடி பகுதியைச் சேர்ந்தவர் ஞானம்மாள் (வயது 70). இவருக்கு புனிதா என்ற மகளும், அருள் (வயது 35) என்ற மகனும் உண்டு. கட்டிட மேஸ்திரியான அருளுக்கு திருமணமாகி மேனகா என்ற மனைவி உள்ளார். அவர்களுக்கு ஜிந்தியா (8) என்ற மகளும், மனோரஞ்சன் (6) என்ற மகனும் உள்ளனர்.

    அருள் 7-ந்தேதி ஆற்காடு அருகில் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று அருள் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பிரேதப் பரிசோனைக்குப் பின் அருளின் உடல் நேற்று மதியம் 12 மணியளவில் வாணாபாடியில் உள்ள அவரின் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள், கிராமத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    விபத்தில் பலியான மகனின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு ஞானம்மாள் கதறி அழுது கொண்டிருந்தார். அப்போது திடீரென அதிர்ச்சியில் மூர்ச்சையாகி கீழே விழுந்த ஞானம்மாளை உறவினர்கள் மீட்டு அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திக்குக் கொண்டு சென்றனர்.

    அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே ஞானம்மாள் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டதாகக் கூறினர். இதனால் குடும்பத்தினரும், உறவினர்களும் சோகத்தில் மூழ்கினர்.
    அரக்கோணம் அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்த காஞ்சிபுரம் கல்லூரி மாணவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனாபுரம் புதுகண்டிகையை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 18). காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

    நேற்று மாலை வகுப்புகள் முடிந்ததும் கல்லூரியில் இருந்து புறப்பட்டு வீட்டுக்கு வருவதற்காக ஒரு தனியார் பஸ்சில் ஏறி பயணம் செய்தார்.

    பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சில மாணவர்கள் படியில் நின்று பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் தினேஷ்குமாரும் பஸ் படிகட்டில் தொங்கியவாறு பயணம் செய்தார்.

    பஸ் பள்ளூர் பருவமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தினேஷ்குமார் திடீரென பஸ் படிகட்டில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தினேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடந்த மாதம் வேலூர் அடுத்த பெருமுகையில் தனியார் பஸ் விபத்துக்குள்ளாகியது. இதில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த 13 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஆற்காடு பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ் படிகட்டில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் செய்வது தொடர்கிறது. கூடுதல் பஸ்கள் இயக்கியும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    ஆற்காட்டில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு:

    ஆற்காடு பகுதியில் ஆற்காடு டவுன் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு முட்புதரில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் முன்னுக்கு புரணாக பதில் கூறவே போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் ஆற்காடு அர்ச்சனா நகர் பகுதியைச் சேர்ந்த எலி என்ற சதீஷ் (வயது 26), என்பதும், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராணிப்பேட்டை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி 3,01,753 வாக்காளர்கள் உள்ளனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட 5 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலெக்டர் அலுவலகத்தில் வெளியிட்டார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களிலும் வெளியிடப்பட்டது.

    இந்த வாக்காளர் பட்டியல் படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3,01,753 வாக்காளர்கள் உள்ளனர். நகராட்சி மற்றும் பேரூராட்சி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:-

    நகராட்சிகள்

    அரக்கோணம் :- ஆண்கள்- 32,330, பெண்கள்- 34,515, மொத்தம்- 66845.

    ஆற்காடு :- ஆண்கள்- 22,468, பெண்கள்- 24,519, மூன்றாம் பாலினத்தவர்- 1, மொத்தம்- 46,988.

    மேல்விஷாரம்:- ஆண்கள்- 19,500, பெண்கள்- 20,099, மூன்றாம் பாலினத்தவர்- 1, மொத்தம்- 39,600.

    ராணிப்பேட்டை:- ஆண்கள்- 19,623, பெண்கள்- 22,062 மூன்றாம் பாலினத்தவர்- 4, மொத்தம்- 41,689.

    வாலாஜா:- ஆண்கள்- 12802, பெண்கள்- 13,986, மூன்றாம் பாலினத்தவர்- 2, மொத்தம்- 26,790.

    மாவட்டம் முழுவதிலும் நகராட்சி பகுதிகளில் 1,06,723 ஆண் வாக்காளர்கள், 1,15,181 பெண் வாக்காளர்கள், 8 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,21,912 வாக்காளர்கள் உள்ளனர்.

    பேரூராட்சிகள்

    அம்மூர்:- ஆண்கள்- 5,188, பெண்கள்- 5,560, மூன்றாம் பாலினத்தவர்- 2, மொத்தம்- 10,750.

    கலவை:- ஆண்கள்- 3,733, பெண்கள்- 3,975, மொத்தம்- 7,708.

    காவேரிப்பாக்கம்:- ஆண்கள்- 5,855, பெண்கள்- 6,317, மொத்தம்- 12,172.

    நெமிலி:- ஆண்கள்- 4,489, பெண்கள்- 4,820, மூன்றாம் பாலினத்தவர்-1, மொத்தம்- 9,310.

    பனப்பாக்கம்:- ஆண்கள்- 4,869, பெண்கள்- 5,208, மொத்தம்- 10,077.

    தக்கோலம்:- ஆண்கள்- 4,581, பெண்கள்- 4,817, மொத்தம்- 9,398.

    திமிரி:- ஆண்கள்- 6,523, பெண்கள்- 6,956, மூன்றாம் பாலினத்தவர்- 2், மொத்தம்- 13,481.

    விளாப்பாக்கம்:- ஆண்கள்- 3,471, பெண்கள்- 3,474, மொத்தம்- 6,945.

    மாவட்டம் முழுவதிலும் பேரூராட்சி பகுதிகளில் 38,709 ஆண் வாக்காளர்கள், 41,127 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்-5, ஆக மொத்தம் 79,841 வாக்காளர்கள் உள்ளனர்.

    வாக்காளர் பட்டியல் வெளியீட்டின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சித் தேர்தல்) மரியம் ரெஜினா மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
    ராணிப்பேட்டை நகராட்சி 19,623 ஆண் வாக்காளர்கள், 22,062 பெண் வாக்காளர்கள், இதர 4 என 41,689. வாலாஜா நகராட்சி 12,802 ஆண் வாக்காளர்கள், 13,986 பெண் வாக்காளர்கள், இதர 2 என மொத்தம் 26,790 ஆகும்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட 5 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்கள் 01.11.2019 அன்று வெளியிடப்பட்ட சட்டமன்ற வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளாட்சி அமைப்பு அலுவலகத்திலும் பட்டியல் வெளியிடப்பட்டது.

    ராணிப்பேட்டை மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர்களின் விவரம்:-

    அரக்கோணம் நகராட்சி 32,330 ஆண் வாக்காளர்கள் 34,515 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 66,845. ஆற்காடு நகராட்சி 22,468 ஆண் வாக்காளர்கள், 24,519 பெண் வாக்காளர்கள், இதர 1 என மொத்தம் 46,988, மேல்விஷாரம் நகராட்சி 19,500, ஆண் வாக்காளர்கள் 20,099, பெண் வாக்காளர்கள் இதர 1 என மொத்தம் 36,900.

    ராணிப்பேட்டை நகராட்சி 19,623 ஆண் வாக்காளர்கள், 22,062 பெண் வாக்காளர்கள், இதர 4 என 41,689. வாலாஜா நகராட்சி 12,802 ஆண் வாக்காளர்கள், 13,986 பெண் வாக்காளர்கள், இதர 2 என மொத்தம் 26,790 ஆகும்.

    அம்மூர் பேரூராட்சியில் 5,188 ஆண் வாக்காளர்கள், 5,560 பெண் வாக்காளர்கள், இதர 2 என மொத்தம் 10,750. கலவை பேரூராட்சியில் 3,733 ஆண் வாக்காளர்கள், 3,975 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 7,708. காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் 5,855 ஆண் வாக்காளர்கள், 6,317 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 12,172. நெமிலி பேரூராட்சியில் 4,489 ஆண் வாக்காளர்கள், 4,820 பெண் வாக்காளர்கள், இதர 1 என மொத்தம் 9,310. பனப்பாக்கம் பேரூராட்சியில் 4,869 ஆண் வாக்காளர்கள், 5,208 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 10,077. தக்கோலம் பேரூராட்சியில் 4,581 ஆண் வாக்காளர்கள், 4,817 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 9,398. திமிரி பேரூராட்சியில் 6,523 ஆண் வாக்காளர்கள், 6,956 பெண் வாக்காளர்கள், இதர 2 என மொத்தம் 13,481. விளாப்பாக்கம் 3,471 ஆண் வாக்காளர்கள், 3,474 பெண் வாக்காளர்கள், இதர 5 என மொத்தம் 79,841 ஆகும்.
    ஆற்காடு அருகே ஆசிரியர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த தாயனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 36). தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று மாலை இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் உறவினர் வீட்டுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றார். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நள்ளிரவு வீட்டிற்கு வந்தார்.

    வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டில் வைத்திருந்த 8 பவுன் நகையை மர்ம கும்பல் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு ஜெயக்குமார் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் வழக்கு பதிவு செய்து திருட்டு கும்பலை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை அருகே மோட்டார்சைக்கிள் திருடப்பட்ட சம்பவம் குறித்து 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் உள்ள பாலாறு மேம்பாலம் அருகில் நேற்று ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்து கொண்ட 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் வேலூர் காகிதப்பட்டறை பகுதியை சேர்ந்த சிவா (24), ராஜேஷ் (22) என்பதும், மோட்டார் சைக்கிள் திருடர்கள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 5 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    அரக்கோணம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம்:

    சோளிங்கரை அடுத்த புத்தேரி பகுதியை சேர்ந்தவர் அருணகிரி (வயது 73). அரக்கோணம் அருகே உள்ள பெருங்களத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் தனது பேரனுக்கு நேற்று மதியம் கல்லூரி கட்டணம் செலுத்திவிட்டு, கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அருணகிரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ராணிப்பேட்டை நகராட்சி என்ஜினீயர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அவரது வீட்டில் இன்று சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் லாலாப்பேட்டையை சேர்ந்தவர் செல்வகுமார். ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது வீட்டிற்கு இன்று காலை திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துறை துணைக்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவாக லஞ்ச ஓழிப்பு போலீசார் வந்தனர்.

    வீட்டில் இருந்தவர்களை வெளியே செல்ல அனுமதி மறுத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடந்து வருகிறது.

    செல்வகுமார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலூர் மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்தார்.

    அப்போது அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அவரது வீட்டில் இன்று சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
    ×