என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முதல் - அைமச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நேற்று ராணிப்பேட்டை பள்ளி மைதானத்தில் நடைப்பெற்றது.

    போட்டியை மாவட்ட அளவிலான தடகள போட்டியினை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முதன்மை கல்வி அலுவலர் உஷா வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு 100மீ, 200மீ, 400மீ ஓட்டத்தினை அமைச்சர் காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஞானசேகரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செந்தில்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், நகரமன்ற நகரமன்ற தலைவர்கள் ஹரிணி (வாலாஜா) அமீன் (மேல்விஷாரம்) துணை தலைவர் ரமேஷ்கர்ணா, நகர செயலாளர்கள் பூங்காவனம், தில்லை, நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், அப்துல்லா, வினோத், குமார், உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நகரசபை கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    அரக்கோணம்:

    அரக்கோணம் நகர சபை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மான நிறைவு பெற்ற நிலையில் அரக்கோணம் நகரில் பல்வேறு இடங்களில் பணிகள் நடக்காமல் குப்பை தேங்கி இருப்பதாகவும் நகராட்சி ஆணையாளர் மற்றும் சேர்மன் அதிகாரிகள் இது குறித்து அக்கறை காட்டுவதில்லை என திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் சரமாரியாக குற்றம் சாட்டினர்.

    மேலும் ஒவ்வொரு கூட்டத்திலும் அடுத்த கூட்டத்தில் சரி செய்யப்படும் என்று கூறி காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றம் சாட்டினர். இதனால் அரக்கோணம் நகர மன்றத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

    கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் நரசிம்மன் வாகன பராமரிப்புக்கு என்று லட்சக்கணக்கில் ஒதுக்கப்பட்டுள்ளது புதிதாக வாங்கப்பட்ட வாகனங்களுக்கு பராமரிப்பு செலவு ஏன் இவ்வளவு என கேள்வி எழுப்பினார்

    அதனைத் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர் பாபு தொடர்ந்து பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெறுவதில்லை அதிகாரிகள் காலம் தாழ்த்தி பணிக்கு வருகின்றனர் எனவும் நகர கூட்டத்தில் தெரிவிக்கப்படும் எந்த பணிகளும் சீராக நடைபெறுவதில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

    அதை தொடர்ந்து பேசிய திமுக கவுன்சிலர் துரை சீனிவாசன் அரக்கோணம் பகுதிகளில் இருக்கும் பொது மக்களுக்கான கழிப்பிடங்கள் திறக்கப்படுவதில்லை எனவும் பராமரிப்பின்றி அது சீர்கெட்டு கிடக்கின்றது அது சீரமைத்து பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு வழி செய்து விட வேண்டும் எனவும் அதிகாரிகள் பணிகளை சரி வர செய்வதில்லை குற்றம் சாட்டினார்.

    அதேபோல் திமுக கவுன்சிலர் ரசிகா கரீமுல்லா நகரத்தில் அதிக அளவில் நாய்கள் இருப்பதாகவும் நாய் தொல்லையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன எனவும் அதிமுக கவுன்சிலர் நித்யா ஷாம் தொடர்ந்து தங்கள் பகுதியில் கொசு மருந்து அடிப்பதற்கான புகை போக்கி வருவதில்லை எனவும் சுழற்சி முறை என்று கூறி அதை தவிர்த்து வருவதாகவும் இது குறித்து எந்த தகவலையும் அதிகாரிகள் தெரிவிப்பது இல்லை நகர மன்ற கூட்டத்தில் கேட்கும் பொழுது அனுப்புவதாக கூறி அளித்து விடுவதாக குற்றம் சாட்டினார்.

    அரக்கோணம் நகர மன்ற வளாகத்தில் அம்பேத்கர் வெண்கல சிலை வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தபோது சிலை வைப்பதற்கான முறையாக அது ஒப்புதல் பெற்ற பின்னரே வைக்க முடியும் எனஆணையர் லதா தெரிவித்தார். தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    • அமைச்சர் காந்தி பங்கேற்பு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகரில் ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நேற்று மாலை மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:- அண்ணாவுக்கு பிறகு திராவிட முன்னேற்ற கழகத்தை யார் வழிநடத்துவார்களோ என்று யோசித்து கொண்டு இருந்த நேரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பொறுப்பு ஏற்று சிறப்பான பல நல்ல திட்டங்களை தந்தார். அதன் பிறகு அவரின் எண்ணங்களையும்

    விட்டுப்போன திட்டங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி சாதனை புரிந்து வருகிறார். அவரை இந்தியாவே பாராட்டுகிறது. வெளிமாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முதல்வர் ஸ்டாலினையும் அவர் செயல்படுத்தும் மகத்தான திட்டங்களையும் பாராட்டி வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மார்ச் -1ம் தேதி பிறந்த நாள் அவரது பிறந்த நாளை ஆடம்பரமில்லாமல் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.பல்வேறு மாநில தலைவர்கள் வந்து பாராட்ட உள்ளனர். இவ்விழாவில் நமது ராணி ப்பேட்டை மாவட்டத்திலிருந்து திரளாக கலந்து கொள்ள வேண்டும். ஈரோடு இடைதேர்தல் பிரசாரத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.

    பின்னர் கூட்டத்தில் தீர்மா னங்கள் நிறைவேற்றபட்டன.கூட்டத்தில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, ஜி.கே.உலக பள்ளி இயக்குனர் சந்தோஷ் காந்தி, ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட பொருளாளர் ஏ.வி.சாரதி, மாவட்ட துணை செயலாளர்கள் துரைமஸ்தான், சிவஞானம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கண்ணையன், சுந்தரம், அசோகன், கலைமணி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி உள்பட ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் செயலாளர்கள், பிற அணி அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் அமுதா நன்றி நன்றி கூறினார்.

    • ஒருவர் கைது
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பல்லூர் பகுதியில் உள்ள கொசஸ் தலை ஆற்றில் கள்ளத்தனமாக மணல் கடத்தப்படுவதாக அரக்கோணம் கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது.

    அரக்கோணம் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் விரைந்து சென்ற வருவாய் அலுவலர்கள் மினி வேனில் மணல் கடத்திய நபரை கைது செய்தனர். பறிமுதல் செய்து மணலுடன் நெமிலி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

    இதேபோன்று கீழ் வெங்கடாபுரம் கிராமத்தில் ஒரு மாட்டு வண்டியும், பனப்பாக்கம் கிராமத்தில் 5 மாட்டு வண்டிகளும் கைப்பற்றப்பட்டு காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

    மொத்தத்தில் மணல் கடத்திய ஒரு மினி வேன் உட்பட ஆறு மாட்டு வண்டிகளை அதிரடியாக வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கலெக்டர் உத்தரவு
    • அடிதடி, திருட்டு உள்பட 10 வழக்குகள் உள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை காரை அந்தோ ணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுபாகர் (வயது 33). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டை காரை லேபர் பள்ளி தெருவைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நகர மன்ற உறுப்பினர் நரேஷ்குமாரை (36) தாக்கி, அவரி டம் நகை, பணம் பறித்த வழக்கு மற்றும் அடிதடி, திருட்டு உள்பட 10 வழக்குகள் உள்ளது.

    இது தொடர்பாக ராணிப்பேட்டை போலீசாரால் கைது செய் யப்பட்ட சுபாகர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சுபாகரின் குற்ற செயல்களை கட்டுப்படுத் தும் விதமாக அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் சுபாகரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.

    • டிரைவர் கைது
    • வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்

    ராணிப்பேட்டை:

    வடக்கு மண்டல குடிமை பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு கீதா உத்தரவின்பேரில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் மேற்பார்வையில், ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஏட் டுகள் சந்திரன், அருள் ஆகியோர் ரேசன் அரிசி பதுக்குதல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக ராணிப்பேட்டை - சித்தூர் ரோடு காரை கூட்ரோடு அருகில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட் டோவை மறித்து, சோதனை செய்ததில், தலா 500 கிலோ எடை கொண்ட 20 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது.

    விசாரணை யில் ஆட்டோவை ஓட்டி வந்தவர் ஆற்காடு வேல்முருகேசன் தெருவை சேர்ந்த மருதுபாண்டியன் (வயது 34) என்பதும், பொது மக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி ஆந்திர மாநிலத்திற்கு கொண்டு சென்று கள்ளச் சந்தையில் விற்று வந்தது தெரிந்தது.

    அதைத்தொ டர்ந்து ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து வாலாஜா நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்ப டைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, மருது பாண் டியனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

    • பணி நிறுத்தத்தால் அரக்கோணத்தில் பரபரப்பு
    • போலீசார் பேச்சுவார்த்தை

    அரக்கோணம்:

    அரக்கோணம் - மும்பை ரெயில் மார்க்கத்தில் கைனூர் பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த கேட்டின் வழி யாக சென்னையில் இருந்து ஆந்திரா மற்றும் வட மாநி லங்களுக்கும், இதே போல் மறுமார்க்கத்தில் இருந்து காட்பாடி வழியாக தமிழகத் தின் பிற மாவட்டங்கள் மற் றும் கேரளா, கர்நாடகா மாநி லங்களுக்கும் ரெயில்கள் மற் றும் சரக்கு ரெயில்கள் செல் கின்றன.

    இதனால் அவ்வப்போது அந்த கேட் மூடியிருப்பதால் அந்தவழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், அவசர தேவைகளுக்காக செல்லும் பொது மக்களும் பெரும் சிர மத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இதனால் ரெயில்வே நிர்வாகம் சார்பில் அந்த பகு தியில் சுரங்கபாதை அமைப்ப தற்கான பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங் கப்பட்டது.

    இந்தநிலையில் அப்பகுதி கிராம மக்கள் ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற் கான வரைபடத்தை காண் பித்து பணிகள் தொடங்கிய பின் இப்போது அந்த வரைப டத்தில் உள்ளது போல் இல் லாமல் வளைவாக மாற்றி அமைத்து வருகின்றனர்.

    இத னால் பல்வேறு இடையூறுகள் ஏற்படும். எனவே, இந்த பணியை நிறுத்த வேண்டும். எனக்கூறி மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இத னால் பணிகள் நிறுத்தப்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்து வந்த தாசில்தார் சண்முக சுந்தரம், ரெயில்வே இன்ஸ் பெக்டர் விஜயலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந் தன், ராமகிருஷ்ணன் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படை போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதன்பேரில் பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • கதர் ஆடையை மக்கள் அதிகமாக பயன்படுத்த வேண்டும்
    • நெசவுத் தொழிலாளர்கள் வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம், சம்பத்ரா யன் பேட்டை, நெல்லூர் பேட்டை, நாகவேடு போன்ற பல கிராமங்களில் காலம் காலமாக நெசவுத் தொழில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் நெச வுத் தொழிலுக்கு தேவையான பாவு மற்றும் இதர பொருட்கள் முறையாக கிடைக்கப்பெறாததும், நூல் விலை ஏற்றம் காரணமாகவும் அதை நம்பியே இருந்த பல நெசவுத் தொழிலாளர் குடும் பங்கள் நெசவுத் தறி மிஷின் களை பழைய இரும்பு கடை யில் விற்பனை செய்து விட்டு கூலி வேலை, சமையல், கட் டிட வேலைக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் பல குடும்பங்க ளின் வாழ்வாதாரமாக இருந்து வந்த இந்த தொழில் இன்று படுபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. அதனை மீட்டெடுக்க அரசு சார்பில் விவசாயத்திற்கு மானிய விலையில் இடு பொருட்கள் மற் றும் எந்திரங்கள் வழங்குவது போல நெசவுத் தொழிலுக்கும் வழங்க வேண்டும் என நெசவுத் தொழிலாளர் கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும் தமிழ கத்தின் பாரம்பரிய கதர் ஆடையை அதிகமாக மக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும், அதற்குண்டான நடவடிக் கையை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் இப்பகுதி நெசவுத் தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது
    • பக்தர்களுக்கு அன்னதானம்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு மூலவர் சுப்பிரமணிய சாமி வள்ளி தெய்வானை சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து மாலை உற்சவ மூர்த்தியான சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.மங்கள வாத்தியங்களுடன் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    வேடந்தாங்கல், கர்ணாஊர், மகேந்திரவாடி, பானாவரம், புதூர், வீராணம், புதுபட்டு, மேல் வீராணம், மங்கலம், பொன்னப்பன் தாங்கள், கன்னிகாபுரம், கூத்தபம்பாக்கம், வடல்வாடி, குப்பகல்மோடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் கிரிவலத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கினர்.

    • பொருட்கள் எரிந்து நாசம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    பாணாவரத்தை அடுத்த பிள் ளையார் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா (வயது 58), கூலித்தொழிலாளி. இவர் குடிசை வீட்டில் வசித்து வரு கிறார். இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு மின் கசிவு காரணமாக திடீரென குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது.

    இது குறித்து அக்கம் பக்கத்தி னர் சோளிங்கர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி வித்தனர். அதன்பேரில் தீய ணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடிசை வீட்டில் இருந்த சான்றிதழ்கள், துணிகள், பாத் திரங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

    இந்த சம்பவம் குறித்து தக வலறிந்த சோளிங்கர் ஒன்றி யக் குழு தலைவர் கலைக்கு மார், துணைத் தலைவர் பூங் கொடி ஆனந்தன், ஒன்றிய செயலாளர் சந்திரன் ஆகி யோர் சென்று பாதிக்கப் பட்ட குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள் ளிட்ட நிவாரண பொருட் களை வழங்கி ஆறுதல் தெரி வித்தனர், தீ விபத்து குறித்து பாணாவரம் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் வலியுறுத்தல்
    • சாலை விரிவாக்க பணிகள் நடை பெற்று வருகிறது

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் பல் வேறு இடங்களில் வாகன போக்குவரத்து வசதிக்காக சாலை விரிவாக்க பணிகள் நடை பெற்று வருகிறது.

    இதற்காக நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள் வெட்டப்படுகிறது. அப்படி வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக மரக்கன்று நட வேண்டும். ஆனால் இதுவரை சாலை விரிவாக்க பணிக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக ஒரு மரக்கன்று கூட நெடுஞ்சாலைத்துறையினர் நடவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    வேலம் பகுதியிலும் சாலை விரிவாக்கபணிக் காக மரங்கள் வெட்டப்பட்டன. இந்த மரங்களுக்கு பதிலாக மரக்கன்று நட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • அங்கன்வாடி மையத்தில் மதிய உணவு தரமாக, சுவையாக உள்ளதா என சோதனை
    • அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டைமாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவ லர் வி.சம்பத் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் சிறுகரும்பூர், வேகா மங்கலம் ஆகிய ஊராட்சியில் தோட்டக்கலை மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நலத் திட்ட உதவிகள் மற்றும் அவற்றை செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை நேரடியாக விவசாயிகள் நிலத்திற்கு சென்று பார் வையிட்டு ஆய்வு செய்து கேட்டறிந்தார்.

    இதனை தொடர்ந்து சிறுகரும்பூர் ஊராட்சியில் முதலாவது தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எடை, உயரம் அளவீடு செய்வதை பார்வையிட்டார். மேலும் அங்கன்வாடி மையத்தில் மதிய உணவு தரமாக, சுவையாக உள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது கலெக்டர் வளர்மதி, வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, துணை இயக்குனர்கள் லதா, விஸ்வநாதன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×