என் மலர்
ராணிப்பேட்டை
- மாற்று பெட்டி இணைக்கப்பட்டு தாமதமாக சென்றது
- பயணிகள் கடும் சிரமம்
அரக்கோணம்:
பீகார் மாநிலம் பரவுனியில் இருந்து கேரள மாநிலம் எர்ணா குளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் கிடையாது.
இந்த ரெயில் நேற்று காலை 10.45 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்திற்குள் வந்த போது திடீரென ரெயிலில் இணைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியின் சக்கரங்கள் பழுது ஏற்பட்டு சுழலாமல் இருந்தது.
இதனை அறிந்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தி அரக்கோணம் ரெயில்வே அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அந்த 'பெட்டிக்கு பதில் மாற்று ரெயில் பெட்டியை இணைத்தனர்.
இதனால் எக்ஸ்பி ரஸ் ரெயில் நண்பகல் 12.15 மணிக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது. ஏற்கனவே இந்த ரெயில் சில மணி நேரம் கால தாமதமாக வந்திருந்த நிலையில் மேலும் தாமதமாக புறப்பட்டதால் ரெயிலில் இருந்த பயணிகள் சிரமம் அடைந்தனர்.
- வட மாநில வாலிபர்களுக்கு அடி உதை
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாழனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி தேவி.
இன்று காலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது டிப்-டாப் உடையில் வடமாநில வாலிபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் தேவியிடம் நகைக்கு பாலிஷ் போடுவதாக கூறி உள்ளனர்.
இதனையடுத்து தேவி பீரோவில் இருந்து 3 பவுன் தங்க நகைகளை எடுத்து வந்து வட மாநில வாலிபர்களிடம் பாலிஷ் போடுவதற்காக கொடுத்துள்ளார்.
வாலிபர்கள் நகைக்கு பாலிஷ் போடுவது போல ஏமாற்றி தேவியிடம் கவரிங் நகைகளை கொடுத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து வாட மாநில வாலிபர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். இதை அறிந்த தேவி கூச்சலிட்டார்.
சத்தம் கேட்கவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் துரத்திச் சென்று வட மாநில வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தரும அடி கொடுத்தனர். இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் வட மாநில வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
போலீசார் வட மாநில வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அரிய வகை மூலிகைச் செடிகள் எரிந்து நாசம்
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஆவின் பால் நிலையம் அருகில் உள்ள மலைப்பகுதியில் அரிய வகை மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளது.
இந்த நிலையில் மர்ம கும்பல் சிலர் நேற்று முன்தினம் மலையில் தீவைத்துள்ளனர்.
இதனால் காய்ந்த மஞ்சம்புற்கள் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கி, மலை முழுவதும் பரவியது.
இதில் மூலிகை செடிகள், மரங்கள் தீயில் எரிந்து கருகி சாம்பலானது. மர்ம நபர்கள் தீ வைப்பது தொடர்கதையாக உள்ளது. மலைக்கு தீ வைக்கும் மர்ம நபர் களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பதிவேடுகள் சோதனை
- போலீசார் துடிப்புடன் செயல்பட வலியுறுத்தல்
நெமிலி:
அரக்கோணம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு யாதவ்கிரிஷ் அசோக் நெமிலி போலீஸ் நிலையத்துக்கு திடீரென வருகை தந்தார். அப்போது அங்குள்ள பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், போலீசார் துடிப்புடன் செயல்பட வேண்டும், எனக் கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ் பெக்டர்கள் சிரஞ்சீவிலு, ஜெயராஜ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
- குளிக்க சென்றபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட் டம் மேல்விஷாரம் புதுப் பேட்டை பகுதியை சேர்ந்த வர் சாதிக் பாஷா. இவரது மகன் ரியாஸ் ரகுமான் (வயது 16). ஆற்காடு தண்டு பஜார் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த இஷாத் அகமது மகன் முபாரக் ஷரீப் (16).
இவர்களின் நண்பர்கள் வேலூர் கொணவட்டம் பகுதியை சேர்ந்த அன்சர் பாஷா மகன் முகமது ஷகில் (16), கலிமுல்லா மகன் வசீம் (16).
இவர்கள் நான்கு பேரும் ஆற்காடு அடுத்த மேல்விஷா ரம் இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தனர்.
நேற்று மதி யம் பள்ளி முடிந்ததும் மேல் விஷாரத்தை அடுத்த நந்தியா லம் பகுதியில் உள்ள 100 அடி ஆழம் கொண்ட செயல்ப டாத கல் குவாரி குட்டையில் தேங்கி இருந்த தண்ணீரில் குளிக்க சென்றுள்ளனர்.
ரியாஸ் ரகுமான், முபாரக் ஷரீப் ஆகிய இருவரும் முதலில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அவர்கள் பள்ளிக்கு எடுத்துச் சென்ற புத்தகபை மற்றும் சட்டையை கரையில் வைத்து விட்டு தண் ணீரில் இறங்கியுள்ளனர். அப் போது இரண்டு பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். முகமது சகில் மற்றும் வசீம் ஆகிய இருவரும் பின்னால் மற் றொரு மோட்டார்சைக்கி ளில் வந்துள்ளனர்.
அப்போது எதிரே மோட் டார்சைக்கிளில் வந்த ஒருவர், உங்களுக்கு முன்னால் வந்த பள்ளி மாணவர்கள் கல்கு வாரி குட்டையில் நீரில் தத்த ளிக்கின்றனர் என முகமது சகில், வசீம் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.
உடனே அவர்கள் இருவரும் கல்குவாரி குட்டைக்கு விரைந்து சென்றனர். அதற்குள் மாண வர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர்.
இதனால் என்ன செய்வ தென்று தெரியாமல் பயந்து கரையில் வைக்கப்பட்டிருந்த புத்தகபையின் அருகே இருந்த செல்போனை எடுத்துக் கொண்டு மேல்விஷாரத்தில் உள்ள ரியாஸ் ரகுமான் வீட் டிற்கு சென்று தகவல் தெரிவித் துள்ளனர். மேலும் இது குறித்து ஆற்காடு தீயணைப்பு துறை யினருக்கும் தகவல் தெரிவிக் கப்பட்டது.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு 'விரைந்து சென்று நீரில் மூழ்கிய பள்ளி மாணவர்களான ரியாஸ் ரகுமான் மற்றும் முபாரக் ஷரீப் ஆகியோரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகுரியாஸ் ரகுமானை பிணமாக மீட்ட னர். தொடர்ந்து அரக்கோ ணம் ராஜாளி மீட்புபடையின ரும் வரவழைக்கப்பட்டனர். அவர்களின் நீண்டநேர தேடுத லுக்கு பிறகு முபாரக் ஷரீப் உடலும் மீட்கப்பட்டது.
இருவரது உடல்களையும் பார்த்து பெற்றோரும், உறவி னர்களும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. தொடர்ந்து இருவரது உடல் களும் ஆற்காடு அரசு ஆஸ்பத் திரிக்கு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ரத் தினகிரி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- 6 பவுன் நகைகள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் சுற்றி உள்ள பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களை நோட்டமிட்டு மர்ம கும்பல் செயின் பறிப்பு, வழிப்பறி செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி மர்ம கும்பலை தேடி வந்தனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பெண் கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட வாலிபர்கள் மீது அரக்கோணம் டவுன் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் புழல் சிறையில் இருந்து 2 வாலிபர்களை அரக்கோணம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் அரக்கோணத்தில் நடைபெற்ற செயின் பறிப்பில் முக்கியமான குற்றவாளிகள் என தெரியவந்தது.
இவர்கள் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த நாகராஜ் (வயது 31), பிரகாஷ் (30) என்பதும் இவர்கள் அரக்கோணம் பகுதிக்கு பைக்கில் வந்து தனியாக செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பது, வழிப்பறி உள்ளிட்டவற்றை அரங்கேற்றியுள்ளனர்.
அரக்கோணம் மங்கம்மா பேட்டை பகுதியை சேர்ந்த விமலா, நேதாஜி நகரை சேர்ந்த வச்சலா, மங்கம்மா பேட்டை பகுதியை சேர்ந்த பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து 6 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.எ
- ஆத்மா திட்டத்தின் கீழ் பயனடைந்தனர்
- விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆத்மா திட்டத்தின் கீழ் சயனபுரம் கிராமத்தில் நெல் வயல் விழா நடத்தப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வடமலை தலைமை தாங்கினார். ஒன்றிய குழு பெருந்தலைவர் வடிவேல் முன்னிலை வகித்தார்.
நெமிலி வேளாண்மை உதவி இயக்குனர் திருமதி அருணா குமாரி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேல் சிறப்புரை ஆற்றினார். பின்னர் பள்ளி குழந்தைகள் மற்றும் விவசாயிகளுடன் தொழில்நுட்ப பதாகைகளை ஏந்தி தொழில்நுட்ப விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
விழாவில் 50 விவசாயிகளுக்கு மானியத்தில் உளுந்து 30 விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்கள் 10 விவசாயிகளுக்கு பேட்டரி தெளிப்பான் 20 விவசாயிகளுக்கு இயற்கை உரம் மானியத்தில் வழங்கப்பட்டது. விழாவில் ஒன்றிய கவுன்சிலர் சுகந்தி சிவராஜ் கலந்து கொண்டார்.
முடிவில் வேளாண்மை துணை அலுவலர் ராமமூர்த்தி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் புண்ணியராஜ், செந்தில், ஆத்மா திட்ட அலுவலர்கள் நிர்மலா தேவி ராஜேந்திரன் ராமதாஸ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர் விழாவில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்களை வழங்கிய சேர்மன்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி யில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
இந்நிகழ்ச்சியில், நெமிலி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர், பெ.வடிவேலு பேரறிஞர் அண்ணா திருவுருவச்சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பின்னர் கேக் வெட்டி, அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், நெமிலி பேரூர்கழக செயலாளர்.ஜனார்த்தனன், சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவர்.பவானி வடிவேலு, நெமிலி பேரூராட்சி மன்றத் தலைவர்.ரேணுகாதேவி சரவணன், பொதுக்குழு உறுப்பினர் திரு.அப்துல் நசீர், ஒன்றிய கழக நிர்வாகிகள் புருஷோத்தமன், பாண்டியன், சங்கர், ஜெயச்சந்திரன், ஹரிகிருஷ்ணன், பெருமாள், நெமிலி பேரூர் கழக நிர்வாகிகள் கார்த்திகேயன், சுகுமார், சேகர், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
- முதல்-அமைச்சரின் சீரிய திட்டம்
- கலெக்டர் வழங்கினார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட் டத்தில் ஊட்டச்சத்து குறை பாடுள்ள, பிறந்த குழந்தைகள் முதல் 6 வயது வரையிலான 2,583 குழந்தைகள் மற்றும் 56 நாட்கள் ஊட்டச்சத்து உண வுகளை சாப்பிட பாலூட்டும் தாய்மார்களுக்கும் தமிழ்நாடு அரசின் ஊட்டச்சத்து பெட்ட கம் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, ஊட்டச்சத்து பெட்ட கத்தை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ரா ணிப்பேட்டை மாவட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 6 வயது வரை 64 ஆயி ரத்து 599 குழந்தைகள் ஊட் டச்சத்து குறைபாடு உள்ள வர்களாக கணக்கெடுக்கப் பட்டுள்ளனர். இவர்களில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் 2,583 பேர் என கண்டறியப் பட்டுள்ளனர். அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கிட தமிழ்நாடு முதல்- அமைச்சரின் சீரிய திட்டமான ஊட்டச் சத் தினை உறுதி செய் திட்டத் தின் கீழ் ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் உணவுகள் வழங்கப்படுகிறது.
இந்த உணவுகள் ஊட்டச் சத்து குறைபாடு கண்டறியப் பட்ட குழந்தைகளுக்கு 56 நாட்கள் தொடர்ந்து கிடைக் கும் வகையில் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வழங் கப்பட்டு, குழைந்தைகளின் எடை, உயரம் அளவீடு செய்து ஊட்டச்சத்து உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக் கப்பட்டுள்ளது.
கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைக ளின் தாய்மா ர்களுக்கு ஊட் டச்சத்து பெட்டகம் தலா இரண்டு வழங்க ப்படுகிறது. மிதமான ஊட்டச்சத்து குறை பாடுள்ள 1,081 குழந்தைகளுக்கும், அவர்க ளின் தாய்மார்க ளுக்கும் தலா ஒரு ஊட்டச் சத்து பெட்டகம் வழங்கப்படு கிறது. இந்த பெட்டகத்தில் ஊட்டச்சத்து பவுடர், பேரிச் சம்பழம், நெய், வைட்டமின் டானிக், குடற்புழு நீக்க மாத் திரை, டவல், டம்ளர் ஆகிய வைகள் உள்ளது.
அதே போன்று 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,960 குழந்தைகளின் ஊட்டச் சத்திற்காக உணவு வழங்கப்ப டுகிறது. ஆகவே தாய்மார்கள் ஊட்டச்சத்து உணவுகளை தவறாமல் சாப்பிடவும், குழந் தைகளுக்கு ஊட்டச்சத்து உணவை தொடர்ந்து வழங்கி குழந்தைகள் ஆரோக்கியமாக வளர அரசுடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்கிட வேண் டும்.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சி பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அம்சப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- விவசாயிகள் அல்லாத மற்ற நபர்கள் நெல் விற்பனை செய்தால் நடவடிக்கை
- கலெக்டர் தொடங்கி வைத்து எச்சரிக்கை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட் டத்தில் 2023-ம் ஆண்டில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய முதற் கட்டமாக 30 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கிட உத்தரவு பிறப்பிக் கப்பட்டது. அதில் நேற்று முதல் 23 நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் செயல் பட தொடங்கின.
காவேரிப்பாக்கம் பேரூ ராட்சி சமுதாய நலக்கூடத் தில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத் தில் கலெக்டர் வளர்மதி விவ சாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணியை பூஜை செய்து தொடங்கிவைத்தார்.
விவசாயிகளிடமிருந்து சிட்டா, அடங்கல் ஆவணங்களை கிராம நிர்வாக அலு வலரிடம் பெற்று அதை கணி னியில் பதிவு செய்திடவேண் டும்.பதிவின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலரின் கையொப்பம் பெற்று விவசா யிகள் நேரடி நெல் கொள்மு தல் நிலையத்துக்கு நெல் கொண்டு வரும் பட்சத்தில் அவர்களிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படு கிறது.
நெல் மூட்டைகள் மூன்று நாட்கள் மையங்களில் வைக் கப்பட்டு பின்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழ கத்தின் குடோன்களான குகைநல்லூர் மற்றும் ராணிப் பேட்டை ஆகிய இடங்களில் உள்ள இரண்டு குடோன் களில் அடுக்கி வைக்கப்படும். குகைநல்லூர் குடோனில் 7,000 மெட்ரிக் டன், ராணிப் பேட்டை, வாலாஜாவில் உள்ள குடோனில் 16 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இட வசதி உள்ளது.
நடப்பாண்டில் விவசாயிக ளிடம் இருந்து வரப்பெறும் நெல்லை பொறுத்து சுமார் ஒரு லட்சம் மெட்ரிக் டன் வரை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் விவசா யிகள் அல்லாத வியாபாரிகள் மற்ற நபர்கள் நெல் விற்பனை செய்வது கண்டறியப்பட் டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை கண் காணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் ஏதே னும் குளறுபடிகள், புகார்கள், குறித்து விவசாயிகள் தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளரை 8807825796 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நகர சபை கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
மேல்விஷாரம்:
மேல்விஷாரத்தில் சூரிய மின்விளக்குகள்அமைக்க வேண்டும் என நகர்மன்றஉறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூட்டத்துக்கு, நகர்மன்றத் தலைவர் எஸ் டி முகமது அமீன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் குல்சார் அஹமது, ஆணையாளர் பரந்தாமன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நகர மன்ற உறுப்பினர்கள்ஜமுனா ராணிவிஜி, உதயகுமார், கோபிநாத், ஜியாவூதின் உஷா, ஜெயந்தி ஆகியோர் கீழ்விஷாரம்ப குதியில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க பாலாற்றில் தனியாக நீரேற்று நிலையம் அமைக்க வேண்டும் பிரான்சாமேடு பகுதியில் கூடுதல் மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி அமைக்க வேண்டும் கால்வாய் தூர்வார வேண்டும், சூரிய ஒளி வேண்டும் மின்விளக்குகள் அமைக்க வேண்டும என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
- முதலமைச்சர் பிறந்த நாள் முன்னிட்டு ஏற்பாடு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆற்காடு:
ஆற்காடு உட்கோட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் மரக்கன்றுகள் நடும் இயக்கம் சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில துணைப் பொதுச் செயலாளர் பெருமாள் கலந்து கொண்டு இன்று காலை முப்பது வெட்டி கிராமம் பகுதிக்கு உட்பட்ட செய்யாறு சாலையில் உள்ள பாலாற்றங்கரை ஓரம் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதில் உட்கோட்ட செயலாளர் கோவிந்தராஜுலு, உட்கோட்ட துணைத் தலைவர்கள் பிரகாஷ், ரகோத்தமன், சீனிவாசன், உட்கோட்ட இணைச்செயலாளர்கள் பவுனு, மணி, மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் விநாயகம், சேட்டு, சம்பத், மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாவட்டத் துணைத் தலைவர்கள் நமச்சிவாயன், லோகநாதன், மாவட்ட இணை செயலாளர்கள் ரவி, ரேணு ஆகிய அனைவரும் கலந்து கொண்டனர்.






