என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைகிறது
    • அதிகாரி நேரில் ஆய்வு

    நெமிலி:

    நெமிலி அடுத்த சிறுணமல்லி, ஓச்சலம் சாலை முதல் கீழ்களத்தூர் வரை செல்லும் தார் சாலை மாண்டஸ் புயலின்போது தொடர்ந்து பெய்த கன மழையால் சேதமடைந்தது.

    இதனால் தார் சாலையை சீரமைக்க பொதுமக்கள் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை வைத்தனர்.

    இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நெமிலி ஒன்றிய குழுதலைவர் வடிவேலு உத்தரவின் படி டி.என்.ஆர்,எஸ், திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பீட்டில் 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. ஒப்பந்ததாரர் சங்கர் இப்பணியினை மேற்கொண்டார், பொறியாளர் ராஜேஷ், உதவி செயற்பொறியாளர். தமிழரசி நேரில் ஆய்வு செய்தனர்.

    இந்த தார் சாலை வசதியினால் 10 -ற்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாணாவரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தொடங்கி வைத்தாா்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை பாணாவரம் பகுதியில் நடைப்பெற்றது. மாவட்ட அமெச்சூா் கபடி கழகமும், பாணாவரம் திமுகவும் இணைந்து பாணாவரம் திடீர் நகர் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் மைதானத்தில் நடந்தது.

    ராணிப்பேட்டை மாவட்ட அமெச்சூா் கபடி கழக தலைவர் வேலு தலைமையில் நடைப்பெற்ற இந்த போட்டிக்கு ராணிப்பேட்டை மாவட்ட திமுக துணைசெயலாளரும், மாவட்ட அமெச்சூா் கபடி கழக துணைதலைவருமான துரைமஸ்தான் முன்னிலை வகித்தார். பொருளாளா் சுசீந்திரன் அனைவரையும் வரவேற்றாா். பாணாவரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேசிட் இந்தபோட்டியை தொடங்கி வைத்தாா்.

    இந்த கபடி போட்டியில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து சுமாா் 44 மாணவிகள் கலந்து கொண்டனா். இவர்கள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு இரண்டு, இரண்டு குழுக்களுக்கிடையே போட்டி நடைப்பெற்றது.

    இதில் சிறப்பாக விளையாடிய 12 பெண்கள் சீனியா் கபடி பிரிவிற்க்கு தேர்வு செய்யப்பட்டனா். இவா்கள் வருகிற 9-ந் தேதி முதல் 12-ந்தேதி வரை விழுப்புரத்தில் மாநில அளவில் நடைப்பெற உள்ள கபடி போட்டியில் ராணிப்பேட்டை மாவட்டம் சார்பில் கலந்து கொள்ள உள்ளனா்.

    இதில் பாணாவரம் ஊராட்சிமன்ற தலைவர் ஆர்ஜீனன், துணைதலைவர் சரண்யா, காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் ரவி, செந்தாமரை, தேவராஜ், பாஸ்கா், ரவி, சுற்றுசூழல் அணி அமைப்பாளா் வெங்கடேசன், நெமிலி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளா் ரவீந்திரன், நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளா் பெருமாள், துணைசெயலாளா் வெங்கடேசன், மாவட்ட அமெச்சூா் கபடி கழக பயிற்ச்சியாளா்கள், பாணாவரம் திமுக கிளை செயலாளா் பாலன், பாணாவரம் ஊராட்சிமன்ற உருப்பினா்கள், உட்பட இப்பகுதியை சோ்ந்த இளைஞா்கள் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    • அ.தி.மு.க.வினர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா கொரட்டி அருகே உள்ள பஞ்சனம்பட்டி, எலவம்பட்டி, கிராமம் மற்றும் நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, உள்ளிட்ட பகுதிகளில் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் குறவன் இனத்துக்கு பட்டியலின வகுப்பு (எஸ்சி) சான்றுக்கு ஆன்லைன் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட அனைவருக்கும் குறவன் எஸ்சி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரி தமிழ் பழங்குடி குறவன் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி பின்னர் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

    தொடர்ந்து மாணவ மாணவிகள் பிச்சை எடுக்கும் போராட்டம் கண்ணை கட்டி தவளை போல் தவழ்ந்து வந்து உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் நேற்று 6,வது நாளாக தூக்கு கயிறு மாட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அதிமுக கட்சியை சேர்ந்த நகரச் செயலாளர் டி.டி.குமார் தலைமையில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் டாக்டர் என் திருப்பதி, ஒன்றிய செயலாளர் செல்வம், தொகுதி செயலாளர் கே. எம். சுப்பிரமணியம், நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் தாலுகா அலுவலகம் வந்து தாசில்தார் சிவப்பிரகாசம் வருவாய்த் துறையினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    பின்னர் போராட்டக்காரர்களிடம் நகர செயலாளர் டி.டி. குமார் பேசியபோது:

    குறவன் சாதி சான்றிதழ் அதிமுக ஆட்சியில் கேட்டிருந்தால் தாங்கள் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி மூலம் கூறி அதற்கான நடவடிக்கை எடுத்து வழங்கி இருப்போம், தங்களுக்கு சான்றிதழ் கிடைக்க அதிமுக சார்பில் முன்னால் முதலமைச்சர் எடப்பாடி கவனத்திற்கு எடுத்துச் சென்று மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என ஆதரவு தெரிவித்து, போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்களை தெரிவித்துச் சென்றனர். தொடர்ந்து ஜாதி சான்றிதழ் கேட்டு தூக்கு கயிறு மாட்டி போராட்டம் நடத்தினார்கள்.

    நிகழ்ச்சியில் அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட துணைச் செயலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், ரம்பா கிருஷ்ணன், டிடிசி சங்கர், ஆர் நாகேந்திரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நந்தி பகவானுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    ஆற்காடு

    ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் அமைந்துள்ள மரகதாம்பிகை உடனுறை ஆதி மஹாலிங்கேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மூலவர் ஆதி மஹாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    மாலையில் நந்தி பகவானுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர்
    • போலீசார் விசாரணை

    வாணாபுரம்:

    வாணாபுரம் அருகே உள்ள தென்கரும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி தரணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பிரபு பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மூத்த மகள் பிரியதர்ஷினி (வயது 16) வாணாபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரியதர்ஷினி அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் தண்டராம்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் இருந்து பிரியதர்ஷினியின் உடலை மீட்டனர்.

    பின்னர் வாணாபுரம் போலீசார் உடலை பிரேத பரிசோத னைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    தக்கோலத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தாயுமானவர் அறக்கட்டளை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தக்கோலம் பேரூராட்சி மன்ற தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் வினோத் காந்தி தொடங்கி வைத்தார். இதில் பொது மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, குழந்தைகள், பெண்கள் நல மருத்துவம், தோல், எலும்பு, ரத்த அழுத்த அளவு, சர்க்கரை அளவு கண்டறிதல் போன்ற நோய்களுக்கான மருத்துவம் இலவசமாக பார்க்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் அரக்கோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர் தமிழ்ச்செல்வன், வட்டச் செயலாளர்கள் சந்திரன், ரமேஷ், சம்பத்குமார், ஷேக்கலி டில்லி பாபு, பார்த்திபன், ராஜா, ராஜு, மதிவாணன், லிங்க மூர்த்தி, நகர மன்ற உறுப்பினர்கள் கோபி, ஷாகிரா பானு, சிவசங்கரி ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். முடிவில் உதவி பேராசிரியர் எலும்பு மற்றும் மூட்டு மருத்துவ டாக்டர் லோகேஷ் சம்பத்குமார் நன்றி கூறினார்.

    • தொழிலாளர்களுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் நகராட்சியில் திமுக அரசின் ஓராண்டு நிறைவு, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் சமபந்தி போஜன முப்பெரும் விழா நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் என 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மதிய உணவு விருந்து அளிக்கப்பட்டது.

    இதில் நகர மன்ற துணைத் தலைவர் கலாவதி அன்புள்ள லாரன்ஸ் நகராட்சி ஆணையாளர் லதா, பொறியாளர் ஆசீர்வாதம், நகர கழகச் செயலாளர் வி.எல்.ஜோதி, நகர மன்ற அவைத்தலைவர் துரை சீனிவாசன், நகர மன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார், சாமுண்டீஸ்வரி, செந்தில்குமார், கே.எம்.பி பாபு, சங்கீதா, ரஷிதா, நந்தா தேவி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றபோது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த மருதாலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 39). அதே பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன் (39), செந்தில் (38) இவர்கள் 3 பேரும் நேற்று அக்ராவரம் பகுதியில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது பொன்னை ராணிப்பேட்டை சாலையில் எதிரே மண் ஏற்றி வந்த லாரி, இவர்கள் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதில் ஏழுமலை வழியிலியே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றன. இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தங்கை லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்
    • போலீசார் விசாரணை

    ராணிபேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா காமராஜ் தெருவை சேர்ந்தவர் அன்பழகன்.இவரது மகன் சஞ்சய் (வயது 16). இவரும் இவரது தங்கை நிரஞ்சனா (14) ஆகிய இருவரும் அம்மூர் லாலாப்பேட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை சஞ்சய் தனது தங்கை நிரஞ்சனாவை தனது பைக்கில் அழைத்துக் கொண்டு ராணிப்பேட்டையில் இருந்து வாலாஜா நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சஞ்சய் லாரி சக்கரத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    அவரது தங்கை நிரஞ்சனா தலையில் சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பினார்.

    இது குறித்து தகவல் அறந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சிறிய காயங்களுடன் நிரஞ்சனாவை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவிலை இடிக்க எதிர்ப்பு
    • போலீசார் பேச்சுவார்த்தை

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகரத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் தினசரி சுமார் 300-க்கும் மேற்பட்ட வெளிப்புற நோயாளிகளும் உள்புற நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த மருத்துவமனை சாலையின் இருபக்கமும் கட்டிடங்கள் உள்ளன. நோயாளிகள் சாலையை கடக்கும் போது அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகிறது.

    கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் இதனால் பெரிதும் சிரமப்பட்டு பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

    அதன் அடிப்படையில் ரூ.13.½ கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இதன் ஆரம்ப கட்ட பணி தொடங்கப்படுகிறது.

    அதற்காக அரசு மருத்துவமனையில் இருந்து காசி விஸ்வநாதர் கோவில் வரை சாலையை விரிவுபடுத்துவதற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

    பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் ஓரம் உள்ள கடைகள் மற்றும் பயனியர் நிழல் கூடம் போன்றவற்றை அகற்றினர். சாலை ஓரம் இருந்த பழமையான நாகம்மன் கோவில் முன்பு உள்ள மண்டபம் மற்றும் கோவில் பூஜை சாமான்கள் வைக்கும் அறை போன்றவற்றை அகற்றினர்.

    கோவிலின் கருவறை இடிக்க முற்பட்டபோது பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவிலால் நெடுஞ்சாலை துறைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என வாதிட்டனர்.

    இன்ஸ்பெக்டர் காண்டீபன் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக கோவில் இடிக்கும் பணியை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    • அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு
    • கோவில் புனரமைப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் 11 கோடி மதிப்பில் நடைப்பெற்று வரும் ரோப்கார் பக்தர்களுக்கான அடிப்படை வசதி கட்டுமான பணிகளை அமைச்சர் ஆர் காந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கட்டிடத்தின் நுழைவாயில் சிற்பங்கள், கட்டிடத்தின் மேற்கூரை அமைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவித்தார், பெரியமலையில் அமைய உள்ள மாற்றுத்திறனாளிகள் செல்லும் சாய்வு பாதை அமைப்பது குறித்தும்.சின்னமலை யோக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு கோவில் புனரமைப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். 

    • திருத்தணி செல்லக்கூடிய புறநகர் ரெயில் ரத்து செய்யப்பட்டது
    • அதிகாரிகள் விசாரணை

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலை யம் அருகே உள்ள யார்டு பகுதியில் இருந்து கார்கள் ஏற்றி செல்லும் சரக்கு ரெயில் 24 காலி பெட்டிகளுடன் ரெயில் நிலைய பகுதிக்கு வந்தது.

    அப்போது திடீ ரென சரக்கு ரெயிலின் கடைசி 2 பெட்டி கள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டன. இதை அறிந்த சரக்கு ரெயில் என்ஜின் டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தி இது குறித்து அதிகாரிக ளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் தடம்புரண்ட சரக்கு ரெயில் பெட்டி களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    இதனால் அரக்கோணத்தில் இருந்து நேற்று மாலை 5 மணிக்கு திருத்தணி செல்லக்கூடிய புறநகர் ரெயில் ரத்து செய்யப்பட்டது. மேலும், சரக்கு ரெயில் தடம் புரண்ட தற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


    ×