என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச மருத்துவ முகாம்
    X

    இலவச மருத்துவ முகாம்

    • பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    தக்கோலத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தாயுமானவர் அறக்கட்டளை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தக்கோலம் பேரூராட்சி மன்ற தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் வினோத் காந்தி தொடங்கி வைத்தார். இதில் பொது மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, குழந்தைகள், பெண்கள் நல மருத்துவம், தோல், எலும்பு, ரத்த அழுத்த அளவு, சர்க்கரை அளவு கண்டறிதல் போன்ற நோய்களுக்கான மருத்துவம் இலவசமாக பார்க்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் அரக்கோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர் தமிழ்ச்செல்வன், வட்டச் செயலாளர்கள் சந்திரன், ரமேஷ், சம்பத்குமார், ஷேக்கலி டில்லி பாபு, பார்த்திபன், ராஜா, ராஜு, மதிவாணன், லிங்க மூர்த்தி, நகர மன்ற உறுப்பினர்கள் கோபி, ஷாகிரா பானு, சிவசங்கரி ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். முடிவில் உதவி பேராசிரியர் எலும்பு மற்றும் மூட்டு மருத்துவ டாக்டர் லோகேஷ் சம்பத்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×