என் மலர்
நீங்கள் தேடியது "medical camp Community-verified icon Verified"
- ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கத்தை அடுத்த சிறுகரும்பூர் அரசுமேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி குணசேகரன் தலைமை தாங்கினார். காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு தலை வர் அனிதா குப்புசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர். சக்தி, ஒன்றிக்குழு உறுப்பினர்கள் ஞானமணி அருளரசு, தீபா கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரம்ப சுகாதார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் மோகன சுந்த ரம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பி னர் ஏ.எம்.முனிரத்தினம் கலந்து கொண்டு மருத்துவ முகா மினை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
இதனை தொடர்ந்து 5 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து அடங்கிய பெட்டகம், 5 பேருக்கு மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகம், மருத்துவ அடையாள அட்டை ஆகியவற்றை ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ வழங் கினார். பின்னர் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை எம். எல்.ஏவிடம் வழங்கினர்.
இதில் டாக்டர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பயனாளிகள் உள்பட பலர் கலந்து கொண்ட னர். முடிவில் சுகாதார ஆய்வாளர் குமார் நன்றி கூறினார்.
- மாணவிகள் முகாம் குறித்து கிராம மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
- கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது
நெமிலி:
நெமிலி ஒன்றியம், சிறுணமல்லி ஊராட்சிக்கு உட்பட்ட பூதேரி பகுதியில், நெமிலி கால்நடை மருந்தகம் மூலம் கா நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடை பெற்றது. முகாமில் 200 மாடுகளுக்கு தோல் கழலை நோயத் தடுப்பூசியும், 61 கால்நடைகளுக்கு ஆவின் தாது உப்பு கலவை யும், 25 மாடுகளுக்கு சினை பரிசோதனையும், 10 மாடுகளுக்கு சினை ஊசியும் போடப்பட்டது. கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது.
முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி அருணாச்சலம் தொடங்கி வைத்தார். உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னினை வகித்தனர்.
நெமிலி கால்நடை உதவி மருத்துவர் சுப்பிரமண யன் தலைமையில், கால்நடை ஆய்வாளர் சிவக்குமார், கா நடை பராமரிப்பு உதவியாளர் குமார், செயற்கை முறை கருவூட்டாளர் சுதாகர் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். தனியார் வேளாண்மை கல்லூரி மாணவிகள் முகாம் குறித்து கிராம மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்டுத்தினர். முடிவில் ஊராட்சி செயலாளர் நன்றி கூறினார்.
- மாடு மற்றும் கன்றுகள் பேரணியாக கொண்டு செல்லப்பட்டது
- 125 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த இருணாப்பட்டு கிராமத்தில் காலநடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு சினை ஊசி இலவசமாக போடுதல், குடற்புழுநீக்கம், கன்றுகள், கால்நடைகளுக்கு தேவையான மருந்து மாத்திரைகள், மாடு மற்றும் கன்றுகளுக்கு பேரனி நடத்தி, கால்நடை பராமரிப்புத்துறை பரிசுகளை வழங்கினார்கள்.
முகாமில் கால்நடைகளுக்கு சினை ஊசி போடுதல் உள்ளிட்ட பயிற்சியில் ஊரக வேளாண்மை அதியமான் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் ஹரிபிரசாத், முத்தமிழ்செல்வன், பரீஹரி உள்ளிட்ட 10 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மிட்டூர் கால்நடை உதவி மருத்துவர் சத்யா மாணவர்களுக்கு கால்நடை பராமரிப்பு தொடர்பான பயிற்சி மற்றும் விளக்கங்களை அளித்தார். முகாமில் 125 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
- பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது
- ஏராளமாேனார் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
தக்கோலத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தாயுமானவர் அறக்கட்டளை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தக்கோலம் பேரூராட்சி மன்ற தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் வினோத் காந்தி தொடங்கி வைத்தார். இதில் பொது மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, குழந்தைகள், பெண்கள் நல மருத்துவம், தோல், எலும்பு, ரத்த அழுத்த அளவு, சர்க்கரை அளவு கண்டறிதல் போன்ற நோய்களுக்கான மருத்துவம் இலவசமாக பார்க்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அரக்கோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர் தமிழ்ச்செல்வன், வட்டச் செயலாளர்கள் சந்திரன், ரமேஷ், சம்பத்குமார், ஷேக்கலி டில்லி பாபு, பார்த்திபன், ராஜா, ராஜு, மதிவாணன், லிங்க மூர்த்தி, நகர மன்ற உறுப்பினர்கள் கோபி, ஷாகிரா பானு, சிவசங்கரி ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். முடிவில் உதவி பேராசிரியர் எலும்பு மற்றும் மூட்டு மருத்துவ டாக்டர் லோகேஷ் சம்பத்குமார் நன்றி கூறினார்.
- ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காந்தி பேச்சு
- வருகிற 24-ந் தேதி நடத்த ஏற்பாடு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன்னாள் முதல் அமைச்சர் கருணா நிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை ஒட்டி பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவது குறித்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் வளர்மதி முன்னிலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை ஒட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒரு வருடம் நடத்த முதல் அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். மாவட்டத்தில் கலவை பேரூராட்சி சோளிங்கர் ஒன்றியம் கூடலூர் ஆகிய இடங்களில் அரசினர் மேல்நிலைப் பள்ளி களில் இந்த சிறப்பு மருத்துவ முகாம்களை வருகிற 24-ந் தேதி அன்று நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இதற்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் , உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் இப்பணியில் இணைந்து செயல்படு வார்கள் , உணவு உள்பட தேவைப்படும் அனைத்து உதவிகளும் நானே செய்து தருகிறேன்.
கடமைக்காக மருத்துவ முகாம் நடத்துவது என்றில்லாமல், எவ்வித பிரச்சனை இல்லாத வண்ணம் ஒரு நல்ல சிறப்பான, பன்னோக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கும் வகையில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது என்ற வகையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை அமைச்சர் நட்டார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, ஜெ. எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குநர் லோகநாயகி. மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, மருத்துவ பணிகள் துணை இயக்குனர் மணிமாறன் உள்பட நகரமன்ற, பேரூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- 954 பேருக்கு பல்வேறு சிகிச்சைகள் அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள கணியம்பாடி ஒன்றியத்தைச் சேர்ந்த மோத்தக்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று தமிழக முதல்-அமைச்சரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு கணியம்பாடி ஒன்றியக்குழுத்தலைவர் திவ்யாகமல் பிரசாத் தலைமை தாங்கினார்.
ஒன்றிய குழு துணை தலைவர் கஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் வனிதாகுணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மோத்தக்கல் ஊராட்சி மன்ற தலைவர் உஷாஜெயவேலு வரவேற்று பேசினார்.
இந்த முகாமில் கணியம்பாடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வெ.துரைராஜ் மேற்பார்வையில், பல்வேறு சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர்.
சரக்கரை நோய், பல் மருத்துவம், குழந்தைகள் நலம், காசநோய், சித்த மருத்துவம், மனநோய் உள்பட 954 பேருக்கு பல்வேறு சிகிச்சைகள் அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்.
மேலும் ஆறு பேர் தொடர் சிகிச்சை பெற பரிந்துரை செய்யப்ப ட்டுள்ளனர். இதில் ஊராட்சி துணை தலைவர் கமல்ராஜ், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்றனர்
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சி அலுவலக்கூட்ட அரங்கில் நெமிலி, பனப்பாக்கம்,தக்கோலம் உள்ளிட்ட 3 பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
இந்த முகாமிற்கு நெமிலி பேரூராட்சி செயல் அலுவலர் பூவேந்திரன் தலைமை வகித்தார். பனப்பாக்கம் செயல் அலுவலர் குமார் முன்னிலை வகித்தார்.
இந்த பேரூராட்சிகளில் பணியாற்றும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்துகொண்டு ரத்தஅழுத்தம்,சர்க்கரை நோய், கண் பரிசோதனை, தோல் நோய் உள்ளிட்ட பிரிவுகளில் சிகிச்சை பெற்றனர்.
இதில் இளநிலை உதவியாளர் வெங்கடேசன், நந்தகுமார், திமுக இளைஞரணி செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்தது
- பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன் முகாமை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி துணைத்தலைவர் தீபிகா முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்டோருக்கு பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு மருத்துவம் சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் பேரூராட்சி உறுப்பினர்கள், டாக்டர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.






