search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electric lights should be installed on the national highway"

    • நகர சபை கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    மேல்விஷாரம்:

    மேல்விஷாரத்தில் சூரிய மின்விளக்குகள்அமைக்க வேண்டும் என நகர்மன்றஉறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கூட்டத்துக்கு, நகர்மன்றத் தலைவர் எஸ் டி முகமது அமீன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் குல்சார் அஹமது, ஆணையாளர் பரந்தாமன் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், நகர மன்ற உறுப்பினர்கள்ஜமுனா ராணிவிஜி, உதயகுமார், கோபிநாத், ஜியாவூதின் உஷா, ஜெயந்தி ஆகியோர் கீழ்விஷாரம்ப குதியில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க பாலாற்றில் தனியாக நீரேற்று நிலையம் அமைக்க வேண்டும் பிரான்சாமேடு பகுதியில் கூடுதல் மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி அமைக்க வேண்டும் கால்வாய் தூர்வார வேண்டும், சூரிய ஒளி வேண்டும் மின்விளக்குகள் அமைக்க வேண்டும என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • வேலூரில் கும்பல் அட்டூழியம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    சென்னையை சேர்ந்தவர் மாதினி (வயது 56) வேலூர் அடுத்த மேல்மொணவூர் அரசு ஐ.டி.ஐ. யில்ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.இதற்காக மெல்மொணவூர் அம்மன் நகரில் வாடகை வீட்டில் தங்கியுள்ளார். தினமும் அங்கிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று மாலை 5.30 மணிக்கு பணி முடிந்து தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் நோட்டமிட்டனர்.

    அந்த நேரத்தில் சாலையில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் பைக்கில் மாதினியை பின் தொடர்ந்து வந்தனர்.

    திடீரென பைக்கில் பின்னால் இருந்த மர்ம நபர் மாதினி அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்தார். இதனால் திடுக்கிட்ட மாதினி அலறி கூச்சலிட்டார்.அதற்குள் மர்ம நபர்கள் பைக்கில் பள்ளிகொண்டா நோக்கி தப்பி சென்று விட்டனர்.

    பட்டப்பகலில் ஆசிரியையிடம் நகை பறித்த சம்பவம் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து மாதினி விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நகை பறித்த வாலிபர் ஹெல்மெட் எதுவும் அணியவில்லை.

    இதனால் அவர்களை அடையாளம் காண்பதற்காக தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    விரிஞ்சிபுரம்யொட்டி உள்ள பொய்கை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த வாரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்தினர் சென்ற பைக் மீது மோதி மர்மநபர்கள் செயின்பறித்தனர்.

    இதனைத் தொடர்ந்து தற்போது ஐ.டி.ஐ ஆசிரியையிடம் நகை பறிப்பு நடந்துள்ளது.

    மேல்மொணவூர் முதல் கழனிப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எதுவும் இல்லை.அந்த பகுதி முழுவதும் இருட்டாக உள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அதிகளவில் கிராமங்கள் உள்ளன.

    இதனை பயன்படுத்திக் கொண்டு மர்மநபர்கள் துணிந்து நகை பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

    ×