search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆந்திராவுக்கு 2 டன் ரேசன் அரிசி கடத்தல்
    X

    ஆந்திராவுக்கு 2 டன் ரேசன் அரிசி கடத்தல்

    • டிரைவர் கைது
    • வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்

    ராணிப்பேட்டை:

    வடக்கு மண்டல குடிமை பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு கீதா உத்தரவின்பேரில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் மேற்பார்வையில், ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஏட் டுகள் சந்திரன், அருள் ஆகியோர் ரேசன் அரிசி பதுக்குதல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக ராணிப்பேட்டை - சித்தூர் ரோடு காரை கூட்ரோடு அருகில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட் டோவை மறித்து, சோதனை செய்ததில், தலா 500 கிலோ எடை கொண்ட 20 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது.

    விசாரணை யில் ஆட்டோவை ஓட்டி வந்தவர் ஆற்காடு வேல்முருகேசன் தெருவை சேர்ந்த மருதுபாண்டியன் (வயது 34) என்பதும், பொது மக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி ஆந்திர மாநிலத்திற்கு கொண்டு சென்று கள்ளச் சந்தையில் விற்று வந்தது தெரிந்தது.

    அதைத்தொ டர்ந்து ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து வாலாஜா நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்ப டைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, மருது பாண் டியனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×