என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரக்கோணம் நகர சபை கூட்டம் நடந்த காட்சி.
அரக்கோணத்தில் நாய், கொசு தொல்லை அதிகம்
- நகரசபை கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
அரக்கோணம்:
அரக்கோணம் நகர சபை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மான நிறைவு பெற்ற நிலையில் அரக்கோணம் நகரில் பல்வேறு இடங்களில் பணிகள் நடக்காமல் குப்பை தேங்கி இருப்பதாகவும் நகராட்சி ஆணையாளர் மற்றும் சேர்மன் அதிகாரிகள் இது குறித்து அக்கறை காட்டுவதில்லை என திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் சரமாரியாக குற்றம் சாட்டினர்.
மேலும் ஒவ்வொரு கூட்டத்திலும் அடுத்த கூட்டத்தில் சரி செய்யப்படும் என்று கூறி காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றம் சாட்டினர். இதனால் அரக்கோணம் நகர மன்றத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் நரசிம்மன் வாகன பராமரிப்புக்கு என்று லட்சக்கணக்கில் ஒதுக்கப்பட்டுள்ளது புதிதாக வாங்கப்பட்ட வாகனங்களுக்கு பராமரிப்பு செலவு ஏன் இவ்வளவு என கேள்வி எழுப்பினார்
அதனைத் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர் பாபு தொடர்ந்து பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெறுவதில்லை அதிகாரிகள் காலம் தாழ்த்தி பணிக்கு வருகின்றனர் எனவும் நகர கூட்டத்தில் தெரிவிக்கப்படும் எந்த பணிகளும் சீராக நடைபெறுவதில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
அதை தொடர்ந்து பேசிய திமுக கவுன்சிலர் துரை சீனிவாசன் அரக்கோணம் பகுதிகளில் இருக்கும் பொது மக்களுக்கான கழிப்பிடங்கள் திறக்கப்படுவதில்லை எனவும் பராமரிப்பின்றி அது சீர்கெட்டு கிடக்கின்றது அது சீரமைத்து பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு வழி செய்து விட வேண்டும் எனவும் அதிகாரிகள் பணிகளை சரி வர செய்வதில்லை குற்றம் சாட்டினார்.
அதேபோல் திமுக கவுன்சிலர் ரசிகா கரீமுல்லா நகரத்தில் அதிக அளவில் நாய்கள் இருப்பதாகவும் நாய் தொல்லையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன எனவும் அதிமுக கவுன்சிலர் நித்யா ஷாம் தொடர்ந்து தங்கள் பகுதியில் கொசு மருந்து அடிப்பதற்கான புகை போக்கி வருவதில்லை எனவும் சுழற்சி முறை என்று கூறி அதை தவிர்த்து வருவதாகவும் இது குறித்து எந்த தகவலையும் அதிகாரிகள் தெரிவிப்பது இல்லை நகர மன்ற கூட்டத்தில் கேட்கும் பொழுது அனுப்புவதாக கூறி அளித்து விடுவதாக குற்றம் சாட்டினார்.
அரக்கோணம் நகர மன்ற வளாகத்தில் அம்பேத்கர் வெண்கல சிலை வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தபோது சிலை வைப்பதற்கான முறையாக அது ஒப்புதல் பெற்ற பின்னரே வைக்க முடியும் எனஆணையர் லதா தெரிவித்தார். தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.






