என் மலர்
ராமநாதபுரம்
- கமுதி அருகே மகளிர் உரிமை தொகை திட்ட முகாம் நடந்தது.
- 18,700-க்கும் மேற்பட்ட விண்ணப்ப படிவங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழராமநதி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாம், மண்டல பொறுப்பாளர் உதய லட்சுமி,கிராம நிர்வாக அலுவலர் நாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர் பழனி அழகர்சாமி, துணைத் தலைவர் மைதீன்,ஊராட்சி செயலர் முத்துராமு ஆகியோர் முன்னிலையில்,தன்னார்வலர்கள் தமிழ்ச்செல்வி, முத்துபாப்பாத்தி ஆகியோர் மகளிர் உரிமைத் தொகை க்கான விண்ணப்ப படிவத்தைப் பெற்றுக் கொண்டனர். இதில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்பம் அளித்தனர்.
இதேபோல் கமுதி பகுதியில் 2-ம் கட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப படிவம் பெற்று கொள்ளப்பட்டது. வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு வளாகத்தில், வருவாய் ஆய்வாளரும், மண்டல பொறுப்பாளருமான மணிவல்லபன் முன்னிலையில் நடை பெற்ற இந்த முகாமில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விண்ணப்ப படிவங்களை அளித்தனர்.தன்னார்வலர்கள் இதைப் பெற்றுக் கொண்டனர். முதற்கட்டமாக கமுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 51 மையங்கள் மூலமாக இருந்து 18,700-க்கும் மேற்பட்ட விண்ணப்ப படிவங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- விடுதலை போராட்ட வீரர் மயிலப்பன் படத்திறப்பு விழா நடந்தது.
- மாணவர் அணி மத்திய குழு உறுப்பினர் வெள்ளைப்பாண்டியன் நன்றி கூறினார்.
பசும்பொன்
கமுதியில் முக்குலத்தோர் முன்னேற்ற சங்க நிறுவனர் கீரந்தை வீரபெருமாள்தேவர் தலைமையில் நேதாஜி அறக்கட்டளை நிறுவனர் மாயகிருஷ்ணன் ஏற்பாட் டில் தென்னிந்திய விடுதலை போராட்ட வீரர் மயிலப்பன் சேர்வைகாரர் படத்திறப்பு விழா மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவரும், முதுகுளத்தூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டி.எல்.சசிவர்ணத்தேவர் படத்திறப்பு விழா நடை பெற்றது. அவர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னதாக கமுதி பஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவீரன் மயிலப்பன் சேர்வைகாரர் வாரிசுதாரார்கள், சித்திரங் குடி கிராம மக்கள், கமுதி தாலுகா மறவர் சங்கத்தின் தலைவர் தர்மலிங்கத்தேவர், முக்குலத்தோர் சங்கத்தின் தலைவர் செல்லத்தேவர், சாயல்குடி முக்குலத்தோர் சங்கத்தின் தலைவர் வில்வ துரைத்தேவர் , முது குளத்தூர் ஆப்பநாடு மறவர் சங்கத்தின் நிர்வாகிகள் தியாகராஜன், வழக்கறிஞர் குணசேகர பாண்டியன், கடலாடி தாலுகா தேவர் சங்கத்தின் நிர்வாகிகள், பசும்பொன் தேவர் கல்லூரி யின் முன்னாள் மாண வர்கள் சங்கம், மூவேந்தர் பண்பாடு கழகத்தின் நிர்வாகிகள், தேவர் மீடியா அறக்கட்டளை தலைவர் மகேஸ்வரன், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். பார்வர்ட் பிளாக் மாணவர் அணி மத்திய குழு உறுப்பினர் வெள்ளைப்பாண்டியன் நன்றி கூறினார்.
- கஸ்தூரி மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டவர் என கூறப்படுகிறது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கஸ்தூரியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மண்டபம்:
இலங்கையில் ஏற்பட்டு உள்ள பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதாரம் இழந்த 300-க்கும் மேற்பட்டோர் இதுவரை அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்கள் மண்டபம், ராமேசுவரம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை மன்னார் மாவட்டம் உயிலங் குளத்தை சேர்ந்த பிரதீப் (வயது32), அவரது மனைவி கஸ்தூரி ஆகியோர் தங்களது 2 கைக்குழந்தைகளுடன் தனுஷ்கோடி வந்தனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி அதன் பின் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.
கஸ்தூரி மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டவர் என கூறப்படுகிறது. இதற்காக வாய்ப்புகளை தேடி சென்னை, திருச்சி போன்ற நகரங்களுக்கு சென்று வந்துள்ளார். இது தொடர்பாக போலீசிலும் தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.அகதிகளாக வந்தவர்கள் வெளியே செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இதனை மீறி கஸ்தூரி வெளியே சென்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி மாடலிங் பணிக்காக சென்னை செல்வதாக கணவர் பிரதீப் பிடம் கஸ்தூரி கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அதன் பின் அவர் கணவரை தொடர்பு கொள்ளவில்லை. செல்போனும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதீப் சென்னை சென்று கஸ்தூரி கொடுத்த முகவரியில் விசாரித்துள்ளார். அப்போது மனைவி கொடுத்த முகவரி தவறானது என தெரியவந்தது. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து பிரதீப் தனது மனைவி மாயமானது குறித்து மண்டபம் போலீசில்புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கஸ்தூரியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கஸ்தூரி மாடலிங்கிற்காக யாரை தொடர்பு கொண்டார்? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று போலீசார் தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். கஸ்தூரி மாயமானது தொடர்பாக விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
- மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
- வெற்றி பெற்ற மாணவர்களை பெற்றோர்கள் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ராமநாதபுரம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் முதல் 3 இடங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
இப்போட்டியில் சிவகங்கை, மதுரை, திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர். இதில் ராமநாதபுரத்தில் இருந்து 24 மாணவர்கள் கலந்து கொண்டு 11 தங்கப்பதக்கம், 10 வெள்ளிப்பதக்கம், 3 வெண்கலப்பதக்கம் வென்று ராமநாதபுரம் மாணவர்கள் முதல் 3 இடங்களை பிடித்தனர். சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல் உடன் இருந்தார். வெற்றி பெற்ற மாணவர்களை பெற்றோர்கள் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
- கருணாநிதி நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
- தி.மு.க. ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சாயல்குடி
சாயல்குடியில் தி.மு.க. கிழக்கு ஒன்றியம் மற்றும் சாயல்குடி பேரூர் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம் அனுச ரிக்கப்பட்டது. சாயல்குடி மும்முனை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன், சாயல்குடி பேரூர் செயலாளர் வெங்க டேஷ் ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராமர் மாவட்ட இளை ஞரணி துணை அமைப்பா ளர் சத்தியேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள்பால்ராஜ், மாவட்ட பிரதிநிதி காமராஜ், சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், துணை சேர்மன் மணி மேகலை, பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத் திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி தலைவர் முருகன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முனீஸ்வரன், சாயல்குடி புனித ராஜன் உள்ளிட்ட தி.மு.க. ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று ம.ம.க. கூறியது.
- பொது சிவில் சட்டம் இந்தியாவிற்கு ஏற்றது இல்லை.
மண்டபம்
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. த.மு.மு.க. மாநில துணை பொது செயலாளர் சலிமுல்லாகான் தலைமை வகித்தார். ம.ம.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா, செந்தில்வேல், வக்கீல் மதிவதனி ஆகியோர் பேசி னர்.
பொதுகூட்டத்தில் தமிழக அரசு நிலத்தின் வழி காட்டி மதிப்பினை கடுமை யாக உயர்த்தி உள்ளது.அதை குறைக்க நடவடிக்கை வேண்டும்.நெடுந்தொலை வில் இருந்து வரும் கனரக வாகனங்கள் அதிகப்படி யான டோல் கட்டணம் செலுத்துவதால் வணிகர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளா கின்றனர். சுங்க கட்டணத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறு குறு தொழில் நிறுவ னங்கள் மீது மறைமுகமாக மின்சார கட்டணச்சுமை ஏற்றப்பட்டுள்ளதால் நலி வடைந்த நிலையில் உள்ளது.மின்சார கட்டணங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். பொது சிவில் சட்டம் இந்தியாவிற்கு ஏற்றது இல்லை. அந்த சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் உட்பட ஏராளமானோர் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
- முகமது சதக் தஸ்தகீர் பள்ளி விளையாட்டு விழா நடந்தது.
- மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பதக்கங்களும் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முகமது சதக் தஸ்தகீர் பள்ளியில் 13-ம் ஆண்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் சேகர், கல்வியியல் கல்லூரி சோமசுந்தரம், சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் ஆலியா ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினராக மணிகண்டன் கலந்து கொண்டார். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
முன்னதாக நடந்த விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக போலீஸ் கமிஷனர் பொன்தேவி கலந்து கொண்டார்.சிலம்பம், கராத்தே, யோகா, அம்பு எய்தல் உள்ளிட்ட 13 வகையான விளையாட்டுகளில் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பதக்கங்களும் வழங்கப்பட்டது. ஏராளமான பெற்றோர்கள் விழாவில் பங்கேற்றனர்.
- பக்தர்கள் உடல் முழுவதும் சேறு பூசி வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- விழாவிற்கான ஏற்பாடு களை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலின் ஆடி திருவிழா கடந்த 28-ந் தேதி காப்புக்கட்டுடன் தொடங்கியது. அன்று முதல் அம்மனுக்கு தினமும் விஷேச பூஜை மற்றும் அபி ஷேம் அலங்காரம் நடை பெற்று வந்தது. பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் விரதமிருந்து அம்மனை வழிபட்டனர். பின்னர் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்ட னர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் விடிய விடிய நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பெண், ஆண் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அக்கினி சட்டியின்போது பெண்கள் ஓம்சக்தி என கோஷம் போட்டு கைகளை உயர்த்தி பக்தி பரவசத் துடன் ஆடிச் சென்றனர். மேலும் 21 சட்டி மற்றும் 51 சட்டி, பால்குடம், ஆயிரம் கண்பானை என ஏராள மான நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் 100-க்கும் மேற்பட்ட ஆண், பக்தர்கள் உடல் முழுவதும் அடையா ளம் தெரியாத அளவில் களிமண் சேறு பூசி சேத்தாண்டி வேடமிட்டு ஊர் எல்லையில் உள்ள பெருமாள் கோவிலில் இருந்து மேள தாளத்துடன் நடனமாடி ஊரை நகர் வலம் வந்து சக்திமாரியம் மனை வழிபட்டனர்.
இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதி யில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சக்தி மாரியம் மனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடு களை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
- கீழக்கரையில் அதிகரித்து வரும் தட்டம்மை நோயால் பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 58 ஆயிரத் திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.கீழக்கரையில் 'ருபெல்லா வைரஸ்' என்றழைக்கப்படும் "தட்டம்மை நோய்" பரவி குழந்தைகளை தாக்குவதால் பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கீழக்கரையில் சில நாட்க ளாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், தொண்டை வலி யுடன் ஆரம்பித்து 'ருபெல்லா வைரஸ்' என்ற ழைக்கப்படும் தட்டம்மை நோயாக உருவெடுத்து அதிகம் பரவி வருகிறது.
இதுகுறித்து கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இபுராகிம் கூறுகையில், எமது பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மேல் நிலைப்பள்ளிகளில் 3 ஆயி ரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது முதல் கட்ட பயிற்சி தேர்வு நடைபெற தொடங்கி விட்டன. இந்த நிலையில் பெரும்பாலான மாணவர்கள் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் மாணவர்கள் உள்ளதாகவும் மாணவர்க ளின் பெற்றோர்கள் வேதனையுடன் கூறுகின்ற னர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கீழக்கரை நக ராட்சி பகுதியில் தனி கவ னம் செலுத்தி பரவி வரும் தட்டம்மை நோய் குறித்து சுகாதார துறை மற்றும் நகராட்சி துறையினர் இணைந்து கீழக்கரையில் உள்ள அனைத்து பகுதிகளி லும் சிறப்பு முகாம் அமைத்து சுகாதாரத்தை குறித்து பொது மக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
இதுகுறித்து கீழக்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹுசைன் கூறுகையில், தற்போது கீழக்கரையில் தட்டம்மை நோய் பரவி வருகிறது. 2 மாதத்திற்குள் இதுவரை யிலும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாதித்துள் ளது. தட்டம்மையை ஒழிப்ப தில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி 9 மாதம் முதல் 15 மாதம் வரை குழந்தைகளுக்கு அந்தந்த தெருக்களிலும் வீதிகளிலும் சிறப்பு முகாம்கள் அமைத்து ருபெல்லா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து வழங்கி வந்தது.
மேலும் 2 வயது முதல் 5 வயது வரை குழந்தைகளுக்கு ஊசி மூலம் செலுத்தும் வழி முறைகளும் உள்ளது. இந்த தடுப்பு ஊசியினை இது வரையிலும் கீழக்கரையில் 48 சதவீத குழந்தைகள் மட்டுமே பயன்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ருபெல்லா வைரஸ் என்பது குழந்தை உண்டாகும்போது வயிற்றில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றார்.
மேலும் சர்வதேச அள வில் ருபெல்லா வைரஸ் தட்டம்மை ஒழிப்பு 100 சதவீதம் என்று அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் கீழக்கரையில் ருபெல்லா வைரஸ் தட்டம்மை குழந்தை களை தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அரசு தரப்பில் கீழக்கரை முழு வதும் கணக்கெடுப்பு நடை பெற்று வருகிறது என்றார்.
குழந்தை மருத்துவர் ஹாசிம் கூறியதாவது:-
இதுவரையிலும் ருபெல்லா வைரஸ் தடடம்மை தடுப்பூசி செலுத்தாதவர்கள் 5 வயது வரை உள்ள குழந்தை களுக்கும் செலுத்திக் கொள்ளலாம். இந்த தடுப்பூசி அரசு மருத்துவ மனையில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனையில் 600 முதல் 700 ரூபாய்க்கு செலுத்தப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள லாம்.
மேலும் ருபெல்லா வைரஸ் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிமோ னியா, மூலை காய்ச்சல், கண்பார்வை தாக்குதல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த ருபெல்லா வைரஸ் தட்டம்மை 30 வருடத்திற்கு முன்பே முற்றிலும் ஒழிக்கப் பட்டுள்ளது. மீண்டும் கீழக்கரையில் உருவெடுத்து இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சுகா தாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- அப்துல்கலாம் நினைவு மணிமண்ட பத்தையும் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
ராமேசுவரம்
உலக பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். குறிப்பாக இங்குள்ள அக்னீதீர்த்த கடலில் பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்வது இந்துக்களின் முக்கிய கடமையாக கருதப்படுகிறது.
இதன் காரணமாக விசேஷ, விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அதன்படி விடுமுறை நாளான இன்று அதிகாலையில் அக்னிதீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். பின்னர் ராமநாதசுவாமி-பர்வத வர்தினி அம்பாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ராமேசுவரத்தில் கோவில், ரத வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை ஆகிய பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ராமேசுவரத்திற்கு சிறப்பு பஸ்கள் விடப்பட்டிருந்தன. கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் தனுஷ்கோடி சென்று உற்சாகமாக கடற்கரையில் பொழுதை கழித்தனர்.
மேலும் பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவு மணிமண்ட பத்தையும் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
- ராமநாதபுரத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
- முஹம்மது மீரா சாஹிப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மண்டபம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கலோனியர் பங்களா அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் மூர்த்தி ஆகியோர் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர்கள் நிருபர்களிடம் தெரிவித்ததா வது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 17, 18-ந்தேதிகளில் ராமநாத புரம் மாவட்டத்தில் நடை பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். 17-ந் தேதி அன்று ராமநாதபுரத்தில் நடைபெறும் பாக முக வர்கள் கூட்டத்தில் பங் கேற்க உள்ளார்.
அதனை தொடர்ந்து 18-ந்தேதி மண்டபம் கலோனியர் பங்களா அருகில் நடைபெறும் நிகழ்ச்சியில் மீனவர்களை சந்திக்க உள்ளார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராம லிங்கம், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவா னந்தம், தி.மு.க மாநில விவசாய அணி துணைச் செயலாளரும், முதுகுளத் தூர் முன்னாள் எம்.எல்.ஏ. வுமான முருகவேல், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இன்பா ரகு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கவுன்சிலர் ரமேஷ் கண்ணன், மண்டபம் பேரூர் செயலாளர் அப்துல் ரஹ்மான் மரைக்கா யர், கவுன்சிலர்கள் சாதிக் பாட்ஷா, வாசிம் அக்ரம், முஹம்மது மீரா சாஹிப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தவ்ஹீத் ஜமாத் பொதுக்கூட்டம் நடந்தது.
- முடிவில் மாவட்ட துணை செயலாளர் ரஜப்தீன் நன்றி கூறினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் சந்தை திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் சார்பில் ஜனநாயக பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்டத்தலைவர் இப்ராகிம் சாபிர் தலைமை தாங்கினார். பொருளாளர் கரீம்ஹக்சாகிப், துணைத்தலைவர் யாசர்அரபாத், துணை செயலாளர்கள் மீரான், உஸ்மான், சித்தீக் முன்னிலை வகித்தனர்.
மாநில செயலர் அன்சாரி, மாநில பொதுச்செயலர் அப்துல் கரீம் பேசினர்.
தீர்மானங்களை மாவட்ட செயலாளர் தினாஜ்கான் வாசித்தார். இதில் மணிப்பூர் கலவரத்தில் பாதித்தோருக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பொது சிவில் சட்ட முன்னெடுப்பை கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் மாவட்ட துணை செயலாளர் ரஜப்தீன் நன்றி கூறினார்.






