என் மலர்
ராமநாதபுரம்
- ராமநாதபுரம் மாவட்டத்தின் பிரதான தொழிலான மீன்பிடி தொழில் கடந்த சில தினங்களாக முடங்கியுள்ளது.
- 8,800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 8-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே ராமநாதபு ரம் மாவட்டத்தின் பிரதான தொழிலான மீன்பிடி தொழில் கடந்த சில தினங்களாக முடங்கியுள்ளது. ஒரு சில மீன் ரகங்களுக்கு போதிய விலையை ஏற்றுமதி நிறுவனங்கள் வழங்காததை கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மீன்பிடி தொழில் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசுவதால் மீனவர்கள் இரண்டாம் நாளாக இன்றும் கடலுக்கு செல்லவில்லை.
இது தொடர்பான எச்சரிக்கையையும் மீன்வளத் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மேலும் மீனவர்களுக்கு கடலுக்கு செல்வதற்கான அனுமதி சீட்டும் வழங்கப்படவில்லை. குறிப்பாக ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், தொண்டி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 8,800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் மற்றும் அதன் சார்பு தொழிலாளர்கள் சுமார் 50 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர். மீன்பிடி தொழில் முடங்கியதால் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.10 முதல் ரூ.11 கோடி அளவிலான வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.
இயற்கை சீற்ற காலங்களில் படகுகள் சேதம் அடைவதை தடுக்கவும், படகுகளை நிறுத்தி வைக்கவும் ராமேசுவரம் பகுதியில் துறைமுகம் அமைக்க வேண்டும் எனவும், இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் வருமான இழப்பிற்கு மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
- கமுதி அருகே கம்பி வேலிகளுக்குள் சிக்கி புள்ளிமான் பலியானது.
- அந்த பகுதியில் உள்ள நாய்கள் கூட்டமாக குரைத்தபடி மானை துரத்தியுள்ளன.
பசும்பொன்
கமுதி-குண்டாறு பகுயில் கருவேல மரங்கள் அடர்ந்துள்ளன. இந்த பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள், மயில்கள், அரிய வகை வெள்ளை மயில்கள் வசித்து வருகின்றன. ஆனால் தற்போது நிலவி வரும் கடுமையான வெயில் காரணமாக இந்த பகுதி தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.
இதனால் மான்கள், மயில்கள் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன. அங்கு சுற்றி திரியும் நாய்கள் அவைகளை துரத்தி கடித்து விடுகின்றன. இதனால் பல மயில்கள் மற்றும் மான்கள் இறந்து வருகின்றன.இந்த நிலையில் கமுதி-குண்டாறு கரை பகுதியில் சந்தன மாரியம்மன் கோவில் சுற்றுப்பகுதியில் விலங்கு கள் உள்ளே வராமல் தடுப்பதற்காக கம்பி வேலி போடப்பட்டுள்ளது. தண்ணீர் குடிப்பதற்காக அந்த பகுதிக்கு 7 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் ஒன்று வந்துள்ளது.
அந்த பகுதியில் உள்ள நாய்கள் கூட்டமாக குரைத்தபடி மானை துரத்தியுள்ளன. இதில் பதற்றம் அடைந்த புள்ளி மான் தப்பிப்பதற்காக வேகமாக ஓடி கம்பி வேலிகளுக்குள் சிக்கியது. அதில் இருந்து வெளி வர முடியாமல் பரிதாபமாக இறந்தது.இது குறித்து தகவல் அறிந்த கமுதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திர சேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த புள்ளி மானை மீட்டனர். பின்னர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். பேரூராட்சி வாகனம் மூலம் உடற்கூறு ஆய்வுக்காக கோட்டை மேட்டில் உள்ள கால்நடை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
- பா.ஜ.க. நகரசபை உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் தலைமையில், நகரசபை துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம் முன்னிலை யில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் தி.மு.க. நகரசபை உறுப்பி னர்கள் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப் பதாவது:-
ராமநாதபுரம் நகராட்சிக் குட்பட்ட வார்டு கவுன்சிலராக இருந்து வருபவர் பா.ஜ.க.வை சேர்ந்த குமார். இவர் தொடர்ந்து நகரசபை கூட்டத்திலும், பொது வெளியிலும் சகோதரத்து வத்தையும், சமூக நல்லிணக் கத்தையும் சீர்குலைத்து மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறார்.
எனவே பா.ஜ.க. வார்டு கவுன்சிலர் குமார் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து சகோதரத்துவத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினரும், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளருமான கவுன்சிலர் ஜவா என்ற முகம்மது ஜஹாகீர் தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
- ரூ.24 லட்சம் மதிப்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் எந்திரங்கள் வழங்கப்பட்டது.
- இதனை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வேளாண் பொறியியல் துறையின் மூலம் பயனாளிகளுக்கு பவர் டில்லர் எந்திரம் மற்றும் விசைகளை எடுப்பான் கருவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை தாங்கினார்.
முருகேசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு 13 பயனாளி களுக்கு எந்திரங்களை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
விவசாயிகள் வேளாண்மை பணிகளை முழுமையாக மேற்கொள்ள ஏதுவாக குறு, சிறு விவசாயிகளுக்கு 75 சதவீதம் முதல் 100சதவீதம் வரை மானிய திட்டத்தில் வேளாண் உபகரணங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்படுகிறது. வேளாண் விற்பனை மையம் மூலம் குளிரூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் பாதுகாப்பு கிடங்கு அமைக்கப்பட்டு விவசாயிகள் பயன்பாட்டிற்கு இருந்து வருகிறது. அதில் விவசாயிகள் இருப்பு வைத்து உரிய விலை கிடைக்கும் பொழுது விற்பனை செய்து பயன்பெறலாம்.
மேலும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் சோலார் மின்மோட்டார் இணைப்புகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து கொடுத்தல் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வேளாண்மைத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து தங்களுக்கு தேவையான திட்டங்களை மானியத்தில் பெற்று கொள்ளலாம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றிய ஒன்றிங்களில் உள்ள விவசாயிகளுக்கான வறட்சி நிவாரண நிதி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வங்கிகள் வழியாக வழங்கும் பணி நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், வேளாண்மை துறை இணை எக்குநர் (பொறுப்பு) தனுஷ்கோடி, பரமக்குடி நகர் மன்றத்தலைவர் சேது கருணாநிதி, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்கள் நாகராஜன், திவ்யநாதன், குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கமுதி அருகே அழகுவள்ளியம்மன் கோவில் ஆவணி பொங்கல் திருவிழா நடந்தது.
- விழா விற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப் படையில் பிரசித்தி பெற்ற அழகு வள்ளியம்மன் கோவில் ஆவணி பொங்கல் திருவிழா நேற்று காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த கோவில் வயல் வெளி பகுதியில் உள்ளது. இந்த கோவிலுக்கு கிராம பொதுமக்கள் மேளதாளம் வான வேடிக்கையுடன் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கொடி மரத்திற்கு அபிஷேகம் செய்ய மஞ்சள் நீரை குடங்களில் தலையில் சுமந்து, கொடி மரத்தில் ஏற்றப்பட வேண்டிய அம்மன் உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
ஊர்வலம் கோவிலை வந்தடைந்த பின்பு கணபதி ஹோமம், யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் மூலவர் அழகு வள்ளியம்மன் மற்றும் கொடிமரத்திற்கு பால், தயிர், திரவியம், பன்னீர் உட்பட 16 வகை யான மூலிகை அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் அம்மன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. பின்னர் அம்மனுக்கு காப்பு கட்டிய பின்பு நேர்த்திக்கடன் செலுத்தும் 300-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினர்.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து 10 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் தங்களது, நேர்த்திக்கடன்களை செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற உள்ளது. அன்று அக்னிசட்டி, பூக்குழி இறங்குதல், வேல் குத்துதல், சாக்கு வேஷம் சேத்தாண்டி வேஷம் உட்பட பல்வேறு நேர்த்திக் கடன்கள் செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற உள்ளது. மேலும் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
- கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி சார்பில் விளையாட்டு போட்டி நடந்தது.
- ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு தலைமை தாங்கி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
பனைக்குளம்
ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தடகளப்போட்டியை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு தலைமை தாங்கி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்த விளையாட்டு போட்டிக்கு பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இன்பா ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விளையாட்டு போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற னர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மண்டபம் சம்பத் ராஜா தலைமையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கோபிநாத், ரமேஷ் கண்ணா, சம்பத் குமார், தௌபீக் அலி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சுரேஷ், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் உதயசூரியா மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
- விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசினார்.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் முதுகுளத்தூர் பேரூராட்சி சேர்மன் ஏ.ஷாஜகான் மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர், ஆகி யோர் முன்னிலையில் நடை பெற்றது. முதன்மை கல்வி அலுவலர ரேணுகா வர–வேற்றார்.
விழாவல் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:-
முதுகுளத்தூர் தொகுதி ஒரு காலத்தில் புறக்கணிக் கப்பட்ட தொகுதியாக இருந் தது. இப்போது வளர்ச்சி யடைந்த தொகுதியாக மாறி வருகிறது. அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பல்வேறு திட்டங்கள் தீட்டி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறோம். முதுகுளத்தூர் தொகுதியில் பைபாஸ் வேலை முடுக்கிவிடப்பட் டுள்ளன.
கிராமங்கள் தோறும் குடிநீர் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் குடிநீர் பிரச் சினை தீர்க்கப்படும். முதுகு ளத்தூர் அமைதியான நகர மாக திகழ்கிறது. இங்கு சாலைப்பணிகள் முடுக்கி விடப்பட்ருள்ளன. இங்கு மதரீதியாகவோ, சாதி ரீதி யாகவோ பாகுபாடு கிடை யாது. நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்.
அடுத்தகட்ட பணியாக இமானுவேல் சேகரனுக்கு செல்லுரர் கிராமத்தில் சிலை, முதுகுளத்தூரில் தேவர் மஹால், அழகுமுத் துக்கோன் சிலை, கட்டப் பொம்மனுக்கு சிலை, ஏர்வாடியில் இஸ்லாமியருக்கு மஹால், காமராஜருக்கு சிலை ஆகிய பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தாசில்தார் சடையாண்டி, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜய குமார், தாளாளர் செய்யது மூமின், ஜமாத் தலைவர் காதர்முகைதீன், முகம்மது யாக்கோப், சாகுல்ஹம்து, பைசல் முகம்மது உள்பட மரணவ, மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் முகம்மது சுல்த்தான் அலாவு தீன் நன்றி கூறினார்.
- பரமக்குடியில் உயிருக்கு போராடிய பெண் மான் மீட்கப்பட்டது.
- தெரு நாய்கள் கடித்ததால் அந்த மான் காயம் அடைந்திருப்பது தெரியவந்தது.
பரமக்குடி
பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட 1-வது வார்டு மஞ்சள்பட்டிணம் பகுதியில் அதிகாலை வீடுகளின் அருகே உயிருக்கு போராடி கொண்டிருக்கும் பெண் மானை பார்த்த அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை, காவல்துறை, வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த மானை மீட்டனர். உடனடியாக பெண்மானை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு முதலுதவிக்காக பரமக்குடியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்து வருகின்றனர்.
தெரு நாய்கள் கடித்ததால் அந்த மான் காயம் அடைந்திருப்பது தெரியவந்தது.
- தொண்டி கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர்.
- குடிநீர் கிடைக்காமல் பக்தர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
தொண்டி
தமிழகத்தில் பிரச்சித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் தற்போது கொடியேற்றப் பட்டு விழா நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை யாக வேளாங்கண்ணிக்கு செல்கிறார்கள்.
அதன்படி ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் தொண்டி அருளானந்தர் தேவாலயத்தில் வழிபட்டு அங்கிருந்து வேளாங் கண்ணிக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். கிழக்கு கடற்கரை வழியாக செல்லும் பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் செல்கின்றனர்.
இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேராவூர் குளம், திருப்பா லைக்குடி குடிநீர் ஊரணி மற்றும் சாலையோரம் உள்ள நீர்நிலைகள் வறண்டு உள்ளது. இதனால் பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.
- ராமநாதபுரத்தில் காசிவிஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- கடந்த 30-ந்தேதி கணபதி ஹோமத்துடன் யாகாசாலை பூஜைகள் தொடங்கியது.
பனைக்குளம்
ராமநாதபுரம் நீலகண்டி ஊரணி மேல் கரையில் அமைந்துள்ள தொன்னை குருசாமி சித்தரால் வழிபாடு செய்யப்பட்ட 300ஆண்டுகள் பழமையான காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.
ராமநாதபுரத்தில் மிகவும் பழமையான இக்கோவிலில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் புணரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 30-ந்தேதி வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் யாகாசாலை பூஜைகள் தொடங்கியது.
2 நாட்கள் மூன்றுகால யாக பூஜைகள் நடைபெற்று. நேற்று நான்காம் கால யாக சாலை பூஜைகள் தீபாரா தனை பூர்ணாகுதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மங்கள வாத்தி யங்கள் முழங்கயாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் வேதவிற்பன்னர் கள் ஊர்வலமாக விமானங்களுக்கு எடுத்து வந்த னர். மூலஸ்தானம், ராஜ கோபுரம், பரிவாத தெய்வங்கள் அனைத்திற்கும் வேத மந்திரம் முழங்க சிவாய நம மந்திரம் ஒலிக்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபி ஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சுவா மிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீப ஆராதனை நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியார் செய்திருந்தனர். சுமார் 3 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- திருவாடானையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருபுறமும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானை
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் இருந்து ஓரியூர் வரை பாண்டுகுடி வழியாக செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுவதால் கனரக வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருவாடானை அருகே உள்ள ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் அன்னை வேளாங்கண்ணி பேராலயமும் உலக பிரசித்தி பெற்றது.
இத்திருத்தலங்களின் திருவிழாவானது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8, 9-ந்தேதிகளில் முடிவடையும். அதே போல் இந்த வருடமும் தற்போது திருவிழா தொடங்கி நடைபெற்று வருவதால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் வழிபட்டு பின்பு வேளாங் கண்ணிக்கு சென்று அங்கு உள்ள புனித ஆரோக்கிய மாதாவை வழிபட பக்தர்கள் நடைபயணமாகவும், வாகனங்களிலும் பயணிக்கின்றனர்.
பக்தர்களும், வாகன ஓட்டிகளும் திருவாடா னையில் இருந்து பாண்டுகுடி வழியாக ஓரியூர் செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் உள்ள கருவேல மரங்களால் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதே போல் அஞ்சுகோட்டை சாலை பிரிவில் ஓரியூர் செல்ல வழிகாட்டும் பெயர் பலகை இல்லாததாலும் பயணிகள் வழி மாறி செல்வது மிகவும் வேதனையளிக்கிறது.
எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருபுறமும் உள்ள கருவேல மரங்களை அகற்றவும், அஞ்சுகோட்டை சாலை பிரிவில் வழிகாட்டி பெயர் பலகை அமைக்கவும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
- தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- மீன்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை எனக்கூறி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 2-ந்தேதி முதல் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளனர்.
ராமநாதபுரம்:
தமிழகத்தில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
இன்று முதல் அடுத்த சில நாட்கள் வரை ராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள தென்கடல் பகுதியில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக இன்று முதல் மறு அறிவிப்பு வரும்வரை ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக மீன்வளத்துறை உதவி இயக்குநர் பிரபாவதி தெரிவித்துள்ளார்.
மீன்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை எனக்கூறி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 2-ந்தேதி முதல் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளனர். இதனால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு ராமேசுவரத்தில் ரூ.5 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வானிலை மாறுபாடு காரணமாக கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






