தி.மு.க. இளைஞரணி சார்பில் விளையாட்டு போட்டி

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி சார்பில் விளையாட்டு போட்டி நடந்தது. ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு தலைமை தாங்கி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
விளையாட்டு போட்டியை அமைச்சர் ராஜகண்ணப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விளையாட்டு போட்டியை அமைச்சர் ராஜகண்ணப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Published on

பனைக்குளம்

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தடகளப்போட்டியை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு தலைமை தாங்கி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

இந்த விளையாட்டு போட்டிக்கு பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இன்பா ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விளையாட்டு போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற னர்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மண்டபம் சம்பத் ராஜா தலைமையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கோபிநாத், ரமேஷ் கண்ணா, சம்பத் குமார், தௌபீக் அலி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சுரேஷ், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் உதயசூரியா மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com