search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு மானிய விலையில் எந்திரங்கள்
    X

    விவசாயிகளுக்கு மானிய விலையில் எந்திரங்கள்

    • ரூ.24 லட்சம் மதிப்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் எந்திரங்கள் வழங்கப்பட்டது.
    • இதனை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வேளாண் பொறியியல் துறையின் மூலம் பயனாளிகளுக்கு பவர் டில்லர் எந்திரம் மற்றும் விசைகளை எடுப்பான் கருவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை தாங்கினார்.

    முருகேசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு 13 பயனாளி களுக்கு எந்திரங்களை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    விவசாயிகள் வேளாண்மை பணிகளை முழுமையாக மேற்கொள்ள ஏதுவாக குறு, சிறு விவசாயிகளுக்கு 75 சதவீதம் முதல் 100சதவீதம் வரை மானிய திட்டத்தில் வேளாண் உபகரணங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்படுகிறது. வேளாண் விற்பனை மையம் மூலம் குளிரூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் பாதுகாப்பு கிடங்கு அமைக்கப்பட்டு விவசாயிகள் பயன்பாட்டிற்கு இருந்து வருகிறது. அதில் விவசாயிகள் இருப்பு வைத்து உரிய விலை கிடைக்கும் பொழுது விற்பனை செய்து பயன்பெறலாம்.

    மேலும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் சோலார் மின்மோட்டார் இணைப்புகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து கொடுத்தல் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வேளாண்மைத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து தங்களுக்கு தேவையான திட்டங்களை மானியத்தில் பெற்று கொள்ளலாம்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றிய ஒன்றிங்களில் உள்ள விவசாயிகளுக்கான வறட்சி நிவாரண நிதி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வங்கிகள் வழியாக வழங்கும் பணி நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், வேளாண்மை துறை இணை எக்குநர் (பொறுப்பு) தனுஷ்கோடி, பரமக்குடி நகர் மன்றத்தலைவர் சேது கருணாநிதி, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்கள் நாகராஜன், திவ்யநாதன், குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×