என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • த.மு.மு.க. சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
    • மாநில செயலாளர் சாதிக்பாட்ஷா பங்கேற்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் தாலுகா ஆனந்தூர் அரசு தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு முஸ் லிம் முன்னேற்றக் கழகம் ஆனந்தூர் கிளை மற்றும் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர். இந்த முகாமிற்கு ம.ம.க. மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமை வகித்தார். மருத்துவ அணி மாவட்ட செயலாளர் கோட்டார் கலந்து கொண்டு வரவேற் றார். ரத்ததான முகாமில் ம.ம.க. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார்.

    முகாமிற்கு த.மு.மு.க. தொண்டி மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா, தலைமை பிரதிநிதி ஜெயி னுல் ஆபுதீன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முனீஸ்வரி, ஆர்.எஸ்.மங்க லம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அப்துல் கலாம் கண்டுபிடிப்புகளை நினைவு கூறும் வகையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் சாந்தி முருகானந்தம் தலைமையில் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த தினத்தையொட்டி அப்துல்கலாம் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இதில் மாணவ- மாணவிகளுக்கு வாசித்தல், மரம் வளர்த்தல், அறிவியல் மனப்பாங்கு வளர்த்தல் போன்ற அப்துல் கலாம் கண்டுபிடிப்புகளை நினைவு கூறும் வகையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

    • பாம்பனில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருடப்பட்டது
    • பாம்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அண்ணா நகரை சேர்ந்தவர் வில்வஜோதி (வயது32). இவர் கடந்த

    30-ந்தேதி தனது குடும்பத் துடன் சாயல்குடி அருகே ஆ.கரிசல்குளத்தில்உள்ள அரியநாச்சி அம்மன் கோவில் திருவிழாவிற்காக சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்குள்ள அறையின் அலமாரியின் மேல் ஒரு பையில் ைவக்கப்பட்டிருந்த 10 பவுன் கொண்ட டாலருடன் கூடிய தங்க மாலையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இந்த நிலையில் திருவிழாவை முடித்து விட்டு ஊர் திரும்பிய வில்வஜோதி, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது தங்க மாலை திருடு போயிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து வில்வஜோதி கொடுத்த புகாரின்பேரில் பாம்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • தேர் பவனி விழா நடந்தது.
    • நேற்று முதல் இறை விருந்து திருப்பலி, மாலையில் திருப்பலியும், நற்கருனை பணி, ஆசியும் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் உள்ள ஜெபமாலை அன்னை சர்ச் பெருவிழா செப்.29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் நவ நாள் திருப்பலி நடந்தது. நேற்று முன்தினம் மறை மாவட்ட பாதிரியார் திரவியம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

    தேர் பவனி விழா நேற்று நடந்தது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி நடந்தது. தேர் பவனியில் பங்கு அருள் பணிப் பேரவையினர், தொழில் முனைவோர், வணிகர்கள், ஜெபமாலை அன்னை பக்தர்கள், பங்கு இறைமக்கள் பங்கேற்றனர். நேற்று முதல் இறை விருந்து திருப்பலி, மாலையில் திருப்பலியும், நற்கருனை பணி, ஆசியும் நடந்தது. ராமநாதபுரம் பாதிரி யார்கள் சிங்கராயர், ரீகன் தேவசகாயம் மற்றும் கிறிஸ்தவர்கள் பலர் பங்கேற்றனர்.

    • ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
    • நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு கேணிக் கரை கிரசெண்ட் (பிறை) ரத்த வங்கியில் ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட செயலாளர் (கி) தேனி சை.அக்கீம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்தனதாஸ் மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிரசெண்ட் (பிறை) ரத்த வங்கி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உரிமையாளர் பயாஸ் அகமது வரவேற்றார்.

    பசுமை தாயகத்தின் மாநில துணைச்செயலாளர் பொறியாளர் கர்ண மஹாராஜா, ராமநாதபுரம் நகர செயலாளர் பாலா, மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறியாளர் ஷரீப், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் லட்சுமணன்,இளைஞர் சங்க செயலாளர் துல்கர்,இளைஞர் சங்கத் தலைவர் ஸ்டாலின், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தும் கான், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் இப்ராஹிம் ,மாணவர் சங்க செயலாளர் சந்தோசம்,கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி,உழவர் பேரியக்கம் தலைவர் ஐ.பி.கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

    • ராமநாதபுரம் கே.என். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.
    • பள்ளி மைதானத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கே.என்.பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், பள்ளி மாணவிகளின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். பள்ளி மைதானத்தில் மரக்கன்று கள் நடப்பட்டன. தலைவர் சண்முகராஜ்பாண்டியன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சரவணன், உறுப்பினர்கள் மற்றும் உறவின்முறை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியை சிந்துமதி வரவேற்று பேசினார். முன்னதாக டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இதில் மருத்துவர் வெங்கடேசன் தலைமை தாங்கி டெங்கு காய்ச்சல் பாதுகாப்பு குறித்து பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார். மேலும் நாட்டு நல பணித்திட்ட மாணவிகள் மகர நோன்பு திடல், சுடலை மாடன் சுவாமி கோவில் வளாகம் மற்றும் பல்வேறு பகுதிகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    • பாய்மர படகுப்போட்டி நடந்தது.
    • 24 பாய்மர பைபர் படகுகள் கலந்து கொண்டன.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், முள்ளிமுனையில் ஸ்ரீ பட பத்திர காளியம்மன், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 315-ம் ஆண்டு முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு கிராம தலைவர் கருப்பையா தலைமையில் துணை தலைவர் கணேசன், பஞ்சாயத்து தலைவர் அமிர்தவள்ளி மேகமலை ஆகியோர் முன்னிலையில் பாய்மர படகுப் போட்டி நடைபெற்றது.

    இதில் கோட்டைப்பட்டிணம், தேவி பட்டிணம், தொண்டி, நம்புதாளை பகுதியிலிருந்து 24 பாய்மர பைபர் படகுகள் கலந்து கொண்டன.கடலோர காவல்படை சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமை யில் போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுட்டிருந்தனர்.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகையும், சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.

    • ஒரு வாரத்திற்கு பிறகு கடலுக்கு சென்று அதிக அளவிலான மீன்களுடன் ராமேசுவரம் மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கரை திரும்பினர்.
    • 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

    ராமேசுவரம்

    வங்கக்கடல் மற்றும் மன் னார் வளைகுடா கடல் பகுதியில் வீசிய பலத்த சூறைக்காற்று காரணமாக கடந்த ஒரு வாரமாக மீன்பி டிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் தடை விதித்தி ருந்தனர்.

    இதனால் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வா தாரம் இழந்து பாதிப்படைந்த னர். மீன்பிடி தொழிலை நம்பியுள்ளவர்களும் வேலை வாய்ப்பை இழந்த னர்.

    இந்தநிலையில் கடலில் சகஜ நிலை திரும்பியது. எனவே தடை அகற்றப்பட்ட தையடுத்து நேற்று காலை மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்கு மீன்பிடிக்க சென் றனர். குறிப்பாக ராமேசு வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் இருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்று இன்று காலையில் கரை திரும்பினர்.

    இதில், அதிகளவில் மீன் கள், இறால் வகைகள் பிடிபட்டதாக தெரிவித்த னர். ஒரு வாரத்திற்கு பிறகு மீன்பிடிக்க சென்ற நிலை யில் மீன்கள் அதிகளவில் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அவர்கள் கூறினர்.

    • பி.வி.எம். மனவளர்ச்சி குன்றியோருக்கான மறுவாழ்வு இல்ல திறப்பு விழா நடந்தது.
    • முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று திறந்து வைத்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம்-கீழக்கரை இடையே இ.சி.ஆர். ரோட் டில் பள்ளப்பச்சேரி பஸ் நிறுத்தம் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள பி.வி.எம். மனவளர்ச்சி குன்றியோருக் கான மறுவாழ்வு இல்ல புதிய கட்டிடம் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவிற்கு பி.வி.எம். அறக்கட்டளை காப்பாள ரும், மலேசிய பிரபல ஆடிட் டருமான ஹாஜி. அன்சாரி இபுராகிம் தலைமை தாங்கி னார். பி.வி.எம். அறக்கட்ட ளையின் திட்ட இயக்குனர் சித்தார்கோட்டை ஜமாத் முன்னாள் தலைவர் அல் தாப் உசேன் வரவேற்றார்.

    ராமநாதபுரம் மாற்றுத்தி றனாளிகள் நலத்துறை மாவட்ட அதிகாரி பாலசுந்த ரம், கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார், திருப்புல் லாணி யூனியன் சேர்மன் புல்லாணி, திருப்புல்லாணி வி.ஏ.ஓ. பாலமுருகன், திருப் புல்லாணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகை ராஜா, தாதனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர்.கோகிலா ராஜேந்தி ரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பி.வி.எம். அறக்கட்டளை யின் நிறுவனரும், நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெட ரேஷன் தேசிய தலைவ ருமான டாக்டர்.அப்துல் ரசாக் அறிமுக உரையாற்றி னார். கீழக்கரை முகம்மது சதக் என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் ஜனாப் எஸ்.எம்.என்.அஹமது ஹூசைன் ஆஸிப் சிறப்புரை ஆற்றி னார்.

    பி.வி.எம். மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான மறுவாழ்வு இல்லம் புதிய கட்டிடங்களை பி.வி.எம். அறக்கட்டளை காப்பாளர் அன்சாரி இபுராகிம், நிர் வாக தலைவர் சித்தார் கோட்டை முஹம்மதியா பள்ளிகள் இணைத்தலைவர் புருனை தொழிலதிபர் ஹாஜி. எஸ்.டி.முஹம்மது ஷாஜகான், பி.வி.எம். அறக் கட்டளை ஆலோசகர் மலே சியா (பனைக்குளம்) கோப் பத்தா குரூப் சேர்மன் டத்தோ அல்ஹாஜ். கோப் பத்தா முஹம்மது இபுராகிம்,

    அறக்கட்டளை ஆலோ சகர் புதுவலசை மலேசியா டத்தோ ஹாஜி.அலிகான், அறக்கட்டளை பொதுச்செ யலாளர் புதுமடம் வடக்கு தெரு ஜமாத் பொருளாளர் ஹாஜி. சாகுல் ஹமீது ஆகி யோர் திறந்து வைத்தனர். விழாவில் கொடையாளர் கள், அரசு அதிகாரிகள், வரு வாய்த்துறையினர், காவல் துறையினர், மருத்துவ துறை யினர், மாற்றுத்திறனாளி கள் நலத்துறையினர், தொழில் அதிபர்கள், டாக்டர்கள், பொறியாளர் கள், வழக்கறிஞர்கள், அரசி யல் பிரமுகர்கள், ஜமாத் தார்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

    விழாவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளில் சிறந்த ஊராட்சியாக திருப்புல் லாணி ஊராட்சி ஒன்றியம் தாதனேந்தல் ஊராட்சியை தேர்வு செய்து அதன் தலை வர் டாக்டர். கோகிலா ராஜேந்திரனிடம் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.மேலும் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் தாதனேந்தல் ஊராட்சிக்குட்பட்ட பள்ளப் பச்சேரியைச் சேர்ந்த திரைப்பட நடிகரும், நவீன கோடாங்கி என்ற நிகழ்ச்சி மூலம் பல்வேறு விழிப்பு ணர்வு குறும்படங்கள் தயாரித்து பொதுமக்கள் சேவைக்காக தமிழக மக்கள் எழுச்சி கழகம் என்ற கட்சியை தொடங்கி கிராம மக்க ளிடையே பெரும் வர வேற்பை பெற்ற ராஜேந்தி ரனுக்கு சேவை திலகம் விருதுடன் பாராட்டு சான்றி தழ் வழங்கி கௌரவிக்கப் பட்டார்.

    தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பல் வேறு வகைகளில் சமூக சேவை செய்தவர்களுக்கு விருதுகள், கேடயம், பதக்கம் முக்கிய பிரமுகர்களால் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பி.வி.எம். அறக்கட்டளை நிறுவனரும், நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் தேசிய தலைவருமான டாக்டர்.அப்துல் ரசாக், அறக்கட் டளை ஆயுள் கால தலைவர் புதுமடம் வடக்கு தெரு ஜமாத் முன்னாள் தலைவர் ஹாஜி பக்கீர் முஹம்மது மற்றும் நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் மாநில பொருளாளர் முகவை மூத்த பத்திரிகை யாளர் இ.சிவசங்கரன் ஆகியோர் தலைமையில் அறக்கட்டளை நிர்வாகிகள், பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    முன்னதாக அறக்கட் டளை நிறுவனர் அப்துல் ரசாக் ஏற்பாட்டில் பி.வி.எம். கட்டிட வளாகத்தில் குமரய்யா கோவில் பாரதி நகர் அல்பாரி ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் அக்பர் அலி தலை மையில் 25-க்கும் மேற்பட்ட ஆலிம்களால் சிறப்பு மவ்லிது ஓதப்பட்டு கட்டிடத் திற்கு நன்கொடை வழங்கிய அனைவருக்கும் தூஆ செய் யப்பட்டது. பின்னர் பி.வி.எம். அறக்கட்டளைக்கு வித்திட்ட சித்தார் கோட்டை முகம்மதியா பள்ளிகளின் முன்னாள் தலைவர் மர்ஹீம் தஸ்தக்கீர் என்பவருக்கு சிறப்பு துவா ஓதப்பட்டது.

    • புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக்கடை கட்டிடம் முருகேசன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
    • தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.

    பரமக்குடி

    பரமக்குடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து பரமக்குடி ஒன்றியம், தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சி மீனாட்சி நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதி தாக கட்டப்பட்ட நியாய விலைக்கடை கட்டிடத்தை பரமக்குடி சட்டமன்ற உறுப் பினர் முருகேசன் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சிக்கு பரமக் குடி நகர்மன்ற தலைவர் சேதுகருணாநிதி, தெளிச் சாத்தநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் மங்களேஸ் வரி சேதுபதி ஆகியோர் முன் னிலை வகித்தனர். தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. முன்னாள் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சந்திரசேகர், நிர்வாகிகள் கண்ணன், கதிர் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • செய்யது ஹமீதா கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • குழந்தை திருமணங்களுக்கு வறுமை, கல்வியறிவின்மையே காரணமாகும் என வட்டார மருத்துவ அலுவலர் பேசினார்.

    கீழக்கரை

    கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவி யல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக சிறுவயது திருமணங்களால் ஏற்படும் மன உளைச்சல், சுகாதார சீர்கேடு மற்றும் சிசு மரணங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி கூட்டரங்கில் நடத் தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனை வர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.

    இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக திருப்புல் லாணி வட்டார மருத்துவர் ராசிக்தீன் மற்றும் வேளா னுர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அம்பிகா ஆகியோர் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில், குழந்தை திருமணம் பழங்கா லத்திலிருந்தே நடைமுறை யில் இன்றும் சில மாநிலங்க ளில் இளம் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அவர் களின் உடல் மற்றும் மன முதிர்ச்சிக்கு முன்பே திரும ணம் செய்து வைக்கப்படுகி றார்கள்.

    குழந்தைத் திருமணங்க ளுக்கான காரணங்கள் வறுமை, வரதட்சணை, கலாச்சார மரபுகள், மத மற்றும் சமூக அழுத்தங்கள், கல்வியறிவின்மை ஆகிய வையாகும். குழந்தைத் திரும ணத்தை முடிவுக்குக் கொண்டு வர, இந்தப் பிரச்சினையை பற்றிய விழிப்புணர்வை நாம் அனைவரிடையே ஏற்படுத்த வேண்டும்.

    ஒரு குறிப்பிட்ட சிறு வயது திருமணத்தால் சிறுமி யர்களுக்கு கல்வியும், பொருத்தமான வேலை வாய்ப்பும் மறுக்கப்படுகிறது. சிறு வயதிலேயே முழு உடல் வளர்ச்சி பெறாத நிலையில், பெண்ணுக்கு நடைபெறும் திருமணத்தினால் தாயும், சேயும் மகப்பேறின் போது இறக்கும் சதவிகிதம் மிக அதிகமாகவே உள்ளது என்று தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற் கான ஏற்பாடுகளை கல்லூ ரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் சுலை மான் சதாம் உசேன் மற்றும் முனிய சத்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • பசும்பொன் தேவர் நினைவிடத்தில் ஓ.பி.எஸ். சார்பில் வெள்ளி முலாம் பூசப்பட்ட திருவாச்சி அணிவிக்கப்பட்டது.
    • வெள்ளி கவசம் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது.

    பசும்பொன்

    கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் நினைவிட த்தில் வருகிற 30-ந் தேதி 61-வது குருபூஜை மற்றும் 116-வது ஜெயந்தி விழா நடைபெற உள்ளது.

    கடந்த ஆண்டு ஓ.பன்னீர் செல்வம் குடும்பத்தினர் சார்பில் தேவர் நினை விடத்தில் உள்ள தேவர் சிலைக்கு சுமார் 10½ கிலோ எடை கொண்ட வெள்ளிக் கவசம் வழங்கபட்டு இருந்தது.

    இந்நிலையில் நேற்று, அந்த வெள்ளி கவசம் தேவர் சிலைக்கு ஓ.பி.எஸ். மகன் விஜயபிரதீப் முன் னிலையில் மீண்டும் அணி விக்கப்பட்டது. மேலும் புதிதாக இந்த ஆண்டு செய்யப்பட்ட 12 கிலோ எடையுள்ள வெள்ளி முலாம் பூசப்பட்ட திருவாச்சியும் பூஜைகள் நடத்தி அணிவிக்கபட்டது.

    இதனையொட்டி தங்க கவசம் வரும் வரை வெள்ளி கவசம், அணிவிக்கபட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் மூக்கையா, ஒன்றிய செய லாளர்கள் கருப்புச்சட்டை முருகேசன், முத்துராம லிங்கம், வாசு, அழகு சரவ ணன், மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் பரிதி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சின்னாண்டு, தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சோலைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×