வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

பாம்பனில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருடப்பட்டது பாம்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அண்ணா நகரை சேர்ந்தவர் வில்வஜோதி (வயது32). இவர் கடந்த

30-ந்தேதி தனது குடும்பத் துடன் சாயல்குடி அருகே ஆ.கரிசல்குளத்தில்உள்ள அரியநாச்சி அம்மன் கோவில் திருவிழாவிற்காக சென்று விட்டார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்குள்ள அறையின் அலமாரியின் மேல் ஒரு பையில் ைவக்கப்பட்டிருந்த 10 பவுன் கொண்ட டாலருடன் கூடிய தங்க மாலையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இந்த நிலையில் திருவிழாவை முடித்து விட்டு ஊர் திரும்பிய வில்வஜோதி, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது தங்க மாலை திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து வில்வஜோதி கொடுத்த புகாரின்பேரில் பாம்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com