search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிக அளவிலான மீன்களுடன் கரை திரும்பிய ராமேசுவரம் மீனவர்கள்
    X

    ராமேசுவரம் மீனவர்கள் அதிகளவில் மீன்களை பிடித்துக்கொண்டு இன்று காலையில் துறைமுகத்திற்கு வந்தபோது எடுத்தபடம்.

    அதிக அளவிலான மீன்களுடன் கரை திரும்பிய ராமேசுவரம் மீனவர்கள்

    • ஒரு வாரத்திற்கு பிறகு கடலுக்கு சென்று அதிக அளவிலான மீன்களுடன் ராமேசுவரம் மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கரை திரும்பினர்.
    • 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

    ராமேசுவரம்

    வங்கக்கடல் மற்றும் மன் னார் வளைகுடா கடல் பகுதியில் வீசிய பலத்த சூறைக்காற்று காரணமாக கடந்த ஒரு வாரமாக மீன்பி டிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் தடை விதித்தி ருந்தனர்.

    இதனால் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வா தாரம் இழந்து பாதிப்படைந்த னர். மீன்பிடி தொழிலை நம்பியுள்ளவர்களும் வேலை வாய்ப்பை இழந்த னர்.

    இந்தநிலையில் கடலில் சகஜ நிலை திரும்பியது. எனவே தடை அகற்றப்பட்ட தையடுத்து நேற்று காலை மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்கு மீன்பிடிக்க சென் றனர். குறிப்பாக ராமேசு வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் இருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்று இன்று காலையில் கரை திரும்பினர்.

    இதில், அதிகளவில் மீன் கள், இறால் வகைகள் பிடிபட்டதாக தெரிவித்த னர். ஒரு வாரத்திற்கு பிறகு மீன்பிடிக்க சென்ற நிலை யில் மீன்கள் அதிகளவில் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அவர்கள் கூறினர்.

    Next Story
    ×