என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • ராமநாதபுரத்தில் மின்வாரியத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • சென்னை தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கீழக்கரை

    கீழக்கரை நுகர்வோர் நல சங்கத்தின் செயலாளர் செய்யது இப்ராகிம். இவர் ராமநாதபுரம் மாவட்ட மின் வாரிய பொது தகவல் அதிகாரிக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6(1)-ன் கீழ் மின்வாரியம் சம்பந்தப்பட்ட கேள்விக்கு தகவல் பெற மனு அளித்தார்.

    ஆனால் அதற்கான பதில் ஏதும் வராத நிலையில் 26.01.2021 அன்று சென்னையில் உள்ள தகவல் ஆணையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். இந்த வழக்கு விசார ணைக்காக அவர் 2 முறை வீடியோ கான்ப்ரண்ஸ் மூலமும் 3 முறை ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வந்தார்.

    இதன் தொடர்ச்சியாக விசாரணை முடிந்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்ட கேள்விக்கு தகவல் தராத ராமநாதபுரம் மாவட்ட மின் வாரியத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    மனுதாரர் செய்யது இப்ராஹிமுக்கு உடனடியாக அவரின் கேள்விக்கு பதிலளிக்கவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவின்படி, கீழக்கரை உதவி மின் பொறியாளர் ரூ.10 ஆயிரத்தை அபராத மாக செலுத்தினார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களுக்கு 165 வீடுகளுக்கு வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
    • மேற்கண்ட தகவலை கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் முதல்-அமைச்சர் மீனவ வீட்டு வசதி திட்டத்தில் மீனவர்க ளுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவித்தார். அதை தொடர்ந்து ராமநாத புரம் மாவட்டத்திற்கு 165 வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது.

    கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு உறுப்பி னர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இத் திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் அல்லது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலு வலக வேலை நாட்களில் விலையின்றி பெற்று கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட ராமநாத புரம் மாவட்டத்திலுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்கு நர்கள் அல்லது துணை இயக்குநர் அலுவலகங்களை நேரில் தொடர்பு கொள்ள லாம்.

    விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தினை அரசு வழிகாட்டு நெறி முறைகளின்படி பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட உதவி இயக்குநர் அலுவ லகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவே அல்லது நேரடியாகவே 30.11.2023 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு சம்மந்தப் பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி அல்லது துணை இயக்குநர் அலுவலங்களை தொடர்புகொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரவித்துள்ளார்.

    • ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு அனுமதிக்க கூடாது.
    • முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மனித நேய மக்கள் கட்சி தலைவருமான ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மனித நேய மக்கள் கட்சி தலைவருமான ஜவாஹி ருல்லா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு இருக்கும் காவிரி படுகை என்பது ராமநாதபுரம் மாவட்டம் வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கையாகிய ஹெல்ப் அடிப்படையில் 3-வது சுற்றுத்திறந்தவெளி ஏலம் மூலம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,403 சதுர கிலோ மீட்டர் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றிருந்தது.

    தற்போது அப்பகுதியில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் 20 சோதனை கிணறுகளை அமைக்கத் திட்ட மிட்டுள்ளது. கிணறு ஒன்றுக்கு 33 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் மொத்தமாக 20 சோதனை கிணறுகளை 675 கோடி ரூபாய் செலவில் அமைக்க முடிவு செய்துள்ளது.

    சோதனை கிணற்றுக் கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்கமதிப்பீட்டு ஆணை யத்திடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விண்ணப்பித் துள்ளது. திருவாடானை, ராமநாதபுரம், கீழக்கரை, முதுகுளத்தூர், பரமக்குடி, மற்றும் கடலாடி வட்டம் மற்றும் சிவகங்கையின் தேவகோட்டை வட்டத்தில் அமைக்க ஓ.என்.ஜி.சி. அனுமதி கோரியுள்ளது.

    இந்த திட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ராமநாதபுரத்தில் திட்டத்தைத் தொடங்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் ஓ.என்.ஜி.சி. நிறு வனத்தின் செயலுக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது.

    அரியலூர், கடலூர் மாவட்டங்களில் இத்திட்டத்திற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க வில்லை. இதனை முன்மா திரியாகக் கொண்டு ராம நாதபுரம் மாவட்டத்திலும் சூழலியலைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஐக்கிய ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சந்தைத்திடல் முன்பு ராமநாதபுரம் மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் பாலஸ்தீன அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய முஸ்லிம் ஜமாத் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளருமான ஷாஜ ஹான் தலைமை வகித்தார்.மாவட்ட பொதுச் செய லாளர்ஆலம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் தொகுதி எம்.பி.நவாஸ்கனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    மண்டபம் வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் லுத்துபுல்லா, ராமநாதபுரம் பாசிப்பட்டறைத்தெரு முஸ்லிம் ஜமாத் மேனேஜிங் டிரஸ்டி அசரப்அலி, டிரஸ்டி ஜபருல்லாஹ்கான், கீழக்கரை டவுன் ஹாஜி காதர்பக்ஸ், மாவட்ட உலமா சபை தலைவர் முஹம்மது இபுராஹிம், செயலாளர் ஜலால், ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ. நிதியுதவி வழங்கப்பட்டது.
    • காதர்பாட்ஷா முத்துராம லிங்கம் கலந்து கொண்டு அனைவருக்கும் ஜூஸ் வழங்கி உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது 10 விசைப்படகுகள் மற்றும் 64 மீனவர்கள் இலங்கை கடற் படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.

    எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 10 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதனைதொடர்ந்து மீன வர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தங்கச்சி மடத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்க கூட்டமைப்பு சார்பில் இரண்டு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தின் இறுதியில் ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு அனைவருக்கும் ஜூஸ் வழங்கி உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.

    இதனைதொடர்ந்து, அவ ரது சொந்த நிதியில் இருந்து இலங்கை சிறையில் உள்ள 64 மீனவர்களின் குடும்பத்தினரின் செலவுக்காக தலா 5 ஆயிரம் 54 பேருக்கும் வீதம் 3.20 லட்சம் ரொக்க பணம் வழங்கினார்.

    • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு சார்பில் பயிற்சி பட்டறை நடந்தது.
    • தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களின் ஒன்றாக செயல்பட்டு வருகின்றன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நான் முதல்வன் நிரல் திருவிழா அறிமுகம் மற்றும் விளக்கப்பட்டரை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களின் ஒன்றாக செயல்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் நோக்கம் தொழில், கல்வி மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களின் எதிர்கா லத்திற்கான திட்ட இலக்கீட்டை எளிதாக கை யாளும் வகையில் அவர்க ளுக்கான வழிகாட்டுதலை மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

    பொதுவாக கல்லூரி இறுதியாண்டில் படிக்கும் மாணவர்களுக்கான திட்டத்தின் போது அவர்க ளுக்கு ஏற்படும் இடையூறு களை கண்டறிந்து சரியான வழிகாட்டுதலை மேற் கொள்ள செய்வதன் மூலம் ஒவ்வொரு மாணவரின் எதிர்காலம் சிறந்து விளங்கும். அதுதான் நான் முதல்வன் என்னும் திட்டத்தில் உன்னத லட்சியமாகும்.

    இத்திட்டத்தில் மாணவர்களுக்கு தக்க வழிகாட்டுதலை மேற்கொள்ள சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. மற்றும் அண்ணா பல்கலைக் கழகத்தை சேர்ந்த அனுபவம் மிக்க மாணவர்கள் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு புராஜக்ட் திட்டத்திற்கு தக்க ஆலோசனை மற்றும் வழி காட்டுதலை செய்து கொடுப்பதற்கான பணி களை தொழில் பயிற்சி நிலையம் முதல்வர்கள் மற்றும் கல்லூரி முதல் வர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாண வர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் இறுதி யாண்டு கல்வியை முடித்து ஒவ்வொருவரின் லட்சிய மும் நிறைவேறிடும் வகை யில் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் உதவி இயக்குநர் திறன் பயிற்சி குமரவேல், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் மாரிமுத்து, ஓம் பிரகாஷ் திட்ட மேலாளர் ரூபன், மாவட்ட தொழில் மையம் உதவி பொறியாளர் பிரதீப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தீபாவளி பண்டிகை தினத்தில் காலை 6-7 மணி, இரவு 7-8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.
    • ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    தீபாவளித் திருநாளில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின் றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோ திகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார் கள்.

    பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொட ரப்பட்ட பொது நல வழக் கில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன் படுத்தி பட்டாசுகளை உற் பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது.

    அந்த தீர்ப்பின் அடிப்ப டையில், தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ண யம் செய்து அனுமதி வழங்கி யது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட் டாசுகளை வெடிக்க வேண் டும் எனத் தெரிவிக்கப்படு கிறது.மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித் தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்பு ணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

    இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசு களை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வா கம், உள்ளாட்சி அமைப்புக ளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளி யில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்ப தற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

    அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழி பாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங் களில் பட்டாசுகள் வெடிப்ப தைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

    • பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் மாலை அணிவித்தார்.
    • தேவர் நினைவாலயம் பொறுப்பாளர் காந்தி மீனாளை சந்தித்து நலம் விசாரித்தார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் முத்து ராமலிங்கத்தேவர் சிலைக்கு ஓ.பி.ரவீந்திரநாத் தனது ஆதரவாளர்களுடன் மாலை அணிவித்து தரிசனம் செய்தார்.

    பின்னர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வாழ்ந்த இல்லத்திற்கு சென்ற ஓ.பி.ரவீந்திரநாத்தை பழனி, தங்கவேலு ஆகி யோர் வரவேற்றனர்.

    தேவர் நினைவாலயம் பொ றுப்பாளர் காந்தி மீனாளை சந்தித்து நலம் விசாரித்தார். அவரது ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் மதுரை ராஜ்மோகன், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் மூக்கையா, ஓ.பி.எஸ்., ஆதரவு ஒன்றிய செய லாளர்கள் கருப்புச்சட்டை முருகேசன், முத்துராம லிங்கம், கோவிலாங்குளம் சரவணன், வாசுதேவன், மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் மருத்துவர் பரிதி, இளை ஞரணி மாவட்ட செயலாளர் சிண்ணான்டு தேவன், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஓ.பி.எஸ். ஆதர வாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பரமக்குடியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் தி.மு.க. கட்சி கொடியை எம்.எல்.ஏ. ஏற்றி வைத்தார்.
    • வடக்கு நகர செயலாளர் ஜீவரத்தினம் வரவேற்றார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா வடக்கு நகர் கழகம் சார்பில் 8-வது வார்டு பகுதியில் நடந்தது. இதையொட்டி தி.மு.க. கொடி கம்பம், கல்வெட்டு அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கொடி யேற்றும் நிகழ்ச்சி முருகேசன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. கட்சி கொடியினை ஏற்றி வைத்து கல்வெட்டை திறந்து வைத்தார். பின்னர் பொது மக்கள், கட்சியினருக்கு இனிப்பு களை வழங்கினார். வடக்கு நகர செயலாளர் ஜீவரத்தினம் வரவேற்றார்.

    இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் அருளானந்த், போகலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிரவன், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் செல்வி, சர்மிளா, நகர் மன்ற உறுப்பினர்கள் அப்துல் மாலிக், பாக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொண்டியில் மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடந்தது.
    • அல்ஹிலால் மெட்ரிக் பள்ளி தாளாளர் அஹமது இப்ராகிம் நன்றி கூறினார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள அமீர் சுல்தான் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6ம் ஆண்டு பள்ளி மாணாவர்களுக்கான மாவட்ட அளவிலான எம்.ஆர்.எம். அப்துர்-ரகீம் பேச்சுப்போட்டி நடந்தது. தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முகம்மது ரபீக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அல்ஹிலால் அறக்கட்டளை தலைவர் கமால்பாட்ஷா தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் அப்துல் ரவூப் நிஸ்தார் வரவேற்று பேசினார். தொண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ, மாணவிகள் சமகால இந்தியா சமத்துவத்தின் சோலையா? சீரழிவின் பாலையா? என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டனர்.

    முதல் பரிசு கீழக்கரை பியர்ல் மெட்ரிக் பள்ளி மாணவி கிருஷ் ரோஷிணி, 2-ம் பரிசு தொண்டி அல்ஹிலால் மெட்ரிக் பள்ளி மாணவி அல்ஹா, 3-ம் பரிசு ராமநாதபுரம் செய்யது அம்மமாள் ஆண்கள் மெட்ரிக் பள்ளி மாணவர் செல்வக்குமார், தமிழ் பேச்சுப்போட்டியில் முதல் பரிசு ஆர்.எஸ்.மங்களம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் முகம்மது அஸ் பாக், 2-ம் பரிசு தொண்டி அல்ஹிலால் மெட்ரிக் பள்ளி மாணவி ஹசன் பியாஷா, 3-ம் பரிசு ஆர்.எஸ்.மங்களம் ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி மாணவி கமர் மெர்ஸிஹா ஆகியோர் பெற்றனர். அல்ஹிலால் மெட்ரிக் பள்ளி தாளாளர் அஹமது இப்ராகிம் நன்றி கூறினார்.

    • நெல் மகசூலை பெருக்குவதற்கான வழிமுறைகளை வேளாண் அதிகாரி ஆலோசனை வழங்கினார்.
    • இந்த தகவலை ராமநாதபுரம் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    நெல் விளைச்சலில் 40 விழுக்காடு உர நிர்வா கத்தை பொருத்தே அமை கிறது. இயற்கை எருக்களான பசுந்தாள் உரம், தொழு உரம், மண்புழு உரம், மக்கிய தென்னை நார்க் கழிவு, செயற்கை உரங்க ளான யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் உரங்கள், உயிர் உரங்களான பாஸ்போ பாக்டீரியா, அசோஸ் பைரில்லம், நுண்ணூட்ட சத்துக்களை சேர்த்து சமச்சீர் உணவாக நெல்லுக்கு அளிப்பது தான் ஒருங்கிணைந்த உர மேலாண்மை நிர்வாகம். நிலவளத்தை காத்து, விளைச்சலை அதிகரிக்க செய்ய முடியும்.

    மண் ஆய்வு அடிப்ப டையில் வயலில் வேதியியல் உரங்களை இட வேண்டும். இதனால் மண்ணிலிருந்து பயிருக்கு கிடைக்கும் உரச் சத்தின் அளவையும் பயிரின் உரத் தேவையையும் தீர்மானிக்கலாம். இதனால் தேவைக்குக் குறைவான அல்லது அதிகமாக உர மிடுவதை தவிர்க்கலாம்.

    மண் ஆய்வு செய்யாத நிலமாக இருப்பின், ஏக்க ருக்கு 50 கிலோ தழைச் சத்தும், 20 கிலோ மணிச் சத்தும், 20 கிலோ சாம்பல் சத்தும் இட வேண்டும். இதில் அடியுரமாக மணிச் சத்தை ஊட்டமேற்றிய தொழு உரமாக இட வேண்டும்.

    நெல் பயிரின் இளம் பருவத்தில் வேர்ப்பிடித்து நன்றாக வளர்வதற்கும், பூக்கள் பூப்பதற்கும், நெல் மணிகளின் வளர்ச்சி எண்ணிக்கை, முதிர்வ டைதல் ஆகியவற்றை சீராக்கி விளைச்சலைப் பெருக்குவதற்கு ஏக்கருக்கு 63 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை 300 கிலோ தொழு உரத்துடன் கலந்து ஒரு மாதம் காற்று புகாமல் வைத்து ஊட்டமேற்றிய தொழுவுரமாக மாற்றி கடைசி உழவின்போது இட வேண்டும்.

    இரும்பு சத்து குறை பாடுள்ள நிலத்தில் அடியு ரமாக பெரஸ் சல்பேட்டை ஹெக்டேருக்கு 50 கிலோ என்ற அளவில் இட வேண்டும். மானாவாரி நெல்லுக்கு சிங்க் சல்பேட் ஹெக்டேருக்கு 25 கிலோ என்ற அளவில் விதைப்பின் போது இட வேண்டும்.

    ஒரு ஹெக்டேருக்கு 10 பாக்கெட் அசோஸ்பை ரில்லம், 10 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றுடன் 25 கிலோ தொழு உரம் 25 கிலோ மண் கலந்து வயலில் முதல் மழை வந்தவுடன் தெளிக்க வேண்டும்.

    நெல் பயிருக்கு மேலுர மிடுவதில் மிகுந்த கவனம் தேவை. நெல் வளர்ச்சியில் தூர்கட்டும் பருவம், தண்டு உருளும் பருவம், பூக்கும் தருணம் ஆகிய காலங்களில் பயிர்களுக்கு உணவு சத்துக்களின் தேவை அதிகம். இதற்கு தழைச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.

    மானாவாரியில் பகுதி பாசனம் செய்யும் நெல் ரகங்களுக்கு தழைச்சத்து அடங்கிய யூரியாவை நட்ட 20, 40, 60-ம் நாளில் முறையே ஏக்கருக்கு 22 கிலோ யூரியா என்ற அளவில் இட வேண்டும். சாம்பல் சத்து உரத்தை நட்ட 20, 40-ம் நாளில் முறையே ஏக்கருக்கு 8, 9 கிலோ இட வேண்டும்.

    இலைவழி உரமாக 1 சதம் யூரியாவை 1 சதம் டி.ஏ.பி. கரைசலை இரு முறை குருத்து உருவான தருணத்திலும், 10 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறையும் தெளிப்பது நல்லது.

    இந்த வழிமுறை களை முறையாக பயன்படுத் துவதால் நெல் மகசூலை பெருக்கமுடியும்.

    இந்த தகவலை ராமநாதபுரம் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார்.

    • சிறப்பு மருத்துவ முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் பெறலாம்.
    • கறவை மாடு மற்றும் கன்றுகள் பராமரித்து வரும் நபர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் பரிசுப் பொருட்களை கலெக்டர் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் வண்ணாங்குண்டு ஊராட்சி புதூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால்வளத்துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற் றது. ராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி கால்நடை களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதா வது:-

    தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க கால்நடை களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 3 மாதத்திற்கு ஒரு முறை நடைபெற்று வருகி றது. அதனடிப்படையில் தற்போது நான்காம் கட்ட சிறப்பு மருத்துவ முகாம் நேற்று துவங்கி 21 நாட்கள் நடைபெறுகிறது. இதில் விடு பட்ட கால்நடைகளுக்கு 10.12.2023 அன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் 20 சிறப்பு மருத்துவ முகாம்கள் வீதம் 120 முகாம்கள் நடைபெறுகி ன்றன. தங்கள் பகுதிகளில் நடைபெறும் கால்நடைகளுக் கான மருத்துவ முகாமில் கால்நடை வளர்ப்போர்கள் தவறாமல் கால்நடைகளை அழைத்து வந்து உரிய பரி சோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    தற்பொழுது நடைபெறும் மருத்துவ முகாம்களில் கால் நடைகளை தாக்கி வரும் கொடிய வைரஸ்களை கண் டறிந்து உரிய சிகிச்சை வழங்குதல் மற்றும் கறவை மாடுகளின் சினைப்பிடிப்பு தடைபடுதல், இளங்கன்று கள் இறப்பு போன்றவற்றை தடுத்திடும் வகையில் தேவை யான முன்னேற்பாடு சிகிச்சை வழங்குதல் அதிகள வில் பாதிப்பை ஏற்படுத்தும் கால்காணை மற்றும் வாய் காணை நோய்க்கான தடுப் பூசி மருந்துகள் வழங்குதல், அதேபோல் வீடுகளில் வளர்க்கக்கூடிய கோழி, நாய் போன்றவற்றிற்கும் மருத்துவ சிகிச்சை வழங்கப் படுகின்றன. எனவே மாடு, ஆடு வளர்த்து வரும் பொது மக்கள் தங்கள் கால்நடை களை கட்டாயம் மருத்துவ முகாமிற்கு அழைத்து வந்து உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு சிறந்த முறையில் பராமரித்து பயன்பெற்றிட வேண்டும் என்றார்.

    பின்னர் சிறப்பாக கறவை மாடு மற்றும் கன்றுகள் பராமரித்து வரும் நபர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் பரிசுப் பொருட்களை கலெக்டர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் இளங் கோவன், பால்வளத்துறை துணை பதிவாளர் புஷ்ப லதா, கால்நடை பராமரிப் புத்துறை உதவி இயக்குநர் செங்குட்டுவன், திருப்புல் லணி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் புல்லாணி, கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள் ரவிச்சந்திரன், சுந்தரமூர்த்தி, முருகராஜன், ஜெபிரகாஷ், ரஜினி, பால் வளத்துறை முதுநிலை ஆய் வாளர் அண்ணாமலை, கால்நடை பராமரிப்புத்துறை ஆய்வாளர் இளமதி, வண் ணாங்குண்டு ஊராட்சி மன் றத்தலைவர் தியாகராஜன் மற்றும் அரசு அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

    ×