தேவர் நினைவிடத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் மாலை அணிவித்தார்

பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் மாலை அணிவித்தார்.தேவர் நினைவாலயம் பொறுப்பாளர் காந்தி மீனாளை சந்தித்து நலம் விசாரித்தார்.
பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு ஓ.பி.ரவீந்திரநாத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு ஓ.பி.ரவீந்திரநாத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Published on

பசும்பொன்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் முத்து ராமலிங்கத்தேவர் சிலைக்கு ஓ.பி.ரவீந்திரநாத் தனது ஆதரவாளர்களுடன் மாலை அணிவித்து தரிசனம் செய்தார்.

பின்னர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வாழ்ந்த இல்லத்திற்கு சென்ற ஓ.பி.ரவீந்திரநாத்தை பழனி, தங்கவேலு ஆகி யோர் வரவேற்றனர்.

தேவர் நினைவாலயம் பொ றுப்பாளர் காந்தி மீனாளை சந்தித்து நலம் விசாரித்தார். அவரது ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் மதுரை ராஜ்மோகன், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் மூக்கையா, ஓ.பி.எஸ்., ஆதரவு ஒன்றிய செய லாளர்கள் கருப்புச்சட்டை முருகேசன், முத்துராம லிங்கம், கோவிலாங்குளம் சரவணன், வாசுதேவன், மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் மருத்துவர் பரிதி, இளை ஞரணி மாவட்ட செயலாளர் சிண்ணான்டு தேவன், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஓ.பி.எஸ். ஆதர வாளர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com