என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • வெட்டன் விடுதி அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது
    • எம்.எல்.ஏ. முத்துராஜா, மாணவர்களுக்கு வழங்கினார்

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவ ட்டம் கறம்பக்குடி ஒன்றியம் வெட்டன் விடுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி யில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலை யில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதுக்கோ ட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா கலந்துகொண்டு பள்ளியில் பயிலும் 170 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவ ண்டியை வழங்கி பேசினார்.அப்போது அவர் கூறிய தாவது:- தமிழக முதல்வர் கல்வித் துறைக்கு அதிக முக்கியத்து வம் அளித்து மாணவ, மாணவியரின் நலனில் அக்கறை கொண்டு பல்வே று திட்டங்களை நடைமுறை ப்படுத்தி வருகிறார். அதனை நன்கு பயன்படு த்தி மாணவர்கள் தங்களு டைய கல்வித்தரத்தை உய ர்த்திக் கொள்ள வேண்டும். என்று கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலை வரும், கறம்பக்குடி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாள ருமான தவ.பாஞ்சாலன், அறந்தாங்கி கல்வி மாவட்ட அதிகாரி ராஜேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் காசிநாதன், தலைமை ஆசிரியர் வின்செ ன்ட், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்கு மார், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், ராம சரவணன், தியாக இளஞ்செ ழியன் மற்றும் ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மாணவ மாணவியர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நின்று கொண்டிருந்த பஸ் மீது சரக்கு வேன் மோதியதில், அதில் பயணித்த ஒருவர் பலியானார்
    • க கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

    கந்தர்வகோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தெத்துவாசல் பட்டி பேருந்து நிறுத்தத்தில் தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் பயணிகள் இறங்கி கொண்டிருந்த பொழுது,  புதுக்கோட்டை பாலன் நகரை சேர்ந்த முத்து மகன் ஐயப்பன்(வயது 23) ஓட்டி வந்த சரக்கு வேன் பேருந்தின் பின்புறம் மோதியது.  இந்த விபத்தில்  சரக்கு வேனில் அமர்ந்திருந்த ஆட்டங்குடி கருப்பையா மகன் பாண்டியன் (வயது 40) தனியார் நிறுவன ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவல் அறிந்த கந்தர்வகோட்டை காவல்துறையினர் பாண்டியன் உடலை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சரக்கு வேன் ஓட்டி வந்த ஐயப்பன் படுகாயம் அடைந்தார்.இது தொடர்பாக கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

    • விராலிமலை அருகே கிராம நிர்வாக அதிகாரி மர்ம மரணமடைந்துள்ளார்
    • விராலிமலை போலீசார் வழக்கு பதிந்து கொலையா ?என்று விசாரணை நடத்தி வருகின்றனர்

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா மிரட்டு நிலையை சேர்ந்தவர் குடியரசு மகன் சிதம்பரம் (வயது 39). இவர் கடந்த 2018-ம் ஆண்டு வெம்மணி கிராம நிர்வாக அலுவலராக பணியில் சேர்ந்தார்.பின்னர் விராலிமலையை அடுத்த வெம்மணி கிராமம் அருகே உள்ள நீர்பழனியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார்.இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    தற்போது இவர் விரா லிமலை அருண் கார்டன் பகுதியில் வீடு வாட கைக்கு எடுத்து தனியாக தங்கி பணிக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சிதம்பரம் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை யடுத்து கிராம உதவியாளர் பன்னீர் என்பவர் அருண்கா ர்டனில் உள்ள சிதம்பரம் தங்கியிருந்த வீட்டில் சென்று பார்த்துள்ளார். அப்போது சிதம்பரம் மர்ம மான முறையில் இறந்து கிடந்தார்.இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து விராலிமலை கிராம நிர்வாக அதிகாரி ஜீவானந்தத்திற்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து விராலிமலை கிராம நிர்வாக அதிகாரி விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிதம்பரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை செய்து கொண் டாரா? அல்லது யாரேனும் கொலை செய்தனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். விரா லிமலை அருகே கிராம நிர்வாக அதிகாரி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் கிராம சபை கூட்டங்கள்

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.தச்சங்குறிச்சி ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் தலைவர் ராணி அந்தோணி சாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்குகள் அமைத்தல், அரசு பள்ளிக்கு கழிவறை மற்றும் குளம் தூர்வார்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கிராம பொதுமக்கள் கோரிக்கையாக வைத்தனர்.கூட்டத்தில் கலந்து கொண்ட கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை பேசும் போது, வரும் ஆண்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தங்கள் ஊராட்சியும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்றும் கூறினார்.மேலும், அரசு அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.

    கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக், தி.மு.க. ஒன்றிய செயலாளர் தமிழ் அய்யா, அனைத்து துறை அதிகாரிகள், துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் ராமன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.அதேபோல் கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையிலும், பழைய கந்தர்வகோட்டை கிராம சபை கூட்டம் தலைவர் ராணி முருகேசன் தலைமையிலும், அண்டனூர் கிராம சபை கூட்டம் தலைவர் இளங்கோவன் தலைமையிலும், விராலிப்பட்டி கிராம சபை கூட்டம் தலைவர் ஆர். எஸ்.முத்துக்குமார் தலைமையிலும், கோமாபுரம் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் தலைவர் அன்பு தலைமையிலும்,காட்டு நாவல் கிராம சபை கூட்டம் தலைவர் ஆரஞ்சு பாப்பா குணசேகரன், தலைமையிலும் அரவம்பட்டி கிராம சபை கூட்டம் தலைவர் சிவரஞ்சனி சசிகுமார் தலைமையிலும் நடைபெற்றது.

    • பாண்டிக்குடி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது
    • ஊராட்சி மன்ற தலைவர் ஒரு தலைபட்சமாகவும் செயல்படுவதாக குற்றம் சாட்டி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் பாண்டிக்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா ஆண்டியப்பன் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதி குறைநிறைகளை முன்வைத்தனர்.அதற்கு அதிகாரிகள் முறையான தீர்வு மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். இந்நிலையில் 2-வது வார்டு ஊராட்சிமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி, 4 ஆண்டுகள் கடந்தும் தனது வார்டில் எந்த ஒரு மக்கள் பணியும் நடைபெறவில்லை என்றும் இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டால் முறையான பதில் இல்லையென்று குற்றம் சாட்டினார்.மேலும் ஊாட்சி மன்ற தலைவர் ஒரு தலைபட்சமாகவும், ஊராட்சி உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம் சாட்டி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிற ஜனவரி 26-ந்தேதிக்குள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து ராஜினாமா கடிதம் வாபஸ் பெறப்பட்டது.கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர் திடீர் ராஜினாமா முடிவால் கூட்டம் பரபரப்பாக கானப்பட்டது.

    • குழிபிறை ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
    • கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம் குழிபிறை ஊராட்சியில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டம் தலைவர் அழகப்பன் நடைபெற்றது. அதில் திருமயம் வட்டார சுகாதார பொறுப்பாளர் சரவணன், கல்வித்துறை பொறுப்பாளர் மற்றும் மாற்றுத் திறனாளி ஆசிரியர் பேபி, ஏ. சி. முத்தையா, மருத்துவக் குழு செவிலியர், துணை சுகாதார மைய செவிலியர், நியாய விலை கடை பொறுப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    15 தீர்மானங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மாநில அரசின் திட்டங்கள் பற்றி விரிவாக சொல்லப்பட்டது. மத்திய அரசின் பிஎம்ஏஒய் திட்டத்தில் வீடுகள் பெற்ற பயனாளிகள் 7 பேர் மற்றும் உதவி தலைவர், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    இந்த கூட்டத்தில் சட்டமன்றத் தொகுதி நிதியிலிருந்து மினி ஓஎச்டி கட்ட இடம் , அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி உறிஞ்சி குழாய் அமைப்பது. மூணு கிலோ மீட்டர் தொலைவிற்கு தார் சாலை வேண்டி மனு கொடுப்பது. ஜல்ஜீவன் திட்டத்தில் 810 வீடுகளுக்கு குடிநீர், குழி பிறை ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம், துணை மின் நிலையம் வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • திருமயம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது
    • ஏராளமான கிராமத்தினர் கலந்து கொண்டு குறைகளை எடுத்து கூறினர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி கிராம சபா கூட்டம் சீமானூர் ஸ்ரீ ராகவேந்திரா நகரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவர் சரவணன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வீரமணி, ரத்தினம், வீராசாமி, பாண்டியம்மாள், ஊராட்சி செயலாளர் குமார், கிராம நிர்வாக அலுவலர் மீனாள், சுகாதார ஆய்வாளர் ரங்கசாமி, வனசரக அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குனர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம், சுப்பிரமணியன், கால்நடை மருத்துவர் மோகனப்பிரியா, பொதுமக்கள், சுய உதவி குழுக்கள், நீர்நிலை பாசன தலைவர்கள் பிரபாகரன், செல்லப்பன், வாசகர் வட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம், சமூக ஆர்வலர் சைமன், மகாத்மா காந்தி தேசிய ஊரக பணித்தள பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

    • அறந்தாங்கி நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்றது
    • மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவகாமி சுந்தரி தலைமையில் நடைபெற்றது

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யும் பணிகள் மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவகாமி சுந்தரி தலைமையில் நடைபெற்றது.

    இதில் நீதிமன்ற ஊழியர்கள், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நீதிமன்ற வளாகத்தில் உள்ள குப்பைகள் சேகரிக்கப்பட்டு, மட்கும் குப்பைகள், மட்கா குப்பைகள் என பிரிக்கப்பட்டது. மேலும் வளாகத்தில் உள்ள தேவையற்ற மரம், செடிகள் அகற்றப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் சரோஜா, வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் அருள்ராஜ், அரசு வழக்கறிஞர் கண்ணன், வழக்கறிஞர்கள் வினோத்குமார், செந்தில்குமார், பிரியா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பேத்தியின் இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருக்கும் போது திடீரென தாத்தாவும் மயங்கி விழுந்து உயிரை விட்டார்.
    • பேத்தியும் தாத்தாவும் ஒரே நாளில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை கோவிலூர் தெருவை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 50). பைக் மெக்கானிக்.

    இவரது மகள் ஹாசினி (15). இவர் கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று ஹாசினி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து மாணவி உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

    பேத்தியின் தற்கொலையால் தாத்தா சுப்பிரமணியன் (75 ) சோகத்துடன் காணப்பட்டார். பேத்தியின் இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருக்கும் போது திடீரென அவர் மயங்கி விழுந்து உயிரை விட்டார்.

    பேத்தியும் தாத்தாவும் ஒரே நாளில் இறந்ததால் அந்த பகுதி மக்கள் சோகத்துடன் காணப்பட்டனர்.

    • புதுக்கோட்டை வேம்பங்குடியில் குடிபோதை தகராறு காரணமாக வாலிபர் சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்டார்
    • அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள வேம்பங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்(வயது 42). இவரது உறவினரான அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(40) என்பவரை அழைத்துக் கொண்டு கீரமங்கலம் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள அரசு மதுபான கடைக்கு மது அருந்த சென்றுள்ளார். மது வாங்கிய பின்னர், அங்குள்ள மரத்தடியில் நின்று இருவரும் மது அருந்தியுள்ளனர்.அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் அருள், தான் வைத்திருந்த கத்தியால், ஆறுமுகத்தை குத்த முயன்றுள்ளார். இதில் ஆறுமுகத்திற்கு இடது கையில் கத்தி குத்து விழுந்துள்ளது.இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், அருளின் கையில் இருந்த கத்தியை பிடுங்கி அருளை சரமாரியாக உடல் முழுவதும் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார்.இதில் கழுத்து, தலை மற்றும் முதுகு உள்ளிட்ட இடங்களில் ஆழமான குத்து விழுந்துள்ளது. இரத்த வெள்ளத்தில் மிதந்த அருளை மீட்ட கீரமங்கலம் போலீசார், சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆறுமுகத்திற்கும் கையில் காயம் இருந்ததால், அவரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.

    அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    • புதுக்கோட்டையில் பள்ளிகளில் தூய்மை சேவை பணிகள் நடைபெற்றது
    • மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    நபார்டு வளர்ச்சி வங்கி முன்னோடி வங்கி, பள்ளிக்கல்வித்துறை, சூழலியல் உரிமைக்கான இளையோர் அமைப்பு, கிரின்கேர் பவு ண்டேசன் ஆகியவை இணைந்து  புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி, முதன்மை கல்வி அலுவலக வளாகம் ஆகியவற்றில் ஒரு முறை ஒரு மணி நேரம் என்ற தலைப்பின் கீழ் பள்ளி வளாகங்கள் தூய்மை செய்யும் பணி மற்றும் மர க்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நபார்டு வங்கியின் மாவட்ட வள ர்ச்சி மேலாளர். தீபக்கு மார் வரவேற்று பேசினார்.

    முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் தலைமை வகித்தார். ராணியார் அரசு மகளிர் மேல்நிலை ப்பள்ளி யின் தலைமையாசிரியர் தமிழரசி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவி யாளர் ( உயர்நிலை) ராஜு, மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்  மெ.சி.சாலை செந்தில்,பள்ளித்துணை ஆய்வா ளர் மாரிமுத்து, சூழலியல் உரிமைக்கான இளையோர் அமைப்பின் ஆதப்பன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.நிகழ்ச்சியில் பள்ளி வளா கங்கள் சுத்தம் செய்யப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு தூய்மையை பாதுகாப்பதில் தன்னார்வலர்களின் இன்றியமையா பங்கு பற்றி எடுத்துக்கூறப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கிரி ன்கேர் பவுண்டேசன் ஒரு ங்கிணைப்பாளர் ரெங்க சாமி, திருவருள் மற்றும் பலர் சூழலியல் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    • அறந்தாங்கியில் 1 கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் பனைவிதைகளை நட்டு தொடங்கி வைத்தனர்

    அறந்தாங்கி, 

    புதுக்கோட்டை மாவ ட்டம் மணமேல்குடி அம்மா பட்டினத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1 கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடாசுற்று ச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணி திட்டம் ஆகிய அமைப்புகள் சார்பில் கடற்கரை பகுதியில் திருவ ள்ளுர் முதல் கன்னியா குமரி வரை 14 மாவட்டங்க ளில் சுமார் 1076 கிலோ மீட்டர் தூரத்தில் 1 கோடி பனை விதைகள் நட ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி முதல் அரசங்கரை வரை சீனியார் அன்பறிவகம், தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி மற்றும் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் சார்பில் பனை விதை நடும் விழா நடைபெற்றது.நிகழ்ச்சியில் அமைச்ச ர்கள் எஸ். ரகு பதி, மெய்ய நாதன் கலந்து கொண்டு பனை விதைகள் நட்டு நிகழ்ச்சியை ெதாடங்கி வைத்த னர்.முன்னதாக பனை மரம் குறத்தும் அதன் பயன்பாடு மற்றும் பராமரித்தல் குறித்து ம் உறுதிமொழி ஏற்கப்ப ட்டது.

    ×