என் மலர்
உள்ளூர் செய்திகள்

குழிபிறை ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம்
- குழிபிறை ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் குழிபிறை ஊராட்சியில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டம் தலைவர் அழகப்பன் நடைபெற்றது. அதில் திருமயம் வட்டார சுகாதார பொறுப்பாளர் சரவணன், கல்வித்துறை பொறுப்பாளர் மற்றும் மாற்றுத் திறனாளி ஆசிரியர் பேபி, ஏ. சி. முத்தையா, மருத்துவக் குழு செவிலியர், துணை சுகாதார மைய செவிலியர், நியாய விலை கடை பொறுப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
15 தீர்மானங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மாநில அரசின் திட்டங்கள் பற்றி விரிவாக சொல்லப்பட்டது. மத்திய அரசின் பிஎம்ஏஒய் திட்டத்தில் வீடுகள் பெற்ற பயனாளிகள் 7 பேர் மற்றும் உதவி தலைவர், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த கூட்டத்தில் சட்டமன்றத் தொகுதி நிதியிலிருந்து மினி ஓஎச்டி கட்ட இடம் , அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி உறிஞ்சி குழாய் அமைப்பது. மூணு கிலோ மீட்டர் தொலைவிற்கு தார் சாலை வேண்டி மனு கொடுப்பது. ஜல்ஜீவன் திட்டத்தில் 810 வீடுகளுக்கு குடிநீர், குழி பிறை ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம், துணை மின் நிலையம் வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






