என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் சரமாரியாக குத்தி கொலை
- புதுக்கோட்டை வேம்பங்குடியில் குடிபோதை தகராறு காரணமாக வாலிபர் சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்டார்
- அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள வேம்பங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்(வயது 42). இவரது உறவினரான அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(40) என்பவரை அழைத்துக் கொண்டு கீரமங்கலம் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள அரசு மதுபான கடைக்கு மது அருந்த சென்றுள்ளார். மது வாங்கிய பின்னர், அங்குள்ள மரத்தடியில் நின்று இருவரும் மது அருந்தியுள்ளனர்.அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் அருள், தான் வைத்திருந்த கத்தியால், ஆறுமுகத்தை குத்த முயன்றுள்ளார். இதில் ஆறுமுகத்திற்கு இடது கையில் கத்தி குத்து விழுந்துள்ளது.இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், அருளின் கையில் இருந்த கத்தியை பிடுங்கி அருளை சரமாரியாக உடல் முழுவதும் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார்.இதில் கழுத்து, தலை மற்றும் முதுகு உள்ளிட்ட இடங்களில் ஆழமான குத்து விழுந்துள்ளது. இரத்த வெள்ளத்தில் மிதந்த அருளை மீட்ட கீரமங்கலம் போலீசார், சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆறுமுகத்திற்கும் கையில் காயம் இருந்ததால், அவரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.
அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்






