பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி

வெட்டன் விடுதி அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது எம்.எல்.ஏ. முத்துராஜா, மாணவர்களுக்கு வழங்கினார்
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி
Published on: 

கறம்பக்குடி, 

புதுக்கோட்டை மாவ ட்டம் கறம்பக்குடி ஒன்றியம் வெட்டன் விடுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி யில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலை யில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதுக்கோ ட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா கலந்துகொண்டு பள்ளியில் பயிலும் 170 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவ ண்டியை வழங்கி பேசினார்.அப்போது அவர் கூறிய தாவது:- தமிழக முதல்வர் கல்வித் துறைக்கு அதிக முக்கியத்து வம் அளித்து மாணவ, மாணவியரின் நலனில் அக்கறை கொண்டு பல்வே று திட்டங்களை நடைமுறை ப்படுத்தி வருகிறார். அதனை நன்கு பயன்படு த்தி மாணவர்கள் தங்களு டைய கல்வித்தரத்தை உய ர்த்திக் கொள்ள வேண்டும். என்று கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலை வரும், கறம்பக்குடி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாள ருமான தவ.பாஞ்சாலன், அறந்தாங்கி கல்வி மாவட்ட அதிகாரி ராஜேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் காசிநாதன், தலைமை ஆசிரியர் வின்செ ன்ட், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்கு மார், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், ராம சரவணன், தியாக இளஞ்செ ழியன் மற்றும் ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மாணவ மாணவியர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com