என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • புதுக்கோட்டை பகுதி நெற்பயிரில் குலைநோய், புகையான் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்
    • கட்டுப்படுத்திட வேளாண்மை துணை இயக்குனர் ஆலோசனை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தாங்கள் மேற்கொள்ளும் சம்பா நெற்பயிரில் குலைநோய் மற்றும் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்திட புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.குலைநோய் தாக்கப்பட்டால், . இலை களின்மேல் பழுப்பு நிறத்தில் சாம்பல் நிற மையப்பகுதியுடனும் காய்ந்த ஓரங்களுடன்கூடிய கண்வடிவப் புள்ளிகள் காணப்படும்.இந்நோய் தீவிரமாகத் தாக்கும்போது பயிர் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிப்பதால் குலைநோய் எனப்படுகிறது.குலைநோயைக் கட்டுப்படுத்திட விவசாயிகள் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை கடைப்பிடித்தல் வேண்டும்.இந்நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்திட டிரைசைக்ளோசோல் 75 டபிள்யு.பி. என்ற மருந்து 120 கிராம் அல்லது அசோஸ்க்சிட்ரோபின் 23 எஸ்.சி. என்ற மருந்து 200 மி.லி. இதில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.புகையான் என்பது ஒரு தத்துப்பூச்சி. சாம்பல் நிறத்தில் இருக்கும். கண்ணாடி போன்ற சிறிய இறக்கைகளைக் கொண்டி ருக்கும். இப்பூச்சியானது நெற்பயிரின் தூர்களில் இருந்துகொண்டு நெற்பயிரின் சாற்றை உறிஞ்சுகிறது.

    வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்போதும் இதன் பாதிப்பு அதிகமாகும். மேலும், நெருக்கி நடப்பட்ட வயல்களிலும், தழைச்சத்து அதிகமாக இடப்பட்ட வயல்களிலும் இதன் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.விவசாயிகள் வயல் வரப்புகளைத் தூய்மையாக வைத்திருப்பதோடு,நெற்பயிரை நெருக்கமாக நடுவதைத் தவிர்த்து செம்மை நெல் சாகுபடி முறையில் நட வேண்டும்.அல்லது, எட்டடிக்கு ஓர் அடி இடைவெளியில் பட்டம் விட்டு நடவு செய்ய வேண்டும்.வயலில் நீர் மறைய நீர் கட்ட வேண்டும். மேலும், யூரியா போன்ற தழைச்சத்து உரங்களை மேலுரமாக இடும்பொழுது பிரித்துப்பிரித்து இட வேண்டும். இவ்வாறு புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.புகையானின் தாக்குதல் அதிகமாகும்பொழுது ஏக்கருக்கு புப்ரோபெசின் 25 எஸ்.சி. 300 மி.லி. அல்லது தையோமீத்தாக்சம் 25 டபிள்யு.ஜி. 40 கிராம் அல்லது இமிடாகுளோபிரிடு 17.8 எஸ்.எல். 40 மி.லி. இவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து நெற்பயிரின் தூர்ப் பகுதியில் நன்கு படும்படி தெளித்துக் கட்டுப்படுத்தலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • புதுக்கோட்டை அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்
    • கைது செய்யப்பட்ட தொழிலாளி மீது பட்டுக்கோட்டை அருகே நடந்த கொலை சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 34 வயது தொழிலாளிக்கு 14 வயதில் மகள் உள்ளார். இவர் அரசு பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்தநிலையில் அந்த தொழிலாளி தனது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும் இதனை வேறு யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.இதனால் வேதனை அடைந்த சிறுமி நடந்த சம்பவத்தை தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் இலுப்பூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த தொழிலாளியை கைது செய்தார்.பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட தொழிலாளி மீது பட்டுக்கோட்டை அருகே நடந்த கொலை சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • புதுக்கோட்டையில் நவராத்திரியை முன்னிட்டு வண்ணமயமான கொலு பொம்மைகள் விற்பனை
    • கொலு பொம்மைகள் பார்வையிட்டு பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்

    புதுக்கோட்டை,

    நவராத்திரி தினங்களில் வீட்டில் கொலு பொம்மைகள் வைப்பது வழக்கம். இந்தாண்டு நவராத்திரி வரும் 15-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு புதுக்கோட்டையில் கொலு பொம்மைகள் விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளது.

    புதுக்கோட்டை நகரில் சாந்த நாதர் சுவாமி ஆலயம் அருகில், விநாயகர், முருகன், வள்ளி தெய்வானை, சரஸ்வதி, லட்சுமி, மாரியம்மன், மதுரை மீனாட்சி, காமாட்சி, கிருஷ்ணர், ராதை கண்ணன், ஆஞ்சநேயர் மற்றும் தலைவர்களுடைய காந்தி, காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, அப்துல் கலாம் மற்றும் திருமண செட்டு, கோவில் குளங்கள், பாடசாலை உள்ளிட்ட பல்வேறு பொம்மைகள் சிறியது முதல் பெரியது வரை விற்பனைக்கு வந்துள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர் நவராத்திரி விழா வீடுகள் கோவில கோவில்களில் சிறப்பாக நடைபெற இருக்கின்ற நிலையில் கொலு பொம்மைகள் பார்வையிட்டு வாங்கி செல்கின்றனர்

    • உழவர் கடன் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறையால் சிறப்பு முகாம் நாடு முழுவதும் 01-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை உழவர் கடன் அட்டை பெறாத விவசா யிகள் இம்முகாம்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.உழவர் அட்டை மூலம் கடன் பெறும் விவசாயிகளிடம் 7% வட்டி வசூலிக்கப்படும். மேலும், இக்கடன் பெற்ற விவசாயி கள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முறையாகத் தவணை மாறாமல் திரும்பச் செலுத்தினால் 3% வரை வட்டி மானியம் பெறலாம். உழவர் கடன் அட்டைத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ரூ.1.60 இலட்சம் வரை எவ்விதப் பிணையமும் இன்றிக் கடன் வழங்கப்படும்.உழவர் கடன் அட்டை மூலம் கடன் பெறுவதற்கு விவசாயிகள் தங்களின் நில ஆவணங்கள் (பட்டா/சிட்டா, அடங்கல்) ஆதார் அட்டை (கட்டாயம்), பான் அட்டை இவற்றுடன் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வங்கிக் கிளைகளிலும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

    • விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் உள்பட அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
    • வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    புதுக்கோட்டை:

    தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான அ.தி.மு.க.வை சேர்ந்தவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்.

    இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இவர் மனைவி ரம்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் உள்பட அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகினார். இந்த நிலையில் வழக்கின் விசாரணையை வரும் 30-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.

    • குடிநீர் வசதி கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்
    • அறந்தாங்கி அருகே நானாக்குடியில் சாலை மறியல்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவ ட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோ வில் தாலுகா நானாக்குடி கிரா மத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன.

    இந்நிலையில் இங்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் கூறப்படு கிறது. இதனை வலியுறுத்தி ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததை யடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக்குட ங்களுடன் அறந்தாங்கி ஆவுடையார்கோவில் சாலையிலுள்ள நானாகுடி முக்கத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இட த்திற்கு விரைந்த ஆவு டையார்கோவில் காவல்த்துறையினர் மறி யவில் ஈடுபட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் என உறுதி அளித்தனர்.

    அதிகாரிகளின் உறுதி யளிப்பை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால் அறந்தா ங்கி ஆவுடையார்கோவில் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்தப்படம்.

    • தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகன் தீக்குளித்து தற்கொலை
    • புதுக்கோட்டை அருகே பரிதாபம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை திருமயம் அருகே தேக்காட்டூர் லெனா விலக்கில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. முகாமை சேர்ந்தவர் சத்தியசீலன் மகன் கமல்ராஜ் நாயகம் (வயது 47). இவரது தந்தை சத்தியசீலன் உடல்நலக்குறைவு காரணமாக இலங்கையில் உயிரிழந்த செய்தி கேட்டு கமல்ராஜ் மிகுந்த வருத்தத்தில் இருந்து வந்தார். மேலும் கமல்ராஜ் குடும்பமும் இலங்கையில் உள்ள நிலையில் இவர் தனியாக முகாமில் இருந்து வந்ததால் ஆறுதல் கிடைக்காமல் மனமுடைந்த நிலையில் இருந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கமல்ராஜ் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் தீக்காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கமல்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ேவண்டும்
    • பீகார் மாநிலத்தை பின்பற்றி நடத்த வேண்டும்
    • அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவர் இளமுருகு முத்து கோரிக்கை

    புதுக்கோட்டை,

    அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் முதன்மு தலில் சாதிவாரி மக்கள்தொ கை கணக்கெடுப்பு சுதந்திர த்துக்கு முன்பாக, ஆங்கி லேயர் ஆட்சிக்காலத்தில் 1931-ம் ஆண்டு நடத்த ப்பட்டது.

    அதன் அடிப்படையி ல்தான், தற்போது இடஒது க்கீடு வழங்கப்பட்டுவருகி றது. முதல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, கடந்த 90 ஆண்டுகளில் இந்தியாவில் மக்கள்தொகை கணிசமாக அதிகரித்திரு க்கிறது.

    எனவே, புதிதாக சாதி வாரி கணக்கெடுப்பை நட த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையி ல்தான், பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு சாதிவாரி கணக்கெடு ப்பை நடத்தி முடித்திரு க்கிறது.

    மாநில அளவில் சாதி வாரி கணக்கெடுப்பை நட த்த முடியும் என்பதற்கு பீகார் மாநிலம் முன்னுதா ரமாகத் திகழ்கிறது.

    பீகார் மாடல் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படு த்தும். அதிக எண்ணிக்கையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்ப ட்டோர், பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினருக்கு நியாயமாக சென்றடைய வேண்டிய சமூக நீதி, சாதிவாரி கணக்கெடுப்பின் மூலமே உறுதி செய்யப்படும்.

    எனவே, தமிழ்நாடு அரசு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். மேலும், பீகார் மாநில அரசு மேற்கொண்டிருப்பதைப் போன்று, பட்டியல் பிரிவினருக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும், பதவி உயர்வில் இட ஒதுக்கீடும், தனியார் துறையில் இட ஒதுக்கீடும் அளிப்பதற்கும் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புதுக்கோட்டையில் சிறப்பு தூய்மை முகாம்
    • கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது

    புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாசில்தார் அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மாபெரும் சிறப்பு தூய்மை முகாம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பேசும் போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் குப்பை அதிகமாக சேரும் பகுதிகள் கண்டறியப்பட்டு, பொதுமக்களின் பங்களிப்போடு தூய்மை பணியாளர்கள், சுயஉதவி குழு உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பினர் மற்றும் அனைத்து தரப்பினரையும் இந்தத் தூய்மைப் பணியில் ஈடுபடுத்திட நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

    அதன்படி, சாலையோ ரங்கள், தெருக்கள், நீர்நி லைப் பகுதிகள், பொது நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி பகுதிகள், சுகாதார மையங்கள் அங்கன்வாடிப் பகுதிகள், பேருந்து நிறுத்த ங்கள், சந்தைகள் மற்றும் குப்பைகள் சேரும் பகுதிகள் கண்டறியப்பட்டு இப்ப ணிகள் மேற்கொள்ள ப்பட்டது.

    எனவே பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்து த்தர ப்பினரும், தங்களின் சுற்று ப்புறப் பகுதிகளை தூய்மை செய்து, சுற்றுசுழலை தூய்மையாக பாதுகாத்திட வேண்டும் என கூறினார்.

    அதனைத்தொடர்ந்து 'தூய்மையே சேவை" எனும் உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து அரசு அலுவல ர்களும், பணியாளர்களும் ஏற்றுக்கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவி தப்பிரியா, புதுக்கோட்டை உதவி கலெக்டர் முருகேசன், திருமயம் ஒன்றியக்குழுத் தலைவர் அழ.ராமு, வட்டார வளர்ச்சி அலுவல ர்கள் நளினி, சங்கர் தாசில்தார் புவியரசன்,

    ஊராட்சிமன்றத் தலைவர் சிக்கந்தர் உள்ளா ட்சி அமைப்புகளின் பிரதி நிதி கள், தூய்மைப் பணி யாளர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்துகொ ண்டனர்.

    திருமயம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மாபெரும் தூய்மையே சேவை என்ற சிறப்பு தூய்மை முகாமை கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்ட காட்சி.

    • இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிளை கூட்டம்
    • அறந்தாங்கி அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிளை கூட்டம்

     அறந்தாங்கி,

    அறந்தாங்கி பாலகிருஷ்ணாபுரம் பிள்ளையார்கோயில் அருகே நடைபெற்றக் கூட்டத்திற்கு கிளை துணை செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார்.

    அப்போது பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த ஒர் ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் குடிநீர் தட்டுபாட்டை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், மாத்தூர் முதல் பாலகிருஷ்ணாபுரம் வரை உள்ள சாலையில் தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும், மின்னமர்சான்குளம், பெரியகுளம் ஆகிய ஏரிகளில் பழுதடைந்த மடைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், கிளை நிர்வாகிகள் ரெத்தினசாமி, நீலகண்டன், ராஜேந்திரன், சக்திவேல், கார்த்திக், தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிளைக் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    • கந்தர்வகோட்டையில் இருந்து புறப்பட்டு திருச்சியில் உள்ள கல்லூரிக்கு சென்ற மாணவிகள் மாயமானார்கள்
    • கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டை சின்ன அரிசிக்காரர் தெருவை சேர்ந்தவர் ராஜா பஷீர் மகள் யாஸ்மீனா (வயது 19). அதே பகுதியை சேர்ந்த அப்துல் காதர் மகள் சபீனா (18) இவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கல்லூரி விடுமுறை முடிந்து கடந்த 2-ந் தேதி காலை இவர்கள் இருவரும் கந்தர்வகோட்டையில் இருந்து திருச்சி கல்லூரிக்கு சென்றனர். ஆனால் மாணவிகள் இருவரும் கல்லூரிக்கு வரவில்லை என்று பெற்றோருக்கு தகவல் வந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மாணவிகளை அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தனர். எந்த தகவலும் கிடைக்காததால் கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்
    • பொதுப்பாதையை ஆக்கிரமித்ததை கண்டித்து போராட்டம் நடைபெற்றது

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சேவுகன் தெருவில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் பயன்பாட்டில் உள்ள பொதுப் பாதையை அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் பட்டா பெற்றுக் கொண்டு வேலி அமைத்ததால் கிராம மக்கள் செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.இது தொடர்பாக கலெக்டர், ஆர் டி ஓ, தாசில்தார் என்று அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால் ஆத்திரமடைந்த மக்கள் தனி நபருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து தங்களுக்கு பாதை ஏற்படுத்தி தரும் வரை தாலுகா அலுவலகத்தில் குடியிருப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவுறுத்தனர்.அதன்படி நேற்று 100க்கும் மேற்பட்ட மக்கள் குடம் சமையல் பாத்திரம் தலையணை மற்றும் உடமைகளுடன் தாலுக்கா அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து குடியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து தாசில்தார் ராமசாமி இன்ஸ்பெக்டர் செந்தூர பாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ×