search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பீகார் மாநிலத்தை பின்பற்றி  தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவர் இளமுருகு முத்து கோரிக்கை
    X

    பீகார் மாநிலத்தை பின்பற்றி தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவர் இளமுருகு முத்து கோரிக்கை

    • தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ேவண்டும்
    • பீகார் மாநிலத்தை பின்பற்றி நடத்த வேண்டும்
    • அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவர் இளமுருகு முத்து கோரிக்கை

    புதுக்கோட்டை,

    அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் முதன்மு தலில் சாதிவாரி மக்கள்தொ கை கணக்கெடுப்பு சுதந்திர த்துக்கு முன்பாக, ஆங்கி லேயர் ஆட்சிக்காலத்தில் 1931-ம் ஆண்டு நடத்த ப்பட்டது.

    அதன் அடிப்படையி ல்தான், தற்போது இடஒது க்கீடு வழங்கப்பட்டுவருகி றது. முதல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, கடந்த 90 ஆண்டுகளில் இந்தியாவில் மக்கள்தொகை கணிசமாக அதிகரித்திரு க்கிறது.

    எனவே, புதிதாக சாதி வாரி கணக்கெடுப்பை நட த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையி ல்தான், பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு சாதிவாரி கணக்கெடு ப்பை நடத்தி முடித்திரு க்கிறது.

    மாநில அளவில் சாதி வாரி கணக்கெடுப்பை நட த்த முடியும் என்பதற்கு பீகார் மாநிலம் முன்னுதா ரமாகத் திகழ்கிறது.

    பீகார் மாடல் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படு த்தும். அதிக எண்ணிக்கையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்ப ட்டோர், பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினருக்கு நியாயமாக சென்றடைய வேண்டிய சமூக நீதி, சாதிவாரி கணக்கெடுப்பின் மூலமே உறுதி செய்யப்படும்.

    எனவே, தமிழ்நாடு அரசு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். மேலும், பீகார் மாநில அரசு மேற்கொண்டிருப்பதைப் போன்று, பட்டியல் பிரிவினருக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும், பதவி உயர்வில் இட ஒதுக்கீடும், தனியார் துறையில் இட ஒதுக்கீடும் அளிப்பதற்கும் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×