என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • அறந்தாங்கியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமையுமா? என்று பொதுமக்ககள் எதிர்பார்க்கின்றனர்
    • புதுக்கோட்டை பரந்து விரிந்த மாவட்ட மாக இருப்பதால் அரசின் சலுகைகள் மக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு

    அறந்தாங்கி,

    திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை பிரித்து கடந்த 1974-ம் ஆண்டு புதுக் கோட்டை மாவட்டம் உதய மானது .புதுக்கோட்டை மாவட்ட த்தில் புதுக்கோட்டை, அறந் தாங்கி, ஆலங்குடி, திருமயம், கந்தர்வகோட்டை, விராலி மலை என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.இதில் புதுக்கோட்டை , அறந்தாங்கி ஆகிய 2 நகரா ட்சிகளும், ஆலங்குடி , இலுப்பூர், அரிமளம், கீர னூர், கறம்பக்குடி, பொன்ன மராவதி, கீரமங்களம், அன் னவாசல் ஆகிய 8 பேரூரா ட்களும்,புதுக்கோட்டை, அறந்தா ங்கி, இலுப்பூர் ஆகிய 3 வருவாய் கோட்டங்களும் மற்றும் 12 வட்டங்கள் அடங்கிய சுமார் 20 லட்சம் மக்கள் தொகையை கொண்ட பெரிய மாவட்டமாக புதுக் கோட்டை திகழ்கிறது.பரந்து விரிந்த மாவட்ட மாக இருப்பதால் அரசின் சலுகைகள் மக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்களது தேவை களை விரைந்து செயல்ப டுத்தி கொள்வும், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தவும்,மாவட்டத்தின் 2-வது பெரிய நகராட்சியை கொண்ட அறந்தாங்கியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் ஒரு குழுவாக அமைந்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வரு கின்றனர்.குறிப்பாக அறந்தாங்கி சட்டமன்ற தொகுயில் 3 தாலுகாக்களும், உதவி கலெக்டர் அலுவலகம், வேளாண் பொறியியல் துறை அலுவலகம், சுகாதார அலுவலகம், மாவட்ட தலைமை மருத்துவமனை,மாவட்டக் கல்வி அலுவல கம், ஒருங்கிணைந்த நீதிம ன்றங்கள், சிறைச்சாலை, மின்வாரிய செயற்பொறி யாளர் அலுவலகம், போக்கு வரத்து பணிமனை, பொது ப்பணித் துறை உள்ளிட்ட அநேக அலுவலகங்களும் உள்ளன. இருந்த போதிலும் மாவட்டத்தின் தலைமை யகம் புதுக்கோட்டையில் உள்ளதால் இங்கிருந்து மக்கள் தொலைதூரத்தில் சென்று மாவட்ட கலெ க்டரை சந்திக்க வேணடி்யு ள்ளது.இது குறித்து ம.ஜ.க. மனித உரிமை பாதுகாப்பு அணி மாநில செயலாளர் முபாரக் அலி கூறுகையில்,அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதி மக்கள் தங்களுடைய அடிப்படை தேவைகளுக்கு 40,50 கிலோ மீட்டர் தூர த்தில் உள்ள மாவட்ட கலெ க்டர் அலுவலகத்திற்கு சென்று வர மிகவும் சிரம த்தை சந்திக்க வேண்டி யுள்ளது.இதனால் அறந்தாங்கி நகரை தலைமையிடமாகக் கொண்டு அறந்தாங்கி மாவ ட்டம் அமைத்து தரபல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்து வருகி ன்றனர்.அப்படி அமைக்கும் பட்ச த்தில் அதற்குரிய சட்டமன்ற தொகுதிகளாக அறந்தாங்கி ஆலங்குடி தொகுதிகளை சேர்த்து அமைத்துக் கொள் ளலாம் அல்லது அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியோடு பேராவூரணி தொகுதியை இணைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.அதே போன்று சி.ஐ.டி.யு. ஒருங்கிணைப்பாளர் கர்ணா கூறுகையில், புதுக் கோட்டைக்கு நிகராக அற ந்தாங்கியிலும் மக்கள் தொகை பெருக்கம் அடை ந்துவிட்டது.ஏற்கனவே அறந்தாங்கி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனை யாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதன் கட்டமை ப்புகள் சீரமைக்கும் பணிகள் தாமதமடைந்து வருகிறது.

    இதே அறந்தாங்கி மாவட் டமாக இருந்திருந்தால் பணி கள் விரைந்து முடிக்கப்பட்டி ருக்கும், அதே போன்று அறந்தாங்கியிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவ ட்டங்களுக்கு நேரடியாக பேருந்துகள் இயக்கப்படுகி றது,ஆனால் மக்கள் தொகை பெருகியபோதிலும் பேருந்து நிலையம் இன்னும் விரி வாக்கம் செய்யப்பட வில்லை. மேலும் தற்போது ள்ள நெருக்கடியில் காவல் நிலையம் இரண்டாக பிரிக்க வேண்டும் இதெல்லாம் சாத்தியப்பட வேண்டும் என்றால் அறந்தாங்கியை தலைைமயிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார்.

    • அமைச்சர் மெய்யநாதன் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடைபெற்றது
    • திருவரங்குளம் மேற்கு ஒன்றியம் ஆலங்குடி பேரூர் தி.மு.க. சார்பாக மேலகரும்புரான் கோட்டை வெற்றி விநாயகர் கோவில் திடலில் நடைபெற்றது

    ஆலங்குடி,

    தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொள்ளும், விழாக்களில் மரக்கன்றுகள் நட்டு வைப்பது வழக்கம். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அதிக அளவில் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு இடங்களில் குறுங்காடுகள் அமைத்து மா, பலா, உட்பட பல்வேறு மரக்கன்றுகளை நடவு செய்து அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டு உள்ளார். இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவர், பிறந்தநாளையொட்டி வாழ்த்துக்கள் கூறி யாரும் டிஜிட்டல் பேனர் வைக்க வேண்டாம். என் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தங்களால் முடிந்தவரை மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை மேம்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டார்.இதனை தொடர்ந்து திருவரங்குளம் மேற்கு ஒன்றியம் ஆலங்குடி பேரூர் தி.மு.க. சார்பாக மேலகரும்புரான் கோட்டை வெற்றி விநாயகர் கோவில் திடலில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றி,ய நகர பொறுப்பாளர்கள், உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது
    • 1500-க்கு மேற்பட்ட பெற்றோர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் நடத்திய அறியியல் மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சி பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது.

    கண்காட்சியினை பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி திறந்து வைத்து மாணவர்களின் அறிவியல் சிந்தனையையும் கலை பொருட்கள் மீதுள்ள ஆர்வத்தையும் பாராட்டினார். இதில் சந்திராயன்-3 மாதிரி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.சந்திராயன்-3 மாதிரி தொழில்நுட்பத்தோடு இயங்கும் முறையில் மாணவர்களால் உருவாக்கப்பட்டதால் பெற்றோர்கள் ஆர்வமுடன் கேட்டும் கண்டும் ரசித்தனர். தமிழர்களின் பழைய கலையான பொம்மலாட்ட பொம்மைகள் மூலம் கதை சொல்லும் கைவினை பொருட்கள், வானத்தில் இருக்கும் கோள்களின் அமைப்பு மற்றும் பழைய சீன முறையில் உருவாக்கப்பட்ட எளிய கணித கருவி ஆகியவை கண்காட்சியில் இடம்பெற்றன.

    ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைவினைப்பொருட்களும் 200-க்கும் மேற்பட்ட அறிவியல் தொடர்பான பொருட்களும் மேலும் 300-க்கும் மேற்பட்ட வானியல், கணிதம், சுற்றுச்சூழல் தொடர்பான பொருட்களும் இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

    இதனை 1500-க்கு மேற்பட்ட பெற்றோர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர். இந்நிகழ்வினை மாணவர்களே ஒருங்கிணைத்து நடத்தினர்.

    • புதுக்கோட்டையில் நேரடி நெல் விதைப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டது
    • வேளாண்மை இணை இயக்குநர் வழங்கினார்

    புதுக்கோட்டை,

    அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி வட்டாரத்தில் நேரடி நெல் விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு நெல் நுண்சத்து, சூடோமோனாஸ், திரவ அசோபைரில்லம், திரவ பாக்டீரியா முதலிய உயிர் உரங்கள், வரப்பு பயிராக சாகுபடி செய்திட உளுந்து, விதைகள் முதலிய இடுபொருட்களை புதுக்கோட்டை மாவட்டவேளாண்மை இணை இயக்குநர், மா.பெரியசாமி, வழங்கினார். மேலும் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களை களஆய்வுகள் செய்து அதிகபட்ச மகசூல் எடுத்திட தொழில் நுட்பஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.இது குறித்து அவர் பேசும்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் பருவ மழையைப் பயன்படுத்தி கோடை உழவு செய்யப்பட்ட நிலத்தில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டு வருகிறது. அறந்தாங்கி வட்டாரத்தில் 6623 ஹெக்டரும், ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 5313 ஹெக்டரிலும், நேரடி நெல்விதைப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    ஒரு ஹெக்டருக்கு ரூ.7500/- மானியத்தில் நேரடி நெல் விதைப்பு விவசாயிகளுக்கு அறந்தாங்கி வட்டாரத்தில் 24 ஹெக்டரிலும், ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 24 ஹெக்ட ரிலும், மணமேல்குடி வட்டாரத்தில் 24 ஹெக்டரிலும், அரிமளம் வட்டாரத்தில் 8 ஹெக்டரி லும், மொத்தம் புது க்கோட்டை மாவட்டத்தில் 80 ஹெக்டரில் உயர் தொழில்நுட்ப வழிமுறை களை கடைபிடித்து விவசாயிகள் அதிக மகசூல்பெற விவசாயிகளின் வயல்களில் செயல் விளக்கங் கள்அமைக்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.

    வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய அரசு திட்டம்)மா.ஆதிசாமி, தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் திட்ட ஆலோசகர்என்.சர்புதீன், தொழில் நுட்ப உதவியாளர், கார்த்திக், ஆவுடையார்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்சவிதா, அறந்தாங்கி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்பத்மப்ரியா, மணமேல்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன், வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவிவேளாண்மை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • அத்திப்பள்ளி பட்டாசு விபத்து செய்தி அறிந்ததால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக யாரும் கடைக்கு அருகில் செல்லவில்லை.
    • தீ விபத்து மின் கசிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அறந்தாங்கி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் சரக்கு வாகனங்களில் இருந்து பட்டாசுகள் இறக்கும் போது, திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் சிக்கி 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் புதுக்கோட்டை மணமேல்குடியில் உள்ள பட்டாசு கடையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் மணமேல்குடி கடைவீதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிக்கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை பூட்டியிருந்த கடையில் இருந்து பெரும் சத்தம் கேட்டதை கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அங்கு வந்து பார்த்த போது பூட்டப்பட்ட பட்டாசு கடையில் இருந்து பெரும் சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறின.

    மேலும் அந்த கடையில் இருந்து பெரும் புகைமூட்டம் எழுந்தது. ஏற்கனவே அத்திப்பள்ளி பட்டாசு விபத்து செய்தி அறிந்ததால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக யாரும் கடைக்கு அருகில் செல்லவில்லை.

    இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு துறை அங்கு வந்தனர். பாதுகாப்பு கவசங்கள் அணிந்த தீயணைப்பு வீரர் கடைக்கு அருகில் சென்று கடையின் பூட்டை உடைத்து திறந்தார். பின்னர் தீயணைப்பு வீரர்கள் சற்று தூரத்தில் நின்று தண்ணீர் அடித்து வெடித்து சிதறிக்கொண்டிருந்த பட்டாசு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அருகில் சென்று தண்ணீர் உதவியுடன் தீயை முற்றிலுமாக அணைத்தனர். இதனால் தீயானது அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்து அங்கு வந்த மணல்மேல்குடி போலீசார், தீ விபத்து குறித்து உரிமையாளர் காளிமுத்து மற்றும் அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமானது தெரிய வந்தது.

    மேலும் இந்த தீ விபத்து மின் கசிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காலை நேரம் என்பதாலும், கடை திறக்கப்படவில்லை என்பதாலும், தீ விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதுக்கோட்டையில் அறிவியல் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது
    • 1500-க்கு மேற்பட்ட பெற்றோர்கள், பொதுமக்கள் கண்காட்சியை கண்டு களித்தனர்

    புதுக்கோட்டை,

    ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் நடத்திய அறியியல் மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சி பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது.

    இக்கண்காட்சியினை பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி திறந்து வைத்து,  மாணவர்களின் அறிவியல் சிந்தனையையும்,  கலை பொருட்கள் மீதுள்ள ஆர்வத்தையும் கண்டு பாராட்டினார்.  இதில் சந்திராயன்-3  மாதிரி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சந்திராயன்-3 மாதிரி தொழில்நுட்பத்தோடு இயங்கும் முறையில் மாணவர்களால்  உருவாக்கப்பட்டதால் பெற்றோர்கள் ஆர்வமுடன் கேட்டும் கண்டும் ரசித்தனர். தமிழர்களின் பாரம்பரிய கலையான பொம்மலாட்ட பொம்மைகள், மூலம் கதை சொல்லும் கைவினை பொருட்கள், வானத்தில் இருக்கும் கோள்களின் அமைப்பு , பழைய சீன முறையில் உருவாக்கப்பட்ட  எளிய கணித கருவி ஆகியவை கண்காட்சியில் இடம்பெற்று, புதிய செய்திகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் இருந்தது.  மாணவர்களுக்கு  எளிமையான கற்றலுக்கும், இந்த அறிவியல் மற்றும் கைவினைப்  பொருட்கள் கண்காட்சி பயனுள்ளதாக அமைந்தது. ஆயிரத்திற்கும்  மேற்பட்ட கைவினைப்பொருட்களும் இருநூறுக்கு மேற்பட்ட அறிவியல்  தொடர்பான பொருட்களும், முந்நூறுக்கும் மேற்பட்ட வானியல்,  கணிதம், சுற்றுச்சூழல் தொடர்பான பொருட்களும் இக்கண்காட்சியில்  இடம்பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை  1500-க்கு மேற்பட்ட பெற்றோர்கள்,  பொதுமக்கள்  கண்டு ரசித்தனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை மாணவர்களே ஒருங்கிணைந்து செய்திருந்தது பள்ளிக்கு பெருமை சேர்ப்பதாய் அமைந்தது.

    • ஆலங்குடி ஐயப்பன் கோவிலில் 17ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது
    • 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்தனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் குத்துவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.  17ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை  தற்போது நடைபெற்றது. கோவில் வளாகத்தில் நடைபெற்ற, இந்த குத்துவிளக்கு பூஜையில்,  இதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். திருமணம், குழந்தை பாக்கியம், மாங்கல்யம் நிலைத்திட வேண்டி பெண்கள், குத்துவிளக்கிற்கு முன்பாக, வேத விற்பன்னர்களின் உதவியுடன், மந்திரங்கள் உச்சரித்து வழிபாடு நடத்தினர்.

    • கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் நியமிக்க கோரி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
    • முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ தலைமையில் நடந்தது

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர்களை நியமித்து 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதியை சேர்ந்தவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி அ.தி. மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி கறம்பக்குடி சீனி கடைமுக்கத்தில் அ.தி.மு.க .சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட செயலாளருமான விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.அப்போது அவர் தாலிக்கு தங்கமும், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிக்ஸி,கிரைண்டர் உள்ளிட்டவற்றை வழங்கி மக்களின் மனதறிந்து அள்ளிக் கொடுத்தது அ.தி.மு.க. அரசு. ஆனால் இன்று அரசு அந்த மக்கள் நல திட்டங்களை எல்லாம் நிறுத்திவிட்டது என்றும் கறம்பக்குடியில் 22 நாட்களாக மக்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். ஆனால் ஆளுகின்ற கட்சியை சேர்ந்தவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், யாரேனும் வந்து பார்த்தார்களா என்றால் இல்லை. எனவே கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் நியமிக்க கோரி வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும். வரும் நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி ஆகிவிட்டது என்றும் அவர் பேசினார்.கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. இளைய மன்னர் கார்த்திக் தொண்டை மான், நெடுஞ்செழியன் ,நார்த்தாமலை ஆறுமுகம், ராஜநாயகம் ,அன்னவாசல் ஒன்றிய பெருந்தலைவர் ராமசாமி, மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கருப்பையா, கந்தர்வகோட்டை ஒன்றிய பெருந்தலைவர் ரத்தினவேல் என்ற கார்த்திக் மழவராயர், ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை மணல்மேல்குடியில் பட்டாசு கடையில் இன்று திடீர் தீ விபத்து
    • ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்தன

    அறந்தாங்கி, 

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் மணமேல்குடி கடைவீதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏ.கே.எம்.ட்ரேடர்ஸ் என்ற வெடிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை பூட்டியிருந்த கடையில் இருந்து பெரும் சத்தம் கேட்டுள்ளதை கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.தொடர்ந்து அங்கு வந்து பார்த்த போது பூட்டப்பட்ட பட்டாசு கடையில் இருந்து பெரும் சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறி உள்ளன. மேலும் அந்த கடையில் இருந்து பெரும் புகைமூட்டம் எழுந்துள்ளது. ஏற்கனவே அத்திடிப்பள்ளி பட்டாசு விபத்து செய்தி அறிந்ததால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக யாரும் கடைக்கு அருகில் செல்லவில்லை.

    இது குறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு துறை அங்கு வந்தனர். பாதுகாப்பு கவசங்கள் அணிந்த தீயணைப்பு வீரர் கடைக்கு அருகில் சென்று கடையின் பூட்டை உடைத்து திறந்தார். பின்னர் தீயணைப்பு வீரர்கள் சற்று தூரத்தில் நின்று தண்ணீர் அடித்து வெடித்து சிதறிக்கொண்டிருந்த பட்டாசு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அருகில் சென்று தண்ணீர் உதவியுடன் தீயை முற்றிலுமாக அணைத்தனர். இதனால் தீயானது அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்துஅங்கு வந்த மணல்மேல்குடி போலீசார், தீ விபத்து குறித்து உரிமையாளர் காளிமுத்து, மற்றும் அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமானது தெரிய வந்தது. மேலும் இந்த தீ விபத்து மின் கசிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காலை நேரம் என்பதாலும், கடை திறக்கப்படவில்லை என்பதாலும், தீ விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது
    • பாதிப்பு எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து டெங்கு பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிய நிலையில் தற்போது ஒரே நாளில் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் நேற்று ஒரே நாளில் மட்டும் 18 பேர் காய்ச்சலால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காய்ச்சலால் மட்டும் 139 பேர் தற்போது மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகளில் சுகாதாரத் துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது 530க்கும் மேற்பட்ட டெங்கு தடுப்பு பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளில் வீடு வீடாக சென்று களப்பணி ஆட்சி வரும் சூழலில் பொதுமக்களும் எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டுமென சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    தொடர்ந்து டெங்கு பாதிப்பு கண்டறியப்படும் பகுதிகளில் கூடுதல் பணியாளர்கள் டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறி வந்தவுடன் மருத்துவமனைக்கு வந்து உரிய பரிசோதனை மேற்கொண்டு அதன்படி மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்றும் தனியார் மருந்து கடைகளில் காய்ச்சல் மருந்து வாங்கி உட்கொள்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • பொதுமக்களும் எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டுமென சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து டெங்கு பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிய நிலையில் தற்போது ஒரே நாளில் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 18 பேர் காய்ச்சலால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    காய்ச்சலால் மட்டும் 139 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது 530-க்கும் மேற்பட்ட டெங்கு தடுப்பு பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

    பொதுமக்களும் எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டுமென சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    தொடர்ந்து டெங்கு பாதிப்பு கண்டறியப்படும் பகுதிகளில் கூடுதல் பணியாளர்கள் டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறி வந்தவுடன் மருத்துவமனைக்கு வந்து உரிய பரிசோதனை மேற்கொண்டு அதன்படி மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்றும் தனியார் மருந்து கடைகளில் காய்ச்சல் மருந்து வாங்கி உட்கொள்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • புதுக்கோட்டை பகுதி நெற்பயிரில் குலைநோய், புகையான் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்
    • கட்டுப்படுத்திட வேளாண்மை துணை இயக்குனர் ஆலோசனை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தாங்கள் மேற்கொள்ளும் சம்பா நெற்பயிரில் குலைநோய் மற்றும் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்திட புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.குலைநோய் தாக்கப்பட்டால், . இலை களின்மேல் பழுப்பு நிறத்தில் சாம்பல் நிற மையப்பகுதியுடனும் காய்ந்த ஓரங்களுடன்கூடிய கண்வடிவப் புள்ளிகள் காணப்படும்.இந்நோய் தீவிரமாகத் தாக்கும்போது பயிர் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிப்பதால் குலைநோய் எனப்படுகிறது.குலைநோயைக் கட்டுப்படுத்திட விவசாயிகள் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை கடைப்பிடித்தல் வேண்டும்.இந்நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்திட டிரைசைக்ளோசோல் 75 டபிள்யு.பி. என்ற மருந்து 120 கிராம் அல்லது அசோஸ்க்சிட்ரோபின் 23 எஸ்.சி. என்ற மருந்து 200 மி.லி. இதில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.புகையான் என்பது ஒரு தத்துப்பூச்சி. சாம்பல் நிறத்தில் இருக்கும். கண்ணாடி போன்ற சிறிய இறக்கைகளைக் கொண்டி ருக்கும். இப்பூச்சியானது நெற்பயிரின் தூர்களில் இருந்துகொண்டு நெற்பயிரின் சாற்றை உறிஞ்சுகிறது.

    வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்போதும் இதன் பாதிப்பு அதிகமாகும். மேலும், நெருக்கி நடப்பட்ட வயல்களிலும், தழைச்சத்து அதிகமாக இடப்பட்ட வயல்களிலும் இதன் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.விவசாயிகள் வயல் வரப்புகளைத் தூய்மையாக வைத்திருப்பதோடு,நெற்பயிரை நெருக்கமாக நடுவதைத் தவிர்த்து செம்மை நெல் சாகுபடி முறையில் நட வேண்டும்.அல்லது, எட்டடிக்கு ஓர் அடி இடைவெளியில் பட்டம் விட்டு நடவு செய்ய வேண்டும்.வயலில் நீர் மறைய நீர் கட்ட வேண்டும். மேலும், யூரியா போன்ற தழைச்சத்து உரங்களை மேலுரமாக இடும்பொழுது பிரித்துப்பிரித்து இட வேண்டும். இவ்வாறு புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.புகையானின் தாக்குதல் அதிகமாகும்பொழுது ஏக்கருக்கு புப்ரோபெசின் 25 எஸ்.சி. 300 மி.லி. அல்லது தையோமீத்தாக்சம் 25 டபிள்யு.ஜி. 40 கிராம் அல்லது இமிடாகுளோபிரிடு 17.8 எஸ்.எல். 40 மி.லி. இவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து நெற்பயிரின் தூர்ப் பகுதியில் நன்கு படும்படி தெளித்துக் கட்டுப்படுத்தலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    ×