search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு டெங்கு
    X

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு டெங்கு

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது
    • பாதிப்பு எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து டெங்கு பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிய நிலையில் தற்போது ஒரே நாளில் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் நேற்று ஒரே நாளில் மட்டும் 18 பேர் காய்ச்சலால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காய்ச்சலால் மட்டும் 139 பேர் தற்போது மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகளில் சுகாதாரத் துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது 530க்கும் மேற்பட்ட டெங்கு தடுப்பு பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளில் வீடு வீடாக சென்று களப்பணி ஆட்சி வரும் சூழலில் பொதுமக்களும் எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டுமென சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    தொடர்ந்து டெங்கு பாதிப்பு கண்டறியப்படும் பகுதிகளில் கூடுதல் பணியாளர்கள் டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறி வந்தவுடன் மருத்துவமனைக்கு வந்து உரிய பரிசோதனை மேற்கொண்டு அதன்படி மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்றும் தனியார் மருந்து கடைகளில் காய்ச்சல் மருந்து வாங்கி உட்கொள்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×