என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    • கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் நியமிக்க கோரி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
    • முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ தலைமையில் நடந்தது

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர்களை நியமித்து 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதியை சேர்ந்தவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி அ.தி. மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி கறம்பக்குடி சீனி கடைமுக்கத்தில் அ.தி.மு.க .சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட செயலாளருமான விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.அப்போது அவர் தாலிக்கு தங்கமும், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிக்ஸி,கிரைண்டர் உள்ளிட்டவற்றை வழங்கி மக்களின் மனதறிந்து அள்ளிக் கொடுத்தது அ.தி.மு.க. அரசு. ஆனால் இன்று அரசு அந்த மக்கள் நல திட்டங்களை எல்லாம் நிறுத்திவிட்டது என்றும் கறம்பக்குடியில் 22 நாட்களாக மக்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். ஆனால் ஆளுகின்ற கட்சியை சேர்ந்தவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், யாரேனும் வந்து பார்த்தார்களா என்றால் இல்லை. எனவே கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் நியமிக்க கோரி வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும். வரும் நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி ஆகிவிட்டது என்றும் அவர் பேசினார்.கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. இளைய மன்னர் கார்த்திக் தொண்டை மான், நெடுஞ்செழியன் ,நார்த்தாமலை ஆறுமுகம், ராஜநாயகம் ,அன்னவாசல் ஒன்றிய பெருந்தலைவர் ராமசாமி, மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கருப்பையா, கந்தர்வகோட்டை ஒன்றிய பெருந்தலைவர் ரத்தினவேல் என்ற கார்த்திக் மழவராயர், ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×