என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குடியில் திருவிளக்கு பூஜை்
    X

    ஆலங்குடியில் திருவிளக்கு பூஜை்

    • ஆலங்குடி ஐயப்பன் கோவிலில் 17ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது
    • 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்தனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் குத்துவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். 17ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை தற்போது நடைபெற்றது. கோவில் வளாகத்தில் நடைபெற்ற, இந்த குத்துவிளக்கு பூஜையில், இதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். திருமணம், குழந்தை பாக்கியம், மாங்கல்யம் நிலைத்திட வேண்டி பெண்கள், குத்துவிளக்கிற்கு முன்பாக, வேத விற்பன்னர்களின் உதவியுடன், மந்திரங்கள் உச்சரித்து வழிபாடு நடத்தினர்.

    Next Story
    ×