என் மலர்
புதுக்கோட்டை
- டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரைக் குணப்படுத்த மருத்துவமனையில் போதுமான வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அரசு சார்பில் சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் காய்ச்சல் பாதிப்பு கணிசமாக உயர்ந்த வண்ணம் உள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கு என்று தனியாக வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு தேவையான மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு சராசரியாக பதிவாகி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்காக ஏற்கனவே உள்ள வார்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரப்படுகிறது. மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக போதிய அளவு மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளதாகவும் மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர், பூவரசக்குடியை சேர்ந்த 26 வயது பெண், கருவிடைசேரியை சேர்ந்த 24 வயது பெண் ஆகிய 3 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக 137 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை தொடர்ந்து புதுக்கோட்டையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கையும் தீவிரமாக எடுத்து வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி டாக்டர்கள் கூறுகையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரைக் குணப்படுத்த மருத்துவமனையில் போதுமான வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர் காய்ச்சலுக்காக வருவோரை உடனடியாகப் பரிசோதனை செய்யவும், உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தால் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றனர்.
புதுக்கோட்டை
டெங்கு காய்ச்சல் தமி ழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதே வேளையில் டெங்கு காய்ச் சல் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், புதுக்கோ ட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவம னைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்படு பவர்க ளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பொதுமக்களிடயே அச்ச த்தையும் பீதியை ஏற்படுத்தி யுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட த்தில் கடந்த ஒரு வாரத்தில் 85 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்ய ப்பட்ட நிலையில் அந்த மாவட்டத்தில் மட்டும் 151 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் காய்ச்சல் கார ணமாக 46 பேர் மருத்து வமனையில் அனுமதிக்கப்ப ட்டுள்ளனர். அவர்களில் 4 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்து ள்ளது.
டெங்கு குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாக திட்டமிட்டுள்ளது.
- கறம்பக்குடி பேரூராட்சியில் ரூ.1.88 கோடியில் மின் மயானம்
- பேரூராட்சி தலைவர் பூமிபூஜையுடன் பணிகளை தொடங்கி வைத்தார்
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவ ட்டம் கறம்பக்குடி பேரூரா ட்சியில் 15 வார்டுகள் உள் ளன. கறம்பக்குடியில் மின் மயானம் அமைக்க வேண் டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று நகர்புற அமைச்சர் ஒப்புதலோடு மின் மயானம் அமைக்க அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழ்நாடு நகர் புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் கறம்பக்குடி பேரூராட்சியில் ரூபாய் ஒரு கோடியே 88 லட்சம் மதிப்பில் மின் மயானம் அமைக்கும் பணி 5-வது வார்டு பகுதியில் தட்டபூரணி செல்லும் சாலையில் ஏற்கனவே உள்ள மயானம் அருகே மின்மயானம் அமைப்பத ற்கான பணியை பூமி பூஜை யுடன் கறம்பக்குடி பேரூரா ட்சி தலைவர் முருகேசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்தி கேயன், பேரூராட்சி துணைத் தலைவர் நைனா முகமது மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கரு ப்பையா, முருகேஸ்வரி, செண்பகவல்லி, வளர்மதி, ஜன்னத் பேகம், பரக்கத் நிஷா, ராஜா, மஞ்சுளா தேவி, பரிதாபகம், ராஜ சேகர், ரங்கசாமி மங்கை யர்கரசி மற்றும் பேரூராட்சி இளநிலை உதவியாளர் சக்திவேல் அலுவலர்கள் பணியாளர்கள் அப்துல் லத்தீப், அப்துல் அலீம், சாதிக் பாஷா மற்றும் தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கந்தர்வகோட்டை,
புனல்குளம் மற்றும் குளத்தூர் நாயக்கர் பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் புனல்குளம், தெத்துவாசல் பட்டி, மஞ்ச பேட்டை, தச்சன் குறிச்சி, விராலிப்பட்டி, நத்தமாடிப்பட்டி, சோழகம் பட்டி, நொடியூர், சமுத்திரப்பட்டி, கொத்தம்பட்டி, அரியாணிப்பட்டி, காடவராயன் பட்டி, புதுநகர், முதுகுளம், குளத்தூர் நாயக்கர் பட்டி, நடுப்பட்டி, சேவியர் குடிகாடு, ஆத்தங்கரைபட்டி, கீழ ராத்தூர், பருக்கை விடுதி, மூக்கப் புடையான் பள்ளம் ஆகிய பகுதிகளில் நாளை (12-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- கந்தர்வகோட்டை ஒன்றியம் மங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
- ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் தியாகராஜன் தலைமை தாங்கினார். நீலா சிவசங்கரி அனைவரையும் வரவேற்றார். புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மங்கனூர் மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி மையம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா, பாக்கியலெட்சுமி, மரிகார்லியா, பவானி, முத்து, பாக்கியலெட்சுமி , சாந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- அறந்தாங்கியில் ரூ.20 லட்சம் மோசடிநிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
- பொது மக்கள் தங்களது தங்களது பணத்தை மீட்டுத்தருமாறு அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருமாள்பட்டியில் என்.கே.பி. என்ற நிதி நிறுவனம் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் 2 முதல் 7 லட்சம் வரை தனி நபர் கடன் தருவதாகவும் அதற்கு ரூ.1000 செலுத்தி உறுப்பினராக வேண்டும் என நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை நம்பி ஏராளமான பொதுமக்கள் நிறுவனத்தில் உறுப்பினர்கள் ஆனார்கள். அப்போது கடன் வேண்டுவோர், இரண்டு 20 ரூபாய் பத்திரமும் இன்னும் சில ஆவணங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் முதல் மாதவட்டித் தொகையும் கட்டவேண்டும் என்று நிறுவனம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனையும் நம்பிய பொதுமக்கள் 120க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு தேவைப்படுகின்ற கடன் தொகைக்கு ஏற்றவாறு 7 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை முதல் மாத வட்டியாக செலுத்தியுள்ளனர். பணம் செலுத்தியவர்களுக்கு குறிப்பிட்ட நாளில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், யாருக்குமே பணம் ஏற்றப்படவில்லையென கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த பொது மக்கள் அலுவலகத்தை சென்று கேட்டுள்ளனர். அதற்கு நிர்வாகம் சார்பில் முறையான பதில் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள், நிறுவன உரிமையாளரிடம் தொடர்பு கொண்டுள்ளனர், அங்கிருந்து எந்த பதிலும் கிடைக்காததால், ஊழியர்கள் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்ததில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்மல்குமார் (45)என்பவரும் இவர் ஏற்கனவே பல்வேறு இடங்களில் இதே போன்று நிறுவனங்கள் தொடங்கி மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொது மக்கள் தங்களது தங்களது பணத்தை மீட்டுத்தருமாறு அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி,
பெருநாவளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் யூத் ரெட் கிராஸ் சார்பில் நடைபெற்ற இரத்த தான முகாமில் கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
யூத் ரெட்கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் முகாமை தொடங்கி வைத்தார்.முகாமில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். இதனை அறந்தாங்கி அரசு மருத்துவமனை இரத்த வங்கி அலுவலர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் மற்றும் செவிலியர்கள் குழுவினர் இரத்த யூனிட்களை பெற்று அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இரத்த தானம் வழங்கிய மாணவர்களுக்கு மருத்துவர் ராதாகிருஷ்ணன் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்வில் யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் தயாநிதி, கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் கணேஷ்குமார், தமிழ் துறை தலைவர் காளிதாஸ் உள்பட பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியைச் சேர்ந்த புதுப்பட்டி ஊராட்சி போசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அணிக்கனி பகுதியில் 100 நாள் வேலை பார்த்து வந்தனர்.
அப்போது அங்கே இருந்த மரங்களிலிருந்து கதண்டு வண்டு கிளம்பி அங்கே வேலை பார்த்த பெண்களை கொத்தியுள்ளது. இதனால் பெண்கள் அலறியடித்துக் கொண்டு தப்பித்து ஓடியுள்ளனர். இதில் கதண்டு கொட்டிய இந்திரா,சகுந்தலா, மீனா,உமா,ராணி, உள்ளிட்ட 9 பெண்களை அருகே இருந்தவர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுக்கோட்டை மாவட்டத்தில்வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
- பெறுபவர்களின் அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இந்த உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது என்று மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டிற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும்.
பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதிகள் உள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் வருடம் முழுவதும் வழங்கப்படும். மேலும் உதவித்தொகை பெறுபவர்களின் அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இந்த உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது என்று மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
- ஆழ்குழாய் மின் மோட்டார் பழுதானதால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை
- இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செங்கமேடு ஊராட்சியில் கன்னுத்தோப்பு கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி குடிநீர் தேவைக்காக, மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த நான்கு மாதங்களாக ஆழ்குழாய் மின் மோட்டார் பழுதானதால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீரின்றி பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் நெடுந்தொலைவு நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிககையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கறம்பக்குடியில் 26-வது நாளாக தொடரும் போராட்டம் பா.ஐ.க.வினர் மீது வழக்கு
- போதிய டாக்டர்கள் நியமித்து, 24 மணி நேர சிகிச்சை பிரிவு ஏற்படுத்திட வலியுறுத்தியும்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போதிய டாக்டர்கள் நியமித்து, 24 மணி நேர சிகிச்சை பிரிவு ஏற்படுத்திட வலியுறுத்தியும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் கறம்பக்குடி சீனி கடை முக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கறம்பக்குடி வடக்கு ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட துணைதலைவர் ஜீவானந்தம் தெற்கு ஒன்றிய தலைவர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். தேசிய தென்னை வாரிய உறுப்பினர் பண்ண வயல் இளங்கோவன் மாவட்ட தலைவர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். மேலும் மாநில சுற்றுச்சூழல் பிரிவு செயலாளர் அருண், மாவட்ட பொது செயலாளர் ஸ்ரீ குருராம், மாவட்டத் துணைத் தலைவர்கள் தியாகராஜன், செல்லத்துரை, கந்தர்வகோட்டை ஒன்றிய தலைவர் தவமணி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் உரிய அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜகவினர் மீது கறம்பக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சம்பா சாகுபடிக்கு தேவையான 1288.85 மெட்ரிக் டன் உரங்கள், தூத்துக்குடியில் இருந்து சரக்கு இரயிலில் வந்தது
- மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளுக்கு விவசாயிகள் பயன்படும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் 1288.85 மெட்ரிக் டன்கள் துாத்துக்குடியில் இருந்து சரக்கு இரயிலில் புதுக்கோட்டை வந்தடைந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். எனவே, சம்பா சாகுபடிக்கும் , ஏற்கனவே, பயிரிட்டுள்ள மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, தென்னை, கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் ஆகிய பயிர்களுக்கும் தேவையான உரங்கள் யூரியா 4498 மெட்ரிக் டன்கள், டிஏபி 1513 மெட்ரிக் டன்கள், பொட்டாஷ் 1564 மெட்ரிக் டன்கள், காம்ப்ளக்ஸ் 5291 மெட்ரிக் டன்கள் ஆகிய உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களான யூரியா உரம் 784.35 மெட்ரிக் டன்களும், டிஏபி உரம் 252.25 மெட்ரிக் டன்களும், காம்ப்ளக்ஸ் உரம் 252.25 மெட்ரிக் டன்களும், துாத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திலிருந்து சரக்கு இரயில் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரப்பெற்றது. இந்த உரங்கள், மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளுக்கு விவசாயிகள் பயன்படும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டது.






