என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
- அறந்தாங்கியில் ரூ.20 லட்சம் மோசடிநிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
- பொது மக்கள் தங்களது தங்களது பணத்தை மீட்டுத்தருமாறு அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருமாள்பட்டியில் என்.கே.பி. என்ற நிதி நிறுவனம் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் 2 முதல் 7 லட்சம் வரை தனி நபர் கடன் தருவதாகவும் அதற்கு ரூ.1000 செலுத்தி உறுப்பினராக வேண்டும் என நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை நம்பி ஏராளமான பொதுமக்கள் நிறுவனத்தில் உறுப்பினர்கள் ஆனார்கள். அப்போது கடன் வேண்டுவோர், இரண்டு 20 ரூபாய் பத்திரமும் இன்னும் சில ஆவணங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் முதல் மாதவட்டித் தொகையும் கட்டவேண்டும் என்று நிறுவனம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனையும் நம்பிய பொதுமக்கள் 120க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு தேவைப்படுகின்ற கடன் தொகைக்கு ஏற்றவாறு 7 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை முதல் மாத வட்டியாக செலுத்தியுள்ளனர். பணம் செலுத்தியவர்களுக்கு குறிப்பிட்ட நாளில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், யாருக்குமே பணம் ஏற்றப்படவில்லையென கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த பொது மக்கள் அலுவலகத்தை சென்று கேட்டுள்ளனர். அதற்கு நிர்வாகம் சார்பில் முறையான பதில் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள், நிறுவன உரிமையாளரிடம் தொடர்பு கொண்டுள்ளனர், அங்கிருந்து எந்த பதிலும் கிடைக்காததால், ஊழியர்கள் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்ததில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்மல்குமார் (45)என்பவரும் இவர் ஏற்கனவே பல்வேறு இடங்களில் இதே போன்று நிறுவனங்கள் தொடங்கி மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொது மக்கள் தங்களது தங்களது பணத்தை மீட்டுத்தருமாறு அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.






