என் மலர்
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகேயுள்ள புழக்கடைப்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 34). இவரது மனைவி சாந்தி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த சிறுமி வீட்டின் அருகில் உள்ள தைலக்காட்டிற்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து சிவக்குமார் சென்று, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறினார்.
இதைத் தொடர்ந்து சிறுமியின் தாயார் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சிவக்குமாரை கைது செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வரை 6,452 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5,322 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,026 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 104 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 108 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,560-ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வரை 6,350 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5,204 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,043 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 103 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 105 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,455-ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை டவுன் காமராஜபுரம் 5-ம் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 48). அதே பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வரும் இவர் தமிழர் கழகம் என்ற அமைப்பின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் மணிகண்டன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில் ஆகஸ்டு 15-ந்தேதி கொண்டாடப்படும் சுதந்திர தினம் குறித்து தவறான தகவல்களையும், பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும் வகையிலும் கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.
அதன் அடிப்படையிலும் இந்திய தேசியக்கொடியை அவமதிக்கும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பிறரை தூண்டும் வகையிலும் தகவல்களை பதிவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீஸ் நிலையத்தில் காமராஜ் என்பவர் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் விசாரணை நடத்தி, தேசியக்கொடியை அவமதித்து முக நூலில் கருத்து பதிவிட்ட மணிகண்டன் மீது, தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட மணிகண்டன் புதுக்கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. 5 மாதங்களுக்கு பிறகு தமிழக அரசு தளர்வுகள் அறிவித்து கோவில்களை திறக்க அனுமதி வழங்கியது.
அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் அனைத்து கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இதற்கிடையே கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பு வரை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.
பழனி தண்டாயுதபாணி கோவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்களில் 24 மணி நேர அன்னதானமும் நடைபெற்று வந்தது. இவை அனைத்தையும் கொரோனா ஊரடங்கு தகர்த்துவிட்டது. தற்போது கோவில்கள் திறக்கப்பட்ட போதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அன்னதான திட்டம் தொடங்குவதில் காலதாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் புதுக்கோட்டையில் உள்ள கோவிலில் பக்தர்களுக்கான அன்னதானம் பார்சலில் வழங்கப்படுகிறது. நகர் பகுதியில் உள்ள சாந்தநாத சுவாமி கோவில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைப்படி நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனாவுக்கு முன்பு இந்த கோவிலில் தினமும் 100-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பரவல் அச்சம் காரணமாக பக்தர்களை அமர வைத்து இலை போட்டு அன்னதானம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக கலவை சாதம் பொட்டலங்களாக தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. தயிர் சாதம், லெமன் சாதம், தக்காளி சாதம் மற்றும் அதனுடன் ஊறுகாய் பாக்கெட்டும் இணைத்து கொடுக்கப்படுகிறது.
இதற்காக கோவில் வளாகத்தில் உணவு தயார் செய்யும் ஊழியர்கள் மதிய அன்னதானமாக இதனை பார்சலில் கட்டி பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையாக நின்று வாங்கி செல்வதோடு, இதற்கான நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பணங்குளம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் செல்லையா (வயது 70). இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
செல்லையாவின் மகள் சாந்தி (43). மாற்றுத்திறனாளியாக இவர் சற்று மன நிலையும் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவருக்கு திருமணம் செய்து கொடுக்காமல் செல்லையா தன்னுடனேயே வைத்து பராமரித்து வந்தார்.
தந்தையும், மகளும் தனியாக வசித்து வந்த நிலையில் தங்களை பார்த்துக்கொள்ள உறவினர்கள் யாரும் முன் வரவில்லை என்ற விரக்தியிலும், வேதனையிலும் செல்லையா இருந்து வந்தார். மேலும் தனக்கும் வயதாகி விட்டதால் தான் இறந்த பின்னர் மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளி மகளை யார் பார்த்துக்கொள்வார் என்ற வேதனை அவரை மிகவும் கவலை அடையச் செய்தது.
இதனால் தனது மகளை கொன்று, தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்காக நேற்று இரவு சோற்றியில் குருணை மருந்தை கலந்ததோடு, ஆம் லெட்டிலும் விஷத்தை கலந்துகொடுத்தார். இதனை அறியாமல் சாப்பிட்ட செல்லையாவின் மகள் சாந்தி ஒரு சில விநாடிகளில் வயிற்று வலியால் துடித்தார்.
மகளின் வேதனையை பார்க்க முடியாமல் தவித்த செல்லையா தானும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டார். இதற்கிடையே சாந்தியின் அலறல் சத்தம் கேட்டு திரண்டு வந்த அக்கம் பக்கத்தினர் தந்தையும், மகளும் விஷம் குடித்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இருவரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வழியிலேயே இருவரும் பரிதாபமாக இறந்தனர். பின்னர் அவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பாக கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் தற்போது வரை மொத்தம் 6,167 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 4,860 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பிவிட்டனர். 1,206 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு 101 பேர் பலியாகி உள்ளனர்.
இதற்கிடையே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட 3 நோயாளிகள் கடந்த 22-ந்தேதி 20 நிமிடத்திற்குள் அடுத்தடுத்து இறந்து போனார்கள். 70 வயதுடைய 2 முதியவர்கள் மற்றும் 75 வயது மூதாட்டி ஒருவர் இந்த சம்பவத்தில் இறந்தனர்.
இதில் கடந்த 21-ந்தேதி 2 முதியவர்களும், அதற்கு முந்தய நாள் அந்த மூதாட்டியும் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
3 பேர் அடுத்தடுத்து இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவர்களுக்கு முறையாக செயற்கை சுவாசம் அளிக்கப்படவில்லை. ஆகையினால் இறப்பு நிகழ்ந்தது என குற்றஞ்சாட்டினர். இந்த தகவல் மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவத்தில் மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு மருத்துவ கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 3 வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அன்றைய தினம் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரியில் பணியில் இருந்த டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மயக்க மருந்தியல் துறை தலைவரிடம் நடந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகம் விளக்க கடிதம் கேட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சீனியர் டாக்டர் ஒருவர் கூறும்போது, இறந்த 3 பேருக்கு சிறுநீரகக்கோளாறு இருந்தது. அவர்களின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது என கூறினார். கல்லூரி டீன் டாக்டர் பூவதி தெரிவிக்கையில், 3 பேரும் இணை நோய்கள் இருந்ததால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக கூறினார்.
புதுக்கோட்டை காந்தி நகரை சேர்ந்தவர் அருண் (வயது 26). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அரியலூரை சேர்ந்த பிரியா என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பிரியா ஒரத்தநாட்டில் உள்ள கல்லூரியில் படித்து வந்ததால் இருவரும் சந்தித்து பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இதையறிந்த பிரியாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவருக்கும் வேறு ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
இதுபற்றி தனது காதலன் அருணை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை பிரியா தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அருண், தனது நண்பருடன் அரியலூர் சென்று பிரியாவை புதுக்கோட்டைக்கு அழைத்து வந்தார். பின்னர் திருவரங்குளம் கோவிலில் வைத்து இருவரும் கடந்த 29-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இந்தநிலையில் அருண் பெற்றோரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரியாவின் உறவினர்கள் கடந்த 30-ந்தேதி வந்தனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. நேற்று பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கார்களில் அருண் வீட்டிற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் பிரியாவை பெற்றோர் மற்றும் உறவினர்கள் காரில் கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அருண், புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணனிடம் புகார் செய்தார். அதில் தனது காதல் மனைவியை அவரது பெற்றோர் கடத்தி சென்று விட்டனர். எனவே பிரியாவை மீட்டு என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
எஸ்.பி. உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த மகளை பெற்றோரோ கடத்தி சென்ற சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள களபம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி கணேசன் மகள் ஹரிஷ்மா (வயது 17). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்றிருந்தார்.
படிப்பில் சிறந்த மாணவியாக இருந்த ஹரிஷ்மா டாக்டராக வேண்டும் என்ற நம்பிக்கையுடன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இதற்காக அவர் உரிய முறையில் விண்ணப்பித்தும் இருந்தார். சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்விற்கு இவருடன் விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு ஹால்டிக்கெட் வந்துள்ளது. ஆனால் ஹரிஷ்மாவிற்கு வரவில்லை. இதனை தனது தாயிடம் சொல்லி புலம்பி உள்ளார்.
தாயார் ஆறுதல் கூறியும் ஏற்க மறுத்த ஹரிஷ்மா மன உளைச்சலில் இருந்து வந்தார். நேற்று வீட்டில் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நிலையில் தனியாக இருந்த ஹரிஷ்மா வயலுக்கு தெளிக்க தந்தை வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.
அக்கம் பக்கத்தினர் ஹரிஷ்மாவை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
ஆலங்குடி போலீசில் மாணவியின் தந்தை கணே சன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி நீட் தேர்வில் தோல்வியடைந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அதன் பிறகு தமிழகத்தில் பல மாணவிகள் நீட் தேர்வு தோல்வி மற்றும் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துள்ளனர். அந்த வகையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வராததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வால் தமிழகத்தில் பலியாகும் உயிர்ப் பலி அதிகரித்து வருகிறது.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 6 ஆயிரத்து 934 காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதில் நாள்தோறும் 3 ஆயிரத்து 900 முதல் 4 ஆயிரம் நபர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் கொரோனா அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் நோய்த் தொற்று உடையவர்களை கண்டறிந்து மற்றவர்களுக்கு நோய்த்தொற்று பரவாமல் உடனடி சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நோய் அறிகுறியுடன் காலம் தாழ்த்தி வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமே மருத்துவர்களுக்கு சவாலாக உள்ளது.
காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் சுயமாக மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் தங்கள் பகுதியில் நடைபெறும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் குறித்து முன்னதாகவே நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப் படுத்துவதற்கு முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது மிக அவசியமான ஒன்றாகும். அதே போன்று கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கூறும் வழிமுறைகளை பொதுமக்கள் தவறாது பின்பற்றி நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருக்கானூர்பட்டி தாழம்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 50). அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (40). இருவரும் சென்டிரிங் தொழிலாளிகள்.
இந்த நிலையில் மாரிமுத்துவும், ரமேசும் புதுக்கோட்டையில் பாலன்நகர் பகுதி யில் சென்டரிங் வேலையை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண் டிருந்தனர்.
அப்போது ஆதனக் கோட்டை அருகே டீசல் போடுவதற்காக பட்டுக் கோட்டையை சேர்ந்த அருள் ராஜ் ஓட்டிவந்த லாரியை நிறுத்தி இருந்தார்.
இதை மாரிமுத்து கவனிக்காததால், நின்றிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மாரிமுத்து, ரமேஷ் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அழகம்மாள், மற்றும் ஆதனக்கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.






