என் மலர்
செய்திகள்

அமைச்சர் விஜயபாஸ்கர்
காய்ச்சல் அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்- அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தல்
காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் சுயமாக மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை:
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 6 ஆயிரத்து 934 காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதில் நாள்தோறும் 3 ஆயிரத்து 900 முதல் 4 ஆயிரம் நபர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் கொரோனா அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் நோய்த் தொற்று உடையவர்களை கண்டறிந்து மற்றவர்களுக்கு நோய்த்தொற்று பரவாமல் உடனடி சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நோய் அறிகுறியுடன் காலம் தாழ்த்தி வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமே மருத்துவர்களுக்கு சவாலாக உள்ளது.
காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் சுயமாக மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் தங்கள் பகுதியில் நடைபெறும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் குறித்து முன்னதாகவே நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப் படுத்துவதற்கு முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது மிக அவசியமான ஒன்றாகும். அதே போன்று கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கூறும் வழிமுறைகளை பொதுமக்கள் தவறாது பின்பற்றி நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story