என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.
    • கண்காணிப்பு அலுவலர் மேற்கொண்டார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகளில் இணையதளம் வாயிலாக 33,043 மனுக்களும், நேரடியாக 24,183 மனுக்களும் என மொத்தம் 57,226 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களில் பெயர் சேர்க்க 25,777 மனுக்களும், பெயர் நீக்க 23,180 மனுக்களும், திருத்தம் மேற்கொள்ள 8,269 மனுக்களும் பெறப்பட்டன.

    இம்மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், மனுக்களின் உண்மைத்தன்மை குறித்தும், வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் வள்ளலார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை சின்னப்பாநகர் முதலாம்வீதி, மாலையீடு சண்முகா நகர் மற்றும் வாகவாசல் கிராமம் ஆகிய இடங்களில் களஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பதிவு அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், தாசில்தார்கள், நகராட்சி ஆணையர்கள் ஆகியோர்களுடன், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), மாரி (பொறுப்பு) (இலுப்பூர்), மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், தேர்தல் தாசில்தார் கலைமணி, தாசில்தார்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்."

    • குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
    • 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    புதுக்கோட்டை

    கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சி ஊராட்சியை சேர்ந்த கோட்டைக்காடு கிராமம் உள்ளது. இங்குள்ள வடக்கு தெருவில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இதன்மூலம் அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வடக்கு தெருவிற்கு குடிநீர் செல்லும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் பதிக்கப்பட்டிருந்த குழாய்கள் 200 மீட்டர் நீளத்திற்கு நொறுங்கி சேதமாகி இருந்தன. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் தடைப்பட்டது.

    இதையடுத்து, குழாய்களை சீரமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் கோட்டைக்காட்டில் கறம்பக்குடி- ஆலங்குடி சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சேதமடைந்த குழாய்களை புதுப்பித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • இரு தரப்பினரிடையே மோதல்; 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டது
    • துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்கள்

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் மேற்கு பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷேக் மைதீன் மனைவி சவுதம்ம்மாள் பீவியின் (வயது 55) இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவா ல் இறந்தார்.இந்நிலையில் சவுதம்மாள் பிவீ இறுதிச்சடங்கு முடிந்த மறுநாள் உறவினர்கள் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 6

    பெண்கள் உட்பட 7 பேர் காயமடைந்தனர் இவர்கள் அனைவரும் அறந்தாங்கி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இங்கு இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வந்த புகாரின் பேரில் போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுக்கோட்டை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு மருத்துவமனையில் புறநோயளிகள் பிரிவு திறக்கப்பட்டது
    • அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு அரசு மருத்துவமனையில், புறநோயளிகள் பிரிவினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

    பின்னர் அமைச்சர் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

    தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு அரசு மருத்துவமனையில், புறநோயளிகள் பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டதை தொடர்ந்து புதுக்கோட்டை நகரில் இயங்கி வந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அறந்தாங்கிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதன்மூலம் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று வருவதில் கர்ப்பிணி பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் மிகவும் சிரமப்பட்டு வந்த சூழ்நிலையில், முதலமைச்சர் புதுக்கோட்டை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு அரசு மருத்துவமனையில், புறநோயளிகள் பிரிவு தொடங்கிட உத்தரவிட்டார். அதனடிப்படையில் டாக்டர; முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு அரசு மருத்துவமனையில், புறநோயளிகள் பிரிவிற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போர்க்கால அடிப்படையில் நிறைவு செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

    இதன்மூலம் பொதுமக்களுக்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்கவும், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுவரும் நேரமும் மிச்சமாகும்.

    எனவே பொதுமக்கள் அனைவரும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு அரசு மருத்துவமனையில், புறநோயளிகள் பிரிவின் சேவையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    • புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது ெசய்யப்பட்டனர்
    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அருகே உள்ள கீழ நெம்மக்கோட்டை பகுதியில் ஆலங்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காளிகோவில் தெருவை சேர்ந்த பெருமாள் ( வயது 55 ) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதை பார்த்த போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் ஆலங்குடி கேவிஎஸ் தெருவை சேர்ந்த சேசு மகன் யூஜின் (வயது 32 )என்பவர் தனது பெட்டி கடையில் புகையிலை பொட்டலம் வைத்து விற்பனை செய்ததற்காக போலீசார் அவரை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.பின்னர் அவர்கள் 2 பேரையும் ஆலங்குடி காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் சப் இன்ஸ்பெக்டர் நித்யா வழ க்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அறந்தாங்கி போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்
    • திருமணமான 4 மாதத்தில் விபரீதம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச் செல்வன் (வயது29) . இவர் கடந்த 2017ம்ஆண்டு முதல் கீரமங்களம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் வடகாடு பகுதியை சேர்ந்த அபீனா என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணமானது.

    இந்நிலையில் மனைவி அபினாவை கடந்த 4 நாட்களுக்கு முன்பு வடகாட்டில் உள்ள அவரது தாய் வீட்டில் விட்டுவிட்டு அரசர் குளம் வந்தார். சம்பவத்தன்று இரவு குடும்பத்தினர் மற்றும் மனைவியுடன் செல்போனில் பேசிவிட்டு தனது அறைக்கு தூங்க சென்றார். நேற்று காலை கணவரை செல்போனில் அபீனா தொடர்பு கொண்டார்.

    ஆனால், நீண்ட நேரமாகுயும் போனை எடுக்காததால், மாமனார் தியாகராஜனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் அறைக்கு சென்று பார்த்த போது தமிழ்செல்வன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனே மகனை மீட்டு அறந்தாங்கியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தமிழ்செல்வன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து நாகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 4 மாதத்தில் காவலர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அனுமதியின்றி மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்
    • தனிப்படை போலீசார் நடவடிக்கை

    புதுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி வடபாதியிலிருந்து சரக்கு லாரியில் மணல் கடத்துவதாக கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. அதன் பேரில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சட்ட விரோதமாக மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து வாகன ஓட்டுனரான நெய்வேலி வடபாதி கள்ளன் தெருவை சேர்ந்த பிரேம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

    • மின் சிக்கனம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் மின்சார சிக்கனத்தை வலியுறுத்தி முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை புதுக்கோட்டை செயற்பொறியாளர் அசோக்குமார் தொடங்கி வைத்தார். பேரணியில் மின்சாரம் சேமிப்பு, தேவையில்லாத இடத்தில் மின்சாரத்தை தவிர்த்து இயற்கையை பாதுகாப்பது, சூரிய ஒளியை பயன்படுத்துவது, மின்விரயம் தவிர்ப்பது, திறன்மிகு மின் உபகரணங்களை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேரணியில் கந்தர்வகோட்டை உதவி செயற் பொறியாளர்கள் வில்சன், வெங்கடேசன், மோகனசுந்தரம், சரவணகுமார் மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • தீக்குளித்த விவசாயி உயிரிழந்தார்
    • மனவிரக்தியில் இருந்ததாக தெரிகிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் தெற்கு பொன்னன் விடுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 48) விவசாயியான இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும் 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ரவிச்சந்திரன் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கினார். அதில் அவரது வலது கை பாதிப்பு அடைந்தது. இதனால் அவர் விரக்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடல் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்துவிட்டார். தகவல் அறிந்த மலையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • விராலிமலை தொகுதி மக்களுக்கு என் உயிரை கொடுத்து காப்பாற்றுவேன் என்று முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ெதரிவித்தார்.
    • கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை

    புதுக்கோட்டை:

    தமிழகம் முழுவதும் மின் கட்டணம், பால் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கினங்க நடைபெற்று வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தெற்கு மற்றும் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் விராலிமலை செக்போஸ்ட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், பொதுமக்கள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    அப்போது டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    மக்கள் நினைத்தால் ஆட்சியில் யாராக இருந்தாலும் தூக்கி வீசப்படுவார்கள். இரண்டு ஆண்டுகள் தி.மு.க. ஆட்சி முடிந்துவிட்டது. இன்னும் மக்கள் இரண்டு ஆண்டுகள் மட்டும் பல்லை கடித்துக்கொண்டு ஓட்டி விட்டால் மீண்டும் அ.தி.மு.க. தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும். மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்.

    அப்போது நிறுத்தப்பட்ட அம்மா மருந்தகம், தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்கள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். விராலிமலை தொகுதி யாரும் கண்டிராத அளவுக்கு வளர்ச்சி பெற்று உள்ளது. கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரையும் விராலிமலை தொகுதி மக்களுக்கு என் உயிரை கொடுத்து மக்களை காப்பாற்றுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் பழனியாண்டி, நாகராஜ், மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, கூட்டுறவு சங்க தலைவர் அய்யப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் மணிகண்டன் கல்குடி அய்யப்பன், சுப்பிரமணி, விராலிமலை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தீபன் சக்ரவர்த்தி உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



    • வாகன விபத்தில் ஒருவர் பலியானார்
    • பேருந்தை முந்த முயன்ற போது விபத்து

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் ,கந்தர்வக்குகோட்டை அருகே உள்ள குப்பையன் பட்டியைச் சேர்ந்தவர் மார்கண்டன் (வயது 51). இவர் தனது உறவினரான தாமரை–செல்வத்துடன் இருசக்கர வாகனத்தில் சோத்துப்பாளைக்கு சென்று விட்டு குப்பையன் பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இவருக்கு முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்திச் செல்லும் போது இருசக்கர வாகனம் பஸ் மீது மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட 2பேரும் உயிருக்கு போராடி–க்கொண்டிருந்தனர். இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் படுகாயமடைந்த மார்கண்டன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • கந்தர்வகோட்டையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடந்தது
    • தி.மு.க. அரசை கண்டித்து நடந்தது

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டையில் ஒன்றிய நகர அ.தி.மு.க. எடப்பாடி அணி சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் குமார், கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கார்த்திக் மழவராயர், முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட பிரதிநிதி கவிதா சிவா, ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துக்குமார், பெருமாள்இளங்கோவன், பன்னீர், நகரச் செயலாளர் செந்தில்குமார், பாசறை அருண் பிரசாத், ஜெ.பேரவை சக்திவேல், எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி செல்லத்துரை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ×